Saturday, December 31, 2016

உண்மையான மகிழ்ச்சியே நிம்மதி 🎀

🎀 உண்மையான மகிழ்ச்சியே நிம்மதி 🎀

🎷 ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான்.

பணத்தினால் பெறக்கூடிய எல்லா சுக-சவுகரியங்களும் அவனுக்கு இருந்தும் மகிழ்ச்சியின்றி இருந்தான்.

நிம்மதியையும் சந்தோஷத்தையும் தேடி, ஒரு ஞானியிடம் வந்தான்.

அவரிடம் தன் குறையைச் சொன்னான்.

“ஏராளமான செல்வம் படைத்த நீங்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம்; எங்கு வேண்டுமானாலும் போகலாம். அப்படியிருக்க என்ன பிரச்னை?” என்று ஞானி கேட்டார்.

“எனக்கு, உடனடியாக மகிழ்ச்சி தேவை. அதை வாங்க முடியுமா?” என்றான் செல்வந்தன்.

ஞானி அவனை, கால்பந்து விளையாட்டு பார்க்க அழைத்துச் சென்றார்.

மைதானத்தை அடைந்து பந்தயத்தைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

இரு அணிகளும் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தனர்.

ஞானி, “எவ்வளவு நன்றாக விளையாடுகிறார்கள்....!!!

ஒருவருக்கொருவர் சளைக்காமல் வெற்றி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு விளையாடுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது” என்றார்.

ஆனால், பணக்காரன் கண்களிலோ பந்து உதைபட்டு இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுவதுதான் விழுந்தது.

அவன் ஞானியிடம் சொன்னான்: “இந்தப் பந்தைப் போன்றது தான் என் நிலையும்…

வருமான வரிக்காரர்கள், தொழிலாளிகள், பிள்ளைகள் என்று நாலா பக்கமும் இடிதான்....!!!”

“சரி, இதுவேண்டாம் வேறு இடத்துக்குப் போகலாம்” என்று ஞானி ஒரு சங்கீத கச்சேரிக்கு அவனை அழைத்துபோனார்.

அங்கு ஒரு புல்லாங்குழல் வித்துவான் ஆனந்தமாக இசை மழை பொழிந்து கொண்டிருந்தார்.

அவர்கள் அமைதியாக இசையை ரசித்து மகிழ்ந்தனர்.

மேடையின் பின்னணியில் கிருஷ்ண பகவானின் குழலூதும் விக்ரகம் ஒன்றும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வழியில் ஞானி கேட்டார்: “பந்துக்கும் குழலுக்கும் என்ன வேற்றுமை...???”

“இதென்ன கேள்வி...??? ஒன்று இசைக்கருவி, மற்றொன்று விளையாட்டுச் சாதனம்....!!!” என்றான் தனவான்.

ஞானி விளக்கினார்: “இவை இரண்டுக்கும் தேவைப்படுவது காற்று.

பந்து, தான் வாங்கிய காற்றைத் தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது. அதனால்தான் அது உதைபடுகிறது.

புல்லாங்குழல், உள்வாங்கிய காற்றை தகுந்த இடத்தில், தக்க அளவில் வெளியே விட்டுவிடுகிறது.

அதனால், அற்புதமான இசை உருவாகிறது.

மேலும் இறைவனின் கைகளில் தவழும் பாக்கியமும் அதற்கு கிடைக்கிறது.

இப்போது புரிகிறதா...????” என்று கேட்டார் ஞானி.

பணத்தைத் தன்னிடமே வைத்துக்கொள்வதால் நிறைவு கிடைக்காது.

அதைப் பாத்திரமறிந்து, தேவையறிந்து வினியோகிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி, நிம்மதி கிடைக்கும் என்று தெளிவடைந்தான் செல்வந்தன

Friday, December 30, 2016

நீங்கள் மகத்தானவர்

1."நீங்கள் மகத்தானவர்" என்பதைத்தான் இந்த பிரபஞ்சம் நம்பிக் கொண்டிருக்கிறது.

