Monday, April 29, 2019

நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....

*👇*

குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசில்லாமல் திணரும் ஒருவரை நீங்கள் கவனித்ததுண்டா...?

உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறிவிடும். எளிமையா ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30,40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா???? சிலமணி நேரத்தில் பணம் எப்படி தயார் செய்வது???? என்ற நெருக்கடியை நினைத்து அழுவதா..?. கடன் பழக்கமே, இல்லாதவர்களைக் கூட அச்சூழல் வட்டிக்கடைக்கும், அடகு கடைக்கும் கொண்டு போய் தள்ளும்.
.
இது விசயத்தில் முக்கியமான ஒரு கருத்தை எல்லோரும் தயவுசெய்து ஏற்கவேண்டும் அல்லது இனிமேலாவது இந்த செயலை ஏற்படுத்த வேண்டும்...

அப்படி என்ன செயல்?...

இனிமேல் *எந்த துக்கம் வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம் ஏன்?...*

நாம் மாலை வாங்கி போட்ட அடுத்த நிமிடமே..... அந்த மாலையை வெளியே எடுத்து வந்து ஒரு இடத்தில் மாட்டி விடுவார்கள்... பின்னர் அந்த மாலையை துக்கம் விசாரிக்க வந்த (சில உறவினர்கள் நண்பர்கள் பொதுவாக நமது கலாச்சாரத்தில் பிறந்தாலும் ஆட்டம் செத்தாலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்) ரோடு முழுவதும் போட்டு குப்பையாக்கி, அதுவும் மெயின் ரோட்டில் போகும் போது பஸ்ஸில் உள்ளே போடுவது.... மின்சார கம்பி ஒயரில் போடுவது... அதனால் சார்டாகி அக்கம்பக்கத்தினர் குடும்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் இது தேவையா?....

அந்த பூ மாலையை நூறு /நூற்று ஐம்பது / ஐநூறு /ஆயிரம் செலவு செய்வதை.....
*இறந்துபோன குடும்பத்திற்கு பணமாக கொடுத்தால், அவர்களுக்கு ஈமக்கிரியை செலவுக்கு ஆகும்*

ஏழையோ பணக்கார குடும்பமோ எல்லா இடங்களிலும் கூலர் பாக்ஸ் (ஓர் இருபது வருடங்களுக்கு முன்பு கையில் தான் தூக்கி போவார்கள் ஆனால் இன்று உடலிலும் தெம்பு இல்லை மனதிலும் தெம்பு இல்லை) தள்ளிக்கிட்டு போக ஓட்டிகிட்டு போக வண்டி என ஏகப்பட்ட செலவுகள் வந்து விடும்...

எனவே....இனி வரும் காலத்தில் இதை பற்றி சிந்திக்க வேண்டும்....

திருமண வீடுகளில் மொய் எழுத்தும் பழக்கம் நாம் அறிந்த ஒன்று தான். “ஏதோ கடன உடன வாங்கி கல்யாணம் பண்றான்.,நாம எழுதுற மொய்ப்பணம் கொஞ்சம் அவனுக்கு உதவியா இருக்குமே” என்பதால் தான், இந்த மொய்பழக்கம்....
கல்யாணம் என்பது திடீர் செலவு இல்லை. நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி நாள்/ மண்டபம் குறிச்சு நம்ம திட்டப்படி கல்யாணம் நடத்திக்கலாம்.

பல சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏதோ காரணத்துக்காக ஏதோ ஒரு காலநெருக்கடியில உருவாகி இருக்கலாம். ஆனா
*கல்யாண வீட்டை விட சாவு வீட்டில தான் சார்..... மொய் எழுதும் பழக்கம் ரொம்பவே முக்கியம் ..*

சில ஏரியாகளில் இந்த பழக்கம் இருக்கலாம்.. தெரியல?? ஆனா பெரும்பாலும் இல்லை தானே.

அம்மாவ அப்பாவ அண்ணன தம்பிய பிள்ளைய இழந்த ஒருத்தன் நம்ம கண்ணு முன்னாடி சாவு செலவுக்கு காசில்லாம அலையலாமா...?தன்மானம் சுட அவன நாம கடனோ உதவியோ கேட்கவிடலாமா..?

உண்மையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனொருவனின் கரங்களை இறுக பற்றி *“நாங்க இருக்கோம்யா, தைரியாமாஇருயா செலவ பாத்துக்கலாம்”னு* சகமனிதனாக நாம் சொல்லவேண்டிய தருணம் அது தான்...

இதுவரை இல்லாவிட்டாலும்..... இனி இப்படியொரு பழக்கத்தை துவங்குதல் நல்லது...

சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தன் அழக்கூடாது.....

நாம் அனைவரும் மனம் வைத்தால் கண்டிப்பாக ஓர் நல்ல மாற்றம் கிடைக்கும் செய்வோமா? *கண்டிப்பாக செய்தே தீரவேண்டும்*

அனைத்து குழுமங்களிலும் பகிருங்கள் ..

Sunday, April 14, 2019

Bribe. Story.

*ஒரு மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் நாலாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அதன் நிர்வாக இயக்குனர் மீது குற்றம்* *சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார் !*
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
நீதிபதிக்கு அவரது அலங்கோலமான நிலை, உறக்கமின்றி சிவந்த  கண்கள், அவமானத்தால் கூனிக்குருகி, நின்றவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது !

*"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?''*

*"இல்லை*' என்று தலையாட்டினார் இயக்குனர்.

நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.

இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது.

"பரவாயில்லை. இங்கேயே அமர்ந்து நிதானமாக  சாப்பிடுங்கள்.

அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன். என்றார் நீதிபதி.

இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிடவே முடியவில்லை.

பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டிருந்தார் இயக்குநர்.

