Tuesday, April 2, 2024

MAHARISHI thought April 3

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!

வாழ்க்கை மலர்கள்....

ஏப்ரல்,03....

சினம் எழாத மனம் :

வாரம் ஒருமுறை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு மணி நேரத்தில் அகத்தாய்வு (Introspection) செய்து ஆராய வேண்டும்.  சினம் தோன்றும் காரணம், சினத்தின் தீமை, சினத்தை ஒழிக்க எடுத்த முயற்சி, அடைந்த வெற்றியின் அளவு, இனியும் எடுக்க வேண்டிய முயற்சிகள் என்ற முறையிலே ஆராய வேண்டும். மீண்டும் சங்கற்பம்,  மீண்டும் வாழ்த்து என்று முயற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  ஏன், ஒவ்வொரு கணமும் கூடத் தற்சோதனையாகவே இருக்க வேண்டும்.  "சென்ற கணம் நான் பேசியது சரியா? சென்ற கணத்தில் எனக்கு ஏற்பட்ட மனநிலை சரிதானா?", என்று ஒவ்வொரு கணமும் சோதனையாகவும் ஆராய்ச்சியாகவும் கழிய வேண்டும்.  தவத்தினால் ஏற்பட்டிருக்கும் மனத்தின் விழிப்பு நிலை இந்த வழியில் பெரிதும் துணையாக இருக்கும்.

இவ்வாறு செய்துவந்தால் ஓர் ஆறு மாதங்களுக்குள்ளாக சினம் அழிந்து பொறுமையின் திருவுருவாகவே திகழலாம்.  சினம் எழாத மனம் பிரகாசமாக இருக்கும்.  சினம் அகன்ற ஒருவரிடம் அவர் மனைவியும்,  மக்களும் மற்றவர்களும் எவ்வளவு இனிமையோடும் அன்போடும் பழகுகிறார்கள்.  அவர் குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதென்று கவனித்துப் பார்க்க வேண்டும்.  அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வெற்றிமேல் வெற்றியாக எல்லாத் துறைகளிலும் பிரகாசிப்பார்கள். 

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * 

கவலை சினம் ஒழிக்க வழி :

"சினம் கவலை என்னும் இரண்டும் மனிதர் வாழ்வைச்
சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்து கொள்வீர்
மன வலிவும் உடல் வலிவும் முயற்சி மற்றும்
மதி நுட்பம் ஆராய்ச்சி குலைந்து போகும்
தினம் சிறிது நேரம் இதற்கென ஒதுக்கி
சிந்தித்துச் சீர் திருத்த இவ்விரண்டு -
இனமும் இனி என்னிடத்து எழாமல் காப்பேன்
என்ற

Tuesday, January 9, 2024

maharishi thought (Jan 09,)

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!

வாழ்க்கை மலர்கள்....

ஜனவரி, 09....

குரு தானாக வருவார்:                                                             

நாம் அறிவு வளர்ச்சி பெற்று சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கின்றவரையிலே இந்த ஐந்து புலன்களிலேயே இயங்கி நாம் எதைப் பார்க்கின்றோமோ அதனுடைய பதிவு அதிலே ஏற்படக்கூடிய இன்ப துன்ப விளைவுகள், அவற்றினுடைய பதிவுகள், அதை ஒட்டி எழும் செயல்கள், அந்தப் பதிவுகள் மீண்டும் மீண்டும், மேலும் மேலும், அந்த வினப்பதிவுகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆகையினால் அந்த மெய்ப்பொருளாக உள்ள ஆதி நிலையானது அறிவுக்குப் பிடிபடவில்லை. நாம் எங்கேயிருந்து வந்தோம், எதற்காகப் பிறந்திருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்பது நினைவுக்கே வரவில்லை. சூதாட்டத்தில் இறங்கி விட்ட ஒருவனுக்கு, அந்த மயக்கத்திலே செயல்பட்டுக்கொண்டு இருக்கக் கூடிய ஒருவனுக்கு, எப்படிக் குடும்பத்தைப் பற்றியோ லாப நஷ்டத்தைப் பற்றியோ எண்ணம் வராதோ, அதுபோல் இந்த இன்ப துன்பம் என்ற ஒரு சூதாட்டத்தில் நம்மைப் பற்றிய நினைப்பே எழுவதில்லை.