2."நீங்கள் அன்பானவர்" என்பதால்தான்
முன்பின் தெரியாத ஒரு குழந்தை கூட உங்களை கண்டவுடன் சிரிக்கிறது.

3."நீங்கள் நம்பிக்கை மிகுந்தவர்" என்பதால்தான் மீண்டும் மூச்சை வெளிவிடுவீர்கள் என்று
சுவாசித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

4."நீங்கள்  வலிமையானவர்" என்பதால்தான்
பல இன்னல்கள் தரப்பட்டு உங்கள் திறமை பாராட்டப்படுகிறது.

5."நீங்கள் புனிதமானவர்" என்பதால்தான் உங்கள் பயணமும் மற்றவர்களின் பயணமும் பல போக்குவரத்து பயணங்களில் ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறது.

6."நீங்கள் சாதனைச் செய்ய பிறந்தவர்"         என்பதால்தான் ஒவ்வொரு விடியலும் வாய்ப்பை வழங்கி வருகிறது.

7."நீங்கள் சுறுசுறுப்பானவர்"
     என்பதால்தான் பசி ஏற்பட்டுக்
      கொண்டே இருக்கிறது.

8."நீங்கள் பாசமானவர்"என்பதால்தான்,
    உறவினர்களின் அழைப்பிதழ்கள்   தேடிப்பிடித்து உங்கள் இல்லம் தேடி
வருகிறது.

9."நீங்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்"என்பதால்தான் தினசரிகளைப்
படிக்கிறீர்கள்.

10."நீங்கள் காலத்திற்கேற்ப மாறுபவர்"என்பதால்தான் fb, whatsapp என தொடர்பு இருக்கிறது.

11."நீங்கள் பல்சுவைமிக்கவர்" என்பதால்தான்
புதியதாகத் தேடுதலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.

12."நீங்கள் பொறுமை  மிக்கவர்"
என்பதால்தான், திருமண வாழ்க்கையை
விரும்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

13."நீங்கள் மனிதநேயமிக்கவர்"
என்பதால்தான், உங்களிடம் அமைதி குடி
கொண்டிருக்கிறது.

14."நீங்கள் தியாகசீலர்"என்பதால்தான்,
உங்களின் குழந்தைகளின் தேவையையும், உங்களைவிட முதியோரின் தேவையையும் பூர்த்தி செய்து நேரத்தை தந்து கொண்டிருக்கிறீர்கள்.

15."நீங்கள் நன்றியுடையவர்" என்பதால்தான், பிறர் உங்களைப் பாராட்டுவதற்கு முன்பு, அவரைப் பாராட்ட
முற்படுகிறீர்கள்.

16."நீங்கள் சிறந்த சிந்தனையாளர்"என்பதால்தான், படித்ததை எல்லாம் நம்பாமல், கேட்டதை எல்லாம் சொல்லாமல், கவனித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

17."நீங்கள் சிறந்த நண்பர்"... என்பதால்தான், நான் எழுதியதைப் படித்து
தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும், சரியென்றால் தட்டிக்கொடுக்கவும் தயாராகிவிட்டீர்கள்...!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Thursday, December 29, 2016

மெளன சுவாமிகள்.

நான் பழனி செல்லும் போதெல்லாம்
தரிசனம் முடிந்தவுடன் உடனே ஒருவரை சந்திக்க ஓடுவேன்.

அவர் மெளன சுவாமிகள்.

யாரிடமும் எதுவும் பேச மாட்டார். ஒரு காவி வேட்டி மட்டுமே. அமர்வதற்கு ஒரு பாய். செம்பில் தண்ணீர் வைத்திருப்பார்.

கீழ் பிரகாரத்தில் ஒரு தூண் அருகே அமைதியாக நல்ல தேஜசுடன் பளிச்சென்று வெண்தாடியும் நெற்றி நிறைய திருநீறுமாக அமர்ந்திருப்பார்.

