Tuesday, December 20, 2016

❤ மலர் தன்னைத்தானே ரசிப்பதில்லை.

புல்லாங்குழல் தன்
கீதத்தை தானே
கேட்பதில்லை.

மேகம் தான் மிதப்பது
வானம் என்று அறிவதில்லை.

தீபம் தனது ஒளியை
தானே காண்பதில்லை.

எந்தப்படைப்பும் தன்னை
தானே அறிவதில்லை.

மனிதனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தனக்குள் இருப்பதை அறிந்து கொள்ளும் வரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

மற்றவர் சொல்வதை கவனமாக கேட்டு நடப்பவன் சீடன்.

தனக்குள் மற்றொன்று சொல்வதை கேட்டு நடப்பவன் குரு.

உங்களுக்குள் இருப்பதை மற்றவர்கள் சொல்வதை கேட்டவரை போதும்.

உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று உங்களிடம் எதையோ சொல்ல விரும்புகிறது.

மனதிடம் உங்கள் கவனம் இருப்பதால் அதன் குரல் உங்களுக்கு கேட்கவில்லை.

உங்களை நீங்கள் கேளுங்கள்.

அதுதான் எல்லாவற்றிற்கும் மூலமான சங்கீதம்.

அதை ஒருமுறை கேட்டுவிட்டால் வாழ்வில் வேறெதையுமே கேட்கமாட்டீர்கள்.

அது ஒன்றே அனைத்தையும் முழுமையாக்கிவிடும்.

வாழ்க வளமுடன்! !

No comments:

Post a Comment