இந்த இடத்திலே தான் குருவினுடைய பார்வை, குருவினுடைய நினைவு, குருவினுடைய சொல் ஒரு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது. இங்கே ஒரு கேள்வி? குரு என்றால் யார்? குரு என்றால் அவர் தன்னை அறிந்தவர். அவருடைய உதவி இவனுக்குக் கிடைப்பதற்கு இங்கே அவன் ஒரு நிமிடமாகிலும் சிந்தித்திருக்க வேண்டும்; தேடி இருக்க வேண்டும்." நான் பிறந்து வந்துள்ளேனே, என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே, தெரிந்து கொள்ள வேண்டும், " என்று இவனாக நினைத்திருந்தாலும் சரி, அல்லது இவனுடைய பெற்றோர்கள் நினைத்து இருந்தாலும் சரி, அந்த எண்ணம் நிறைவேறாமல் தொடர்ந்து வந்து இருந்தாலும் சரி, அது கட்டாயம் அதற்குரிய ஒரு குருவைத் தேடிக்கொடுத்து விடும். வழியிலே இருந்து வந்த ஒரு உருவத்தைக் குரு என்று

Monday, January 8, 2024

maharishi thought (Jan 07)

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!

வாழ்க்கை மலர்கள்....
                                                                            ஜனவரி, 07....

எண்ணத்தின் ஆற்றல்:

ஒருவர் ஒரு திருவிழாவுக்குப் போக வேண்டுமென்று எண்ணுகிறார். அந்த எண்ணத்தில் ஒரு ஊர், அங்கு போகும் செயல், அங்கு காண விழையும் காட்சிகள், அனைத்தும் அகக்காட்சியாகின்றன. இவ்வாறு புறமனத்தால் ஒரு எண்ணம் உருவாகும் போது அதற்கு வேண்டிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய எழுச்சிகள், உயிராற்றலின் இயக்க அலைகள் மூலம் ஏற்படுகின்றன. உயிராற்றலை மூளையின் சிற்றறைகளில் எத்தனை கோடி இணைந்து அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாக மாற்ற முடியுமோ அத்தனையும் இணைந்து இயங்கியே ஒரு எண்ணத்தில் அக்காட்சி உருவாகின்றது.

இவ்வாறு மூளையில் ஏற்படும் பதிவுகளும் பிரதிபலிப்புகளும் 'நடுமனமாகும்'. மேலும் இந்தப் பதிவுகள் வித்தணுக்களில் தரப் (மரபுப்) பதிவாக (Heriditary quality) பதிவு பெறுகின்றது இதுவே 'அடிமனமாகும்'. இந்த இயக்கத்தின் தொடராக உடலின் உயிராற்றல் அதிர்வு அலை இயக்கம் வேறுபட்டு உடல் முழுவதும் உள்ள அணு அடுக்குகளில் பதிவுகள் உண்டாகின்றன. அது மட்டுமல்ல ஒருவர் ஓர் எண்ணம் எண்ணினால் அது பிரபஞ்ச சமஷ்டி உயிரோடு தொடர்பு கொண்டு எண்ணிறந்த மக்கள் மூளையிலும் பதிவாகின்றதோடு பிரபஞ்ச உயிரில் (universal soul) நிரந்தரப் பதிவாகவும் ஆகிவிடுகின்றது. 

இவ்வாறு ஓரு தடவை ஒருவர் எண்ணும் எண்ணத்தால் ஏற்படும் உடல், மூளை, தன்னுயிர், பிற உயிர், சமஷ்டி உயிர் பதிவுகள் திரும்பத் திரும்பப் பிரதிபலிப்பாகும் போது எண்ணம் தோன்றிய இடத்திலேயே அதிக ஆழமாகச் செயலாவது இயல்பு. சமுதாயத்தைப் பற்றியோ தனிப்பட்ட பிறரைப் பற்றியோ எண்ணும் எண்ணங்கள் உரியவரிடம் அதிக அழுத்தமாக திரும்பத் திரும்பப் பிரதிபலிக்கும்.

பல தடவை திருவிழாவிற்குப் போக வேண்டுமென்ற எண்ணம் பிரதிபலிக்கும்போது எண்ணத்திற்குச் செயலாற்றவல்ல போதிய வலுவு ஏற்பட்டுவிடும். இந்த எண்ணத்தால் ஏற்பட்ட உயிராற்றல் விரைவு அதிர்வு அலைகள் உடல் கருவிகளையெல்லாம் ஊக்கி எண்ணத்தைச் செயலாற்றத் தயார் நிலையை ஏற்படுத்திவிடும். பிறகு திருவிழாவிற்குப் போய் பார்த்துக் களிக்கும் செயல் மலர்கின்றது. அதனால் இன்ப துன்ப அனுபவங்கள் பதிவாகின்றன. 