நான் அடிக்கடி அவரை சந்திப்பதால் அன்போடு புன்முறுவல் செய்வார். தேவஸ்தான நிர்வாகிகள் பெரும் அன்போடும் பாசத்துடன் அவரை கவனித்து கொள்வார்கள்.

பழனி மலை மேலேயே, போகர் சன்னதிக்கு நேர் கீழே உள்ள ஹாலில் அமர்ந்திருப்பார்.

உலகத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாத ஞானி போல் அமர்ந்திருப்பார்.

கேள்வி கேட்டால் பதில் தரையில் சாக்பீஸால் எழுதிக் காட்டுவார்.

நான் ஒரு முறை கேட்டேன். வாழ்க்கை என்றால் என்ன?

புன்முறுவலோடு குறும்பாக சிரித்தபடி "வெங்காயம் என்று எமுதிக் காட்டினார். புரியவில்லை என்றேன்.
அவருக்கு ஆங்கிலமும் தெரியும்.

When you peel off onion,you will find layers after layers and finally nothing Empty என்று எழுதிக் காட்டினார்.

வாழ்க்கைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றேன். சிரித்தவாறே எழுதிக் காட்டினார்.

When you remove all your blankets ego,desire,anger,lust etc one by one,finally
You are nothing,,empty .Then you are God
என்று குறும்பாக சிரித்தார்.

ஞான மார்க்கம். மெய் சிலிர்த்தது.

இது நடந்து பல ஆண்டுகள் ஓடி விட்டது. இப்போது அவர் அங்கே இல்லை. சரியான தகவலும் கிடைக்கவில்லை.

குருவே சரணம்,,

கோபத்தைக் கரைக்கலாமே!

மனசு போல வாழ்க்கை

கோபத்தைக் கரைக்கலாமே!

கோபம் ஒரு பலவீனமான உணர்ச்சி. இயலாமையின் வெளிப்பாடுதான் கோபம். எரிச்சல், ஆத்திரம், கொந்தளிப்பு என எந்த உருவத்தில் வந்தாலும் கோபம் ஒரு வலிமையில்லாதவர்களின் ஆயுதம். ஆனால், நாம் கோபத்தை வீரமாகப் பார்க்க பழகியிருக்கிறோம்.

நமது Action ஹூரோக்கள் அனைவரும் கோபப்படுவார்கள். அதனால் கோபத்தை நாயக அடையாளமாக பார்க்க ஆரம்பித்தோம். வீட்டிலும் கோபப்படும் பெற்றோரைக் கண்டு அதிகம் பயந்தோம். கோபப்பட்டால்தான் காரியம் ஆகும் என்று அர்த்தப்படுத்திக் கொண்டோம். மீட்டிங்கில் பாஸ் கோபப்பட்டு கடிந்து கொண்டால் அதுதான் அதிகார தோரணை என்று வியந்தோம். போட்டியும் பொறாமையும் இயல்பு என்று ஆகிவிட்ட புது உலக நியதியில் கோபத்தை சகஜமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.

பெண் கோபம்

கோபத்தில் கொலை செய்வதும் தற்கொலை செய்வதும் செய்திகளாக வரும் போது மரத்துப்போய் வேறு சிந்தனையில்லாமல் அடுத்த பக்கம் திருப்புகிறோம். “இந்த வயசிலேயே என்ன கோபம் தெரியுமா என் பாப்பாவுக்கு?” என்று பெருமை பேசும் தாய் விரைவிலேயே அந்த குழந்தைக்குத்தான் அடிமை ஆவதை உணர ஆரம்பிக்கிறாள். “அவன் கேட்டது கிடைக்கலேன்னா வீட்டை இரண்டு பண்ணிடுவான். அவ்வளவு கோபம். அவ்வளவு பிடிவாதம்!” என்று பெற்றோர்கள் சொல்லக் கேட்பது சாதாரணமாகிவிட்டது.

என்னிடம் மன சிகிச்சைக்கு வரும் பலர் கோபத்தில் செல்போனை வீசி உடைப்பதாக சொல்கிறார்கள். கோபத்தில் நம்மிடம் சிக்கி சீரழிவது பொருட்கள் மட்டுமல்ல, மனிதர்களும் தான்.

