Friday, April 7, 2017

Maharishi messages April 7

*வேதாத்திரிய இரகசியங்கள் – ஏப்ரல் - 07*

*ஆசையே அலையாக*

வேதாத்திரியார் தொழில் அதிபராக 1000 தறிக் குடும்பங்களைத் தன் பராமரிப்பில் வைத்து கொண்டிருந்தபோது ஒவ்வொரு குடும்பத்திலும் அவ்வப்போது ஏற்படும் வாழ்க்கைச் சிக்கல்களைக் கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து வந்தார்.

அந்த வகையிலே ஒருநாள் வயதான நெசவாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். “நிறைவேறாத ஆசைகள் ஏதேனும் உள்ளதா?” என பெரியவரிடம் கேட்டார். நீண்ட நாட்களாக வாழைப்பழம் சாப்பிட வேண்டுமென்ற ஆசை நிறைவேறாமல் இருப்பதற்கான தம் வறுமை பற்றிக் கூறினார் பெரியவர். அடுத்த வாரம் ஒருசீப்பு வாழைப் பழங்களைக் கொண்டுபோய் பெரியவரிடம் கொடுத்துச் சாப்பிடும்படி கூறினார். அதற்கடுத்த வாரம் போய் அவரிடம் “வாழைப்பழம் சாப்பிடுகிற ஆசை நிறைவேறி விட்டதல்லவா? சந்தோஷம்தானே” என்று கேட்டார். “வாழைப்பழம் சாப்பிட்டேன். ஆனால் மறுநாளும் வாழைப்பழம் சாப்பிடவேண்டும்  என்ற ஆசையாயிருக்கிறது” என்றார். இதுவரை சாப்பிடமுடியாத வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவிட்டோம் என்ற திருப்தியும் மனநிறைவும் வராதவரை, இவரது எண்ணத்தை மாற்ற முடியாது.

இருப்பதைக் கொண்டும் கிடைத்ததைக் கொண்டும் நிறைவு பெறாத வரை, மனித மனதில் இன்னும் வேண்டும் மேலும் வேண்டும் என்றுதான் போய்க்கொண்டே இருக்கும் என்பது விளங்கியதால்தான் தற்சோதனைப் பயிற்சிகளில் எண்ணம் ஆராய்தலுக்கு அடுத்தபடியாக ஆசை சீரமைத்தல் பயிற்சியைப் பிற்காலத்தில் திட்டமாக்கினார்.

*_பொருள்புகழ் செல்வாக்கு_*
   *_இனக்கூட்டு பாலுறவு இவற்றினோடு_*
*_புலன்மயக்க இன்பங்களை_*
   *_மேன்மேலும் தனக்குரிய உடமையாகத்_*
*_திரள்வதும், இவையெல்லாம்பெற,_*
   *_காக்க போட்டியிட்டு உடல்உள்ளத்தைச்_*
*_சீறவிட்டுப் பேராசைமுதலான_*
   *_அறுகுணத்தைப் பெருக்கிக் கொண்டு_*
*_இருள்வழியே வாழ்வதுதான்_*
   *_வாழ்வுஎன எண்ணிநலம் குலைவோர்கட்கு_*
*_இனியதவம் அறம்இரண்டும்_*
   *_ஏற்றமுறும் வழிகள்என எடுத்துஓதி_*
*_அருள்வழியே திருப்புதற்கு_*
   *_அறிவறிந்தோர் முயலுங்கால் அப்பப்போ_*
*_அழுக்காற்றல் நலம்குலைப்போர்_*
   *_அறிவுபெற வாழ்த்துவது நமதுவாழ்வு._*

||<< வாழ்க வையகம் வாழ்க வளமுடன் >>||

_நாளைய இரகசியம்: உப்பில்லா உணவு_
____________________
*_சென்னை மாநகர் அறிவுத்திருக்கோயில் - CALM TRUST_*
www.fb.com/vethathiri.gnanam

No comments:

Post a Comment