இவ்வாறு செயலாகப் பதித்த எண்ணமும் செயலும் தேவையாக, பழக்கமாக, சூழ்நிலைக் கவர்ச்சியாக மாறி, அடிக்கடி மனிதனைச் செயல்படுத்துகின்றன. இந்த விளக்கத்தைக் கொண்டு ஒரு எண்ணம் எவ்வாறு பதிவு, பிரதிபலிப்பு, செயலாற்றல், இன்ப துன்ப விளைவுகள் என்ற நான்காக மாற்றம் பெறுகிறது என்பதை நன்குணரலாம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி  வேதாத்திரி மகரிஷி

*****************************

எண்ணம் :-

"எண்ணமே ஒரு நாடக மன்றம் போல்
எண்ணமே அதில் எண்ணற்ற நடிகர்கள்.
எண்ணமே அதைப் பார்ப்போர் ரசிப்போராம்
எண்ணமே தான நிர்வாகி உடையவன்."

எண்ணத்தின் வலிமை :-
"எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்,
எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் அமைந்திடல்."

எண்ணம் பிறக்குமிடம் :-
"எண்ணத்தின் சக்தி இயல்பு அறிந்திடில்
எண்ணம் பிறக்கும் இடமும் விளங்கும்."

நன்மையே நோக்கு :-
"எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும்
நன்மையே விளைவிக்க நாட்டமா யிரு."

"அகநோக்குப் பயிற்சி தேவை (Simplified Kundalini Yoga) " -

-------------------------------------------------------------

எண்ணம் சீர்பட தற்சோதனை (Introspection) :-
"அறிவு தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்
அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி
அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்
அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள
அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;
ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற
அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை
அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்."

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Friday, January 5, 2024

MAHARISHI thought (Jan 06)

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!!

வாழ்க்கை மலர்கள்....

ஜனவரி,06....

உள்ளத்தின் சோதனை:

"மனதின் நிலையே வாழ்வின் வளம் ஆகும்.  நிலத்தில் ஊன்றும் வித்து எதுவென்றாலும் நீர் தெளித்து வந்தால் அது முளைத்து பயிராகி அதனதன் தன்மைக்கேற்ற பயன் தருகின்றது. அது போன்றே உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்களும் நாளுக்கு நாள் உறுதி பெற்று வாழ்வின் பயனாக விளைந்துவிடும். ஆகவே நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்தவிதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஊன்றவோ வளரவிடவோ கூடாது.

கோபம், வஞ்சம், பொறாமை, வெறுப்புணர்ச்சி, பேராசை, ஒழுக்கம் மீறிய காம நோக்கம், தற்பெருமை, அவமதிப்பு, அவசியமற்ற பயம், அதிகார போதை, என்ற பத்து வகையும் நமது உள்ளத்தில் நிறைபெற வொட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து களைந்து கொண்டே இருக்க வேண்டும்.

இவை வளர்ந்தால் நல்லெண்ணம் வருவதற்கோ நிலைப்பதற்கோ இடமில்லாத துன்பம் தரும் காடாக நமது உள்ளம் மாறிவிடும். உடல் காந்த சக்தியைப் பாழாக்கிக் கொண்டே இருக்கும் ஓட்டைகளாக இக் கெட்ட குணங்கள் மாறிவிடும்.

காலையிலும் மாலையிலும் 10 நிமிட நேரம் அமைதியாக உட்கார்ந்து உள்ளத்தை சோதனையிடும் பணியைத் தொடங்குங்கள். 30 நாட்களில் கிடைக்கும் வெற்றியை அனுபவத்தில் கண்டு மகிழுங்கள்".