கோபத்தின் வெளிப்பாடுகள் மாறுகின்றன. கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு அழகாய் சண்டையை ஆரம்பிப்பதில் பெண்கள் கில்லாடிகள். ஆண்கள் இந்த விஷயத்தில் புத்திசாலித்தனம் குறைந்தவர்கள். பேச்சில் ஜெயிக்க முடியாததால் இயலாமையை மறைக்க கையை ஓங்குவான். உள்ளத்தின் வன்முறையை உடல் வன் முறையாக மாற்றி விடுகிறார்கள்.

கோபத்தின் நோய்

உடலின் உள்ளே காலகாலமாய் அழுத்தி வைக்கப்படும் கோபம்தான் நோயாக மாறுகிறது என்பது லூயிஸ் ஹேயின் கூற்று. குறிப்பாக பெண்களின் மார்பக, கர்ப்பப்பை போன்ற பகுதிகளில் ஏற்படும் நோய்கள் எல்லாம் ஆண்கள் மேலுள்ள தீராத கோபத்தில் ஏற்படுபவை என்கிறார். தன் பெண்மைச் சின்னங்களை அழிப்பதை தன் வாழ்வில் தன்னைக் காயப்படுத்திய ஆண் அல்லது ஆண்களுக்கு தரும் தண்டனையாக உள் மனதில் அவள் பாவிக்கிறாள் என்று லூயிஸ் ஹே சொல்வது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.

கோபம் என்பது பலவீனம் என்பதை உணரும் போதே பாதி வேகம் குறைகிறது. இடம் பார்த்து வரும் கோபம் வெற்றுக் கோபம் தானே? ஒரு பக்கத்து கோபத்தை இன்னொரு பக்கத்தில் காண்பிப்பது என்ன வீரம்?

பின் “ரௌத்திரம் பழகு” என்றானே மகாகவி பாரதி? அவன் சொல்ல விரும்பியது இதுதான்: “சமூக அநீதிகளைக் கண்டால் தைரியமாகத் தட்டிக்கேள்!” கண்டவர்களிடம் எல்லாம் எரிந்து விழுவது ரௌத்திரம் அல்ல. சமூகக் கொடுமைகளை எதிர்க்கையில் கூட கண்ணியத்தையும் நயத்தையும் கையாள்பவர்கள் ஞானிகள். நம்மிடையே வாழும் நல்லகண்ணு போல.

கருத்தில் எதிர்நிலையில் இருந்தாலும், நடப்பவைக்கு சம்மதம் இல்லாவிட்டாலும், அதற்கு எதிராக போராடினாலும் அதை பக்குவமாகக் கையாளத் தெரிந்தவர்கள்தான் நிஜமான வெற்றியாளர்கள். காந்தி மகானுக்கு கடைசிவரை ஆங்கிலேயர்களிடம் பகையில்லை. அவர்களிடம் பேசுகையிலும் நகைச்சுவை உணர்வுக்கு குறைவில்லை.

உறவுகளில் வரும் கோபம், எதிர்பார்ப்புகள் பொய்ப்பதினால் வருபவை. சுய நலமான கோபம். “இதை உன்னை செய்ய வைக்க என்னால் முடியவில்லையே?” என்பதுதான் கரு. எல்லாவற்றையும், எல்லாரையும் தன் கட்டுக்குள் கொண்டு வர நினைப்பவர்கள் அதிகம் கோபப்படுவார்கள். வாழ்க்கையை அதன் இயல்பில் ஏற்று வாழ்பவர்கள் கோபத்தைக் கரைத்துக்கொள்கிறார்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் மேலை நாடுகளில் பிரபலமாகி வருகின்றன. ஒரு உள சிகிச்சையாளன் என்பதை விட கோபத்தால் வெல்ல நினைப்பவனின் அனுபவரீதியான ஆலோசனைகள் இதோ:

கோபம் இயலாமையின் வடிவம் என்பதைத் திரும்ப திரும்பச் சொல்லிக்கொள்ளுங்கள். முடிந்ததைச் செய்யலாம். முடியாததை ஏற்றுக்கொள்ளலாம். இயலாமை உணர்வை நேரடியாக எதிர்கொள்ளும் போது கோபம் கரைந்து போகும்.

கோபம் எனும் வெடிகுண்டு

கோபம் நமக்குள் நாமே பொத்தி வைத்திருக்கும் ரகசிய வெடிகுண்டு. தூர (யார் மீதும் படாது) எறிந்துவிடுதல்தான் உடல் நலத்துக்கு நல்லது. கோபத்தினால் ஏற்படும் வியாதிகளின் பட்டியல் மிக நீண்டது.

கோபம் உறவுகளைச் சீர்குலைக்கும். எவ்வளவு பெரிய ஒழுக்கசீலராக இருந்தாலும் எல்லா நேரமும் பிறாண்டிக் கொண்டிருப்பவரை சொந்த குழந்தைகளே அண்ட பயப்படுவார்கள். சொல்வதைக் கோபப்படாமல் சொல்லத் தெரிந்துகொள்ளுதல் மனிதர்களைச் சம்பாதித்துக் கொடுக்கும்.

எல்லாவற்றையும் மாற்ற நினைப்பதை விட எல்லாவற்றையும் ஏற்க நினைப்பது தான் மனநலத்தை பேணும். உங்கள் வாழ்க்கையை, உங்கள் உறவுகளை, உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். கோபம் இடம் தெரியாமல் காணாமல் போகும்.

“கோபத்தால் என் உடலில் ஏற்பட்டுள்ள அனைத்து பாதிப்புகளையும் வெளியேற்றுகிறேன்” என்று அஃபர்மேஷன் கூறுங்கள். உங்களை முதலில் மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு மற்றவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாவிதமான கோபங்களும் காலத்தால் அடித்துச் செல்லப்படுபவை என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஆன்மிகப் பயணத்தில் கோபத்தை முழுமையாகக் கரைத்தல் ஒரு முக்கியமான மைல் கல். அதனால்தான் பேருண்மையை கண்ட ஞானிகள் தவக்கோலத்திலும் ஒரு புன்னகை சிந்திக்கொண்டிருப்பார்கள்.

புத்தரின் புன்னகையை விட ஒரு செறிவான புன்னகை எங்காவது உண்டோ?

நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.
நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.
எனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்!

நாம் ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்.

மனிதனின் உயர்வும், தாழ்வும்

அந்த ஊர் சந்தை மிகவும் பிரபலமானது. அங்கே பெரும்பாலும் கழுதை - குதிரை போன்ற கால்நடைகளின் வியாபாரம் மிகவும் நன்றாக நடக்கும்.

ஒருவன்  சந்தை கூடும் ஒவ்வொரு சமயத்திலும் ஒரு நல்ல கழுதையைக் கொண்டு வருவார். அதை மிகவும் மலிவான விலைக்கு விற்றுவிட்டு வீடு திரும்புவார்.

அதே சந்தைக்கு ஒரு பணக்காரன் ஏராளமான கழுதைகளை ஓட்டிக்  கொண்டு வருவான். மிக அதிகமான விலைக்கு கழுதைகளை விற்பனை செய்துவிட்டுத் திரும்புவான்.

ஆனால் அவனோ அளவுக்கு  அதிகமான விலைக்கு கழுதைகளை விற்பதில்லை.

ஒருநாள் சந்தை வேலை முடிந்ததும் அவனும்  செல்வந்தரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது செல்வந்தர் அவனை  நோக்கி,  என் கழுதைகளை எனது அடிமைகள் கவனித்துக் கொள்கிறார்கள். கழுதைக்குத் தேவையான உணவை என் அடிமைகளே தங்கள் சொந்தப் பொறுப்பில் எப்படியாவது கொண்டு வந்து விடுகிறார்கள். கழுதை வளர்ப்பில் எனக்குக் கொஞ்சங் கூட பணச் செலவில்லை. அப்படியிருந்தும் நான் மலிவான விலைக்கு விற்பதில்லை. நீரோ உமது கழுதைகளை மட்டும் எவ்வாறு குறைந்த விலைக்கு விற்கிறீர் ? என்று கேட்டார்.