"என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்?

சாப்பிடுங்கள்.''

என்றார் நீதிபதி.

"முடியவில்லை ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை.''

என்றார் இயக்குநர்.

"பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான்.

அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை.

இதற்காகவா நீங்கள்
நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்?

மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. ஆடம்பர தேவைகள்தான் அதிகம்.

*உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது.

அதற்கு நான்கு இட்லியே அதிகம்.*

*உங்கள் ஆடம்பரத் தேவைக்கு நான்காயிரம் கோடி என்ன...

நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..''*

இயக்குனர் பெரிதாக குலுங்கி அழ ஆரம்பித்தார்.

அவர் மீதம் வைத்த *அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டுமல்ல ,

நமக்கும் தான்*

கொலை, கொள்ளை;  லஞ்ச ஊழல் தான் பாவம் என்றில்லை.

வரிசையில் நம்பிக்கையுடன் உணவுக்காகவோ,உத்யோகத்திற்கோ
நிற்பவர்களை புறம் தள்ளி குறுக்கு வழியில் சென்றடைவது,

வசதி வாய்ப்புகள் இல்லாத நெருங்கிய உறவுகளிடம் அவர்களை ஒதுக்கி விட்டு,

உங்கள் வசதிக்கு ஏற்ப வேறு இடத்தில் முடிப்பது,

பசி மற்றும் பணகஷ்டத்தோடு, இருப்பவர்களுக்கு ஆதரவு தருவது போல் ஆசை காட்டி உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும்போது, ஒன்றும் செய்யாமல்
ஒதுங்கி நிற்பது,

இது போன்ற பல வழிகளில் பாவங்களை செய்துவிட்டு,

புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று பரிகாரம் என முயற்சிப்பது பெரும்பாவம்.

அது கடப்பாரையை முழுங்கி விட்டு சுக்கு கசாயம் குடிக்கிற மாதிரி,

சந்தோஷத்திலே பெரிய சந்தோஷம்,

நம்மருகில் நம்முடன், நம்மை சுற்றி உள்ளவரை,

சந்தோஷப்படுத்தி பாருங்கள்.

உதவி பெற்றவர்கள் ஆண்டவரிடம்,

ஆண்டவா.....

எங்கள் ஆயுட்காலத்தை குறைத்து,

எங்களுக்கு உதவிபுரிந்தவருக்கு நீண்ட ஆயுளைக்கொடு,

ஏனெனில் எங்களை போன்றவர்களுக்கு அவர் நெடுங்காலம் உதவவேண்டும் என வேண்டுவார்கள்.

பிறகு பாருங்கள்.

ஆரோக்கியம் கூடும், ஆனந்தம் பெருகும்,

ஏன், ஆண்டவனே,

" யாருப்பா இது நாம செய்ய வேண்டிய வேலையை தானாகவே செய்றது " என்று
உங்களை ஆண்டவனே,

ரசிப்பான்.

ரட்சிப்பான்.

நாம் யாரும் 200 ஆண்டுகள் வாழ போவதில்லை. அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லை.

உங்கள் தேவைக்கு வைத்துக்கொண்டு மீதியை இல்லாதவர் களுக்கு உதவி செய்யுங்கள்.

உங்கள் இல்லம் ஆலயமாகும்.

நீங்களே இறைவனாவீர்கள்.

சதா சர்வகாலமும் ஆண்டவரிடமும் எதையாவது ஒன்றை பிச்சையாக வேண்டி பெற்று கொள்ள மட்டுமே முயற்சிக்கிறோம்.

ஒரு நாளாவது நம்மிடம்  மீதமுள்ள உணவையோ, உடையோ இல்லாதவர்களை தேடிசென்று கொடுத்து பாருங்கள்!

கர்ணனாக ஆவீர்கள்

அகம் அழகு பெறும்,
முகம் பொலிவு பெறும் தர்ம சிந்தனை மேலோங்கும்.

Saturday, April 13, 2019

Maharishi thought (April 14)

*"என்னிடம் ஒரு முழுமையான ஆற்றலோடு எல்லாம் வல்ல இறைவன், என்னைப் படைத்திருக்கிறான், பக்திமானாக இருந்தாலும் ஞானவானாக இருந்தாலும் அவனுடைய பிரதிநிதியாகவே, அவனுடைய பகுதியாகவே தான் இருக்கிறேன். பேராற்றல் என்னிடம் அடங்கி இருக்கிறது. இதைக் கொண்டு என்னென்ன நலம் கொள்ள வேண்டுமோ அதை நானே விளைவித்துக் கொள்வேன். பிறருடைய உதவி தேவையான இடத்திலே அவர்களுக்கு உதவி செய்து அந்த உதவியை நான் பெறுவேன் என்ற அளவிலே உதவுபவர்களுக்கெல்லாம் நாம் பதில் செய்து கொண்டிருப்பேன் என்ற அளவிலே, கடமை உணர்வோடு நின்று பாருங்கள். பெரிய சக்தி வாய்ந்த ஒரு ஆற்றல் உங்களிடம் பெருகிவிடும். தினந்தோறும் அதைப் பயன்படுத்துங்கள்*

*நீங்கள் ஒரு அதிகாரியாக இருக்கலாம். உங்கள் அதிகாரத்தின் கீழ் ஆயிரமாயிரம் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கக்கூடும். நீங்கள் இந்தப்புறம் திரும்பி நாம் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று எண்ணிவிட்டீர்களேயானால் அத்தனை ஆயிரம் மனிதர்களும் அவர்களின் தேவைகளும் நேரடியாக உங்களுக்குத் தெரியத் தொடங்கும். அதைச் செய்ய ஆரம்பித்தீர்களேயானால் அவ்வாறு செய்யச் செய்