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

************************************************

"முட்டைக்குள் அமைந்த கரு உடலாலும் உயிராலும் வளர்ச்சி பெற்றால்
மூடிய ஓடுடைந்துவிடும் குஞ்சு வெளிஉலகைக் கண்டின்பம் துய்க்கும்
திட்டமிட்டு அறம் ஆற்றித் தூய்மை அறிவில் உடலில் பெற்றுவிட்டால்
தீரும்வினை புலன்மயக்கம் தாண்டிடலாம் தீய வினைப்பதிவு எல்லாம்
விட்டுவிடும் விளைவாக வீடுபேறெனும் அறிவையறிதல் கிட்டும் 
வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது
தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்கு

MAHARISHI thought (Dec08)

*வாழ்க்கை மலர்கள்: டிசம்பர் 8*

*ஆன்மீகப் பயிற்சியின் பயன்*

நாமே முதலில் ஆன்மீகப் பயிற்சியில் விளையும் நன்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிறர் வினாவுக்குத் தெளிவான பதிலளித்து மனநிறைவு பெறலாம். திருப்தியான பதிலை அனுபவபூர்வமாக, அறிவின் தெளிவோடு அளிக்க முடியவில்லையெனில் நமக்கே சோர்வு உண்டாகிவிடும். இத்தகைய சோர்வினால் முயற்சியைக் கைவிட்டு விடுபவர்கள் பலர். இந்தக் குழப்பமும் நட்டமும் ஏற்படாதிருக்கவும் கேள்வி கேட்போருக்கு மனத்தெளிவோடும் உறுதியோடும் பதில் சொல்லவும் இங்கு ஆன்மீகப் பயிற்சியின் நல்விளைவுகளை விளக்கிக் கூறுகிறேன்.

1. முறையான உடற்பயிற்சியினால் நோய் வராமல் காத்துக் கொள்ளுகிறோம். உள்ள நோய்களும் காலத்தால் குணமாகின்றன. குறைந்த பட்சம் நோயின் கொடுமை குறைகிறது.

2. மனிதனின் உடலை விட முக்கியமான பொருள் உயிர். அது விஞ்ஞானக் கருவிக்கும் எட்டாதது. அவ்வளவு நுண்மையானது. அந்த உயிரை உணர்வாகப் பெறுகிறோம். தீட்சையின் முதல் நாளன்றே உயிர்மேல் மனம் வைத்து ஒன்றி ஒன்றிப் பழகி வர அறிவு நுண்மையும், கூர்மையும் பெறுகிறது. பயிற்சியால், அறிவு பெறும் உறுதி, நுட்பம், ஆற்றல் இவை வாழ்க்கைத் துறைகள் அனைத்திலும் வெற்றியடைச் செய்கிறது.

3. அகத்தாய்வுப் பயிற்சியினால் எண்ணத்தின் தன்மையும் தன் முனைப்பால் அறிவு திசை மாறி பேராசை, சினம், கடும்பற்று, வஞ்சம், முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை ஆகிய ஆறு குணங்களாக அவ்வப்போது மாறுவதும் அந்த உணர்ச்சி வயப்பட்ட குணங்களின் வழியே செயல்புரிய அவற்றால் தனக்கும் பிறர்க்கும் ஏற்படும் தீய விளைவுகளைக் கண்டுபிடிக்கவும் முடிகிறது. அடுத்துப் பயிலும் ஆசைச் சீரமைப்பு, சினம் தவிர்த்தல், கவலையொழித்தல் ஆகிய பயிற்சிகள் முறையாகப் பழகும்போது மனிதன் மனிதத் தன்மையோடு அமைதியும், இன்பமும் காத்து வாழ முடிகிறது.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*

MAHARISHI thought (Dec 07)

*வாழ்க்கை மலர்கள்: டிசம்பர் 7*

*அமைதி அடைவோம்*

இது வரையிலும் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து வாழ்ந்தவன், இப்படி ரசிக்கக் கூடியவனும், எண்ணக் கூடியவனுமான என்னை ஆக்கியவன் யார் என்று தன்னையே திரும்பிப் பார்க்கிறான் பாருங்கள், இதுதான் ஆறாவது அறிவு. அறிவையே அறிந்து கொள்ளக்கூடிய அறிவின் உயர்நிலை ஆறாவது அறிவு.

கடலில் இருந்த தண்ணீர் தான் மேகமாகி மழையாகப் பொழிகிறது. அருவியாக, ஆறாக ஓடும் தண்ணீர் மீண்டும் எங்கே சேர்கிறது? கடலில் தானே? குளமாக, ஏரியாக அந்த நீரைத் தேக்கி வைத்தாலும் புடைத்துக் கொண்டே இருக்கும் அது. கரை உடைந்தால் தன் மூலமான கடலை நோக்கியே விரைந்தோடும். கடலை அடையும்வரை அதற்கு ஓய்வு, அமைதி இல்லை.