அதற்கு அவர்  புன்னகை செய்தபடியே, அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, நீர் உமது கழுதைகளை வளர்ப்பதற்கு உழைப்பையும் அவற்றின் உணவையும் திருடுகிறீர்கள். நானோ கழுதைகளையே திருடி விடுகிறேன். இதுதான் உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்றார்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வந்தன் அவனை முறைத்துக்கொண்டே வேகமாக செல்ல ஆரமித்தான்.

ஒரு மனிதனின் உயர்வும், தாழ்வும் அவரவருடைய எண்ணத்தின் இயக்கத்தை பொறுத்தே அமைகிறது.

வாழ்வை சுவையாக்க நேர்மையான சிந்தனைகள்:

வாழ்வை
சுவையாக்க
நேர்மையான
சிந்தனைகள்:

மனதிற்கான மருந்துகள்
அனுபவத்திலிருந்து மனவளக் கட்டுரை...😊

1. செலவுகளுக்கு யோசிக்காதீர்கள். மண்டையைப் பிய்த்துக்கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் செலவழிக்காவிட்டால் - யார் செலவழிப்பார்கள்? ஆகவே தேவைகளுக்குப் பணத்தைச் செலவழியுங்கள்.

2. இரசிக்க வேண்டியதை ரசியுங்கள். அனுபவிக்க வேண்டியதை அனுபவியுங்கள். மொத்தத்தில் enjoy பண்ண வேண்டியதை எஞ்சாய் பண்ணுங்கள்.

3. முடிந்த அளவு, தான,தர்மம்செய்யுங்கள்.பணத்தை வைத்துப்பிறருக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவுங்கள்.

4.உங்கள்குழந்தைகளையோஅல்லது
பேரக்குழந்தளையோ,நீங்கள் செத்த பிறகு தான், உங்கள் பணம் அவர்களுக்குக் கிடைக்கும்
என்கின்ற நிலைமையை, நினைப்பை உண்டாக்கி விடாதீர்கள்.

5. நீங்கள் செத்த பிறகு உங்களுடைய பணம் என்ன ஆகும் என்றோ அல்லது உங்களை யார் பாராட்டுவார்கள் அல்லது திட்டித் தீர்ப்பார்கள் என்ற கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். அதைக் கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நீங்கள் இருக்கப் போவதில்லை.

6. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, சேர்த்த பணம் சொத்து எல்லாம்ஒரு நாள் உங்களை விட்டுப் போகப் போகிறது. அதைத் தடுப்பதற்கும்அல்லது காப்பாற்றுவதற்கும் நீங்கள் இருக்கப்போவதில்லை. அதைமனதில் வையுங்கள்!

7. உங்கள் குழந்தைகளுக்காக அதிகம் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுடைய தலை விதிப்படி தான் நடக்கும். அதில் உங்கள் பங்காற்றலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. நோ சான்ஸ் ஃபார் யூ!

8. நீங்கள் மாங்கு மாங்கென்று என்ன தான் உழைத்தாலும், தினசரிவாழ்க்கை  ஒரே மாதிரி சீராக இருக்காது.

தொட்டிலில் படுத்திருந்தகாலத்தில் இருந்து, சுடுகாட்டில் படுக்கவைக்கப்படும் காலம் வரை,ஒரே மாதிரி இருந்தால், அதில் சுவாரசியம் எங்கே இருக்கும்?

ஒரு நாள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். ஒரு நாள் மகிழ்ச்சியின்றி இருப்பீர்கள். எல்லா தினங்களையும் ஒரே மனப்போக்கில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

வந்ததை வரவில் வையுங்கள்
சென்றதை செலவில் வையுங்கள்”
அது தான் கவியரசர் கண்ணதாசன் எழுதி வைத்த மகிழ்ச்சிக்கானசூத்திரம்!

9. எப்போதும் உற்சாகமாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் நோய், நொடிகள் தானாகவே சரியாகும். உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவரை நோய் நொடிகள் அண்டாது!

10. உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் போற்றி வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இல்லையேல் உங்கள்
வாழ்க்கை தனிமைப் பட்டுப் போய் விடும்!

11. மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? எதிர்பார்ப்பிற்கும்,
நடப்பிற்கும் உள்ள இடைவெளி தான் மன அழுத்தத்தை உண்டு பண்ணும்.

அந்த இடைவெளி அதிகமாக, அதிகமாக, மன அழுத்தமும் அதிகமாகும். ஆகவே எதையும் எதிர் பார்க்காதீர்கள். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

12. அடிக்கு அடி, சரிக்குச் சரி, என்ற போட்டி மனப்பான்மையை உதறித் தள்ளுங்கள். ஒரு நாய் நம்மைக் கடித்தால் அதை நாம் திருப்பிக்
கடிக்க முடியாது.

ஆகவே உங்கள் தராதரத்தை, மேன்மையை விட்டுக் கொடுக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருங்கள். அது தான் நல்லது.

சுருக்கமாக, எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செய்யுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். நடப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்.

ஒரு பிரச்னை,, சரி செய்தே ஆக வேண்டும்.

ஒரு பிரச்னை,, சரி செய்தே ஆக வேண்டும்.
இல்லையேல் மேலும் சிக்கல்,,

எப்படி கையாள வேண்டும்.

பெரும் நிர்வாகத்தில் இதை எப்படி எதிர்கொள்கிறோம் என்று பார்க்கலாம்.

இதே வழிமுறைகளதான் நம்முடைய வாழ்க்கை
பிரச்னைகளுக்கும் in day to day activities.

முதலில் பிரச்னை என்னவென்று தெளிவாக எழுதுவோம். நேர்மையாக எந்த ஒளிவு மறைவும் இல்லாமல்.பிரச்னையை புரிந்து கொண்டாலே பாதி தீர்வு கிடைத்த மாதிரிதான்.

இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு என்னென்ன நேர்மையான வழிகள் என்று பட்டியல் போடுவோம.

பிரச்னையை தீர்க்காவிட்டால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையும் தோலுரித்து பார்ப்போம்.

சில சமயம் தூர நின்று பார்க்கும் போது பூதகரமானதாக தோன்றுபவை அருகில் சென்று பார்த்தால் எளிதாக இருக்கும்.

அறியாமையும் பயமும் ஒன்று சேர்ந்தால்
நம்மை சிந்திக்க விடாது.

எப்படி போனாலும் தீர்க்க முடியாது என்னும் போது
Less Damage எந்த தீர்வில் என்று பார்ப்போம்.

சில சமயம் இது தோல்விதான் என்று தெளிவாகத் தெரிந்து விட்டால், என்னமோசமான விளைவுகள் ஏற்படும்? அதில் இருந்து தப்பிப்பதற்கு என்ன வழி என்று யோசனை செய்வோம். Back process,,,

முடிந்தது கதை தப்பிக்கவும் வழியில்லை என்றால்
Just relax and leave it to Almighty. Surprisingly we would find a Light at the end of tunnel., sometimes.

எதுவாக இருந்தாலும் மனதை அமைதியாகவும் தெளிவாகவும் வைத்துக் கொண்டால் யுத்த களத்தில் சமயத்தில் கைகொடுக்கும்.

ஒருகுட்டி கதை

ஒருகுட்டி கதை

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.

'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி,

அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.

அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டானர்.

அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.

அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன்.

என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்.
கடைக்காரர் வியந்தார்.

ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது.

வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார்.

தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவ்வொருவரும்
நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்...

மகிழ்ச்சி