Thursday, December 29, 2016

ஒரு நண்பர்

ஒரு நண்பர் தன சாவியை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது இன்னொரு நண்பர் வந்து தானும் தேடிக் கண்டுபிடிக்க உதவுகிறார். மூன்றாவதாக ஒரு நண்பர் அந்த வழியில் வரும்போது இவர்கள் இருவரும் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டு என்ன தேடுகிறீர்?,என்று இரண்டாவது நண்பரை கேட்க, அதற்கு அவர் தெரில, ஏதோ அவர் தேடினார் நானும் அவருக்கு துணையாக தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார். உடனே மூன்றவாது நண்பர் மிகவும் அறிவாளியாக இருந்ததால் தொலைத்த நண்பரிடமே போய் கேட்கிறார். அதற்கு தன சாவியை தொலைத்து விட்டதாக அவர் கூற, எங்கே தொலைத்தீர்கள் என்று அறிவாளி நண்பர் கேட்க, அதை வீட்டில் தொலைத்தேன் என்று பதில் கூறிகிறார். பிறகு ஏன் வெளியில் தேடுகிறீர்கள்? என்று வினவ, தொலைத்த நண்பர் வீட்டிற்குள் இருட்டாக இருக்கிறது இங்கு தான் வெளிச்சம் இருக்கிறது. அதான் இங்கு தேடுகிறேன் என்றார். இது எவளோ கோமாளித்தனமாக இருக்கு.
நாமும் அப்படிதான் நமக்குள் இருக்கும் இறைவனை நமக்குள் தேடாமல் வெளியில் தேடிக்கொண்டிருக்கும் புத்திசாலிகளாக இருக்கிறோம்.
கதைனா சிரிப்பீங்க. அதே கதையை நம்மை இணைத்து பாருங்கன்னு சொன்ன கொஞ்சம் வருத்தமா இருக்கு. அப்படிதானே இருக்கு.
எல்லா கதைகளும் மனிதனை தெளிவு படுத்துவதற்காக தானே தவிர வருத்தப் பட வைப்பதற்கு அல்ல.

"இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ தேடி அலைகிறாய் ஞானத் தங்கமே"

No comments:

Post a Comment