இதுபோன்றே, மெய்ப்பொருளே [பிரம்மமே] அணுவாகி, பஞ்சபூதமாகி, ஜீவனாகி, மனிதனாகி இருக்கிறது. அவையெல்லாமே இடைநிலை தான். இனி மனிதன் ஆறாவது அறிவு மேலோங்கப் பெற்று அவன் தன்னிலையை, தான் பிரம்மம் என்ற நிலையை அடைந்தாக வேண்டும். அதுவரை மனிதனுக்கு அமைதி கிட்டாது. எதை அடைய வேண்டுமோ அதை அடையாதவரை வேறெது கிட்டினும் மனக்குறை மனிதன் உள்ளத்தில் தலையெடுத்துக் கொண்டே தான் இருக்கும். அடைய வேண்டியதை அடைந்து அமைதி பெறுவோம்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*

MAHARISHI question answer (15.12.23)

15-12-2023

*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*

❓ *கேள்வி: ஐயா, எண்ண அலைகளைப் பரப்பி நன்மை செய்விக்க முடியும் என்று கூறுகிறீர்கள். தங்களால் மழை பெய்ய வைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா? இயற்கை ஆற்றலின் நியதியை மீறி எதுவும் நம்மால் செய்ய முடியாது என்பது தங்களின் பதிலானால் மனித மனம் முயற்சி செய்வது எல்லாம் இயற்கையை எதிர்த்து தானே? தாங்கள் மனதைப் பற்றி கூறும் அறிவுரைகளும் இயற்கையை எதிர்த்துச் சென்று மனதை நிலை நிறுத்துவது தானே? விளக்க வேண்டுகிறேன்?*

✅ *பதில்:* அகத்தவத்தால் மனவலிவு ஏற்பட்டு பல காரியங்களை சாதிக்க முடியுமென்றால் நீங்கள் உங்கள் மனோவலிமையால் மழை பெய்விக்க முடியுமா? என்று சவால் விட்டிருக்கிறீர்கள். இயற்கையை, மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் பஞ்சபூதங்களையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டுப்படுத்த முடியும். அந்த சாதனை அவர்கள் கருணையுள்ளத்திலே தோய்ந்து இயல்பாக இருக்கின்றது. ஆனால் ஒரு அன்பரின் சவாலுக்கு பதில் போன்று அம்மாபெருங்காரியத்தில் அத்தகையவர்கள் இறங்குவார்களா? என்பதை ஒருவர் மிக நுணுகி நின்றே அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் சவாலில் வெற்றி பெற்று சிறு புகழ் தேடிக் கொள்வதில் அத்தகையவர்கள், அவ்வளவு கீழ் இறங்கிவிடமாட்டார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

மனவளக்கலையில் தேர்ந்த அன்பர் ஒர் இடத்தில் மழை பெய்விக்கச் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அப்போது என்ன சொல்வீர்கள். இது இயற்கையாக தற்செயலாக மழை பெய்தது. நீங்கள் பெய்வித்ததாக எவ்வாறு நம்புவது? என்று தான் சொல்வீர்கள்.

என்னைப் பொறுத்தவரை மழை பொழிவதன் காரணமும், பொய்ப்பதின் காரணமும் அறிவேன். மனிதர்களின் மனோநிலைக்கும், இயற்கையின் இயல்புக்கும் உள்ள தொடர் நிகழ்ச்சிகளில் மழை பொய்த்துப்போவதும் ஒன்று. இயற்கை ஆற்றலானது எல்லாம் வல்ல ஒரு பேரியக்க நியதி. இவ்வாற்றலை காலம், தூரம், பருமன், விரைவு எனும் நான்கு கணக்கீடுகளைக் கொண்டு மனித மனத்தால் அறுதியிட்டுக் கூற முடியாது.

இயற்கையின் ஆற்றலும் அதன் ஒழுங்கமைப்பும் அவ்வப்போது ஆங்காங்கு அமையும் சூழ்நிலைக்கேற்ப எண்ண ஆற்றல் அதிர்வலைகளாகவே நிகழ்கின்றது. மனித மனத்தின் எண்ண ஆற்றலுக்கு ஒரு வரம்பு உண்டு. உணர்வு, இச்சை, துணிவு, உணர்ச்சி வயம், விடாமுயற்சி என்ற மனநிலைகளில் அழுத்தத்திற்கும் விரைவிற்கும் ஏற்ப இயற்கையாற்றலின் ஒரு சிறு பகுதியை காலம், தூரம், விரைவு, பருமன், தூரம் என்ற ஒரு எல்லைக்குள் தனது விருப்பம் போல் பயனாக்கிக் கொள்ள முடியும்.

ஆனால் தனது விருப்பம் போல் அவ்வப்போதைய இயற்கை நிகழ்ச்சிகள், ஆற்றலை கணக்கிட முடியாமலும், தப்புக் கணக்கு போடுவதிலும் மனித எண்ணம் தோல்வியுறுகின்றது. உதாரணம்: மரம் ஒரு இயற்கையாற்றலின் பகுதி நிகழ்ச்சி. அதனை அதன் தன்மையை, அதன் ஆற்றலை உணரும் அளவில் மனிதன் பயனாக்கிக் கொள்கிறான். ஆனால் கையை மூடிக் கொண்டு மரம் மீது ஓங்கி ஒரு குத்து விட்டால் என்ன ஆகும்? கைவலி அல்லது சிறுகாயம் உண்டாகலாம்.

இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்கு பகையாகிப் பொதுவான சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொருவரும் பிறருக்கு துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவதும் அதற்கு துணிந்து செயல் புரிவதும் பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே என்று முன்னரும் விளக்கியிருக்கிறேன். அதன் விளைவு என்னவாகும்? மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பெருகும். இயற்கைச் சீற்றம், போர், மழையின்மை இவ்வாறாக இயற்கை ஆற்றலும், மனித ஆற்றலும் கூடி மனித எண்ண ஆற்றலால் தீய விளைவுகளாகின்றன.

மனிதன், மனிதன் மதிப்பை உணர்ந்தும் பிறருக்குத் துன்பமளிக்காமல் இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று மனதார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டும் வாழ்ந்தால் கால மழை ஒத்த அளவில் உலகில் பெய்யும். போர், வறுமை, பஞ்சம் இவையின்றி மக்கள் செழிப்போடு வாழ்வார்கள்.

நாம் இப்போது காணும் இப்பஞ்ச நிலைமையில் மழையில்லா வறட்சி நிலையில் மக்கள் அனைவரும் கூடி மனித இனம் அடையும் துன்பங்களை நினைத்து, கருணை உள்ளத்தோடு எல்லோரும் வளவாழ்வு பெற மழை பொழிய வேண்டும், என அழுத்தமாக நினைத்தால் கட்டாயம் மழை பொழியும். ஒரு மனிதன் மட்டும் அவன் எண்ண ஆற்றலைப் பரப்பி மழை பொழியச் செய்ய நினைத்தால், செய்தால் அது இயற்கை ஆற்றலின் நியதிக்கே முரண்பாடாக அமையும். உதாரணமாக ஒரு மனிதன் உணவு செரியாமை, பேதி என்னும் நிலையில் மருத்துவரிடம் சென்று மருந்து பெற்று உண்கிறான். அம்மருந்து சரியாக பலன் தரவேண்டுமெனில் நோயாளி உணவில் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும். அதன்படி மருந்தை உண்டுவிட்டு மேலும் உணவை மிகுதியாகவே உண்டால் என்ன விளையும், நோய் போகாது மிகுந்தும் போகலாம். இதனால் மருத்துவருக்கு வலுவில்லை என்று கொள்ளமுடியாது. அது போதிய பலன் விளைக்கத் தக்கதும் ஒத்ததுமான சூழ்நிலைகள் அமையவில்லை என்று தான் பொருள்.

மழையை பெய்விக்கும் ஆற்றல் மனித எண்ண ஆற்றலில் உண்டு. அந்த உயர்வில் மனவளம் பெற்றவர்கள் அதனை சித்தாகவோ, சில மக்களிடம் ஒரு புகழ் விரும்பியோ பயன்படுத்தும் அளவிற்கு கீழே இறங்கிவிட மாட்டார்கள். மனிதனிடம் அறிவை உயர்த்தி அவன் ஆற்றலும் அற உணர்வும் மேலோங்கச் செய்வதால் தனிமனிதனும், சமுதாயமும் நிரந்தரமாகப் பல வளங்களையும் பெற்று வாழும், இயற்கை ஒழுங்கமைப்பை ஒட்டி மனவளம் பெற்றோர் அந்தத்துறையில் இன்று உலகுக்குத் தொண்டாற்றி வருகிறார்கள். அவர்கள் கருணையின் ஊற்று மிகும் போது மழையும் பெய்யலாம்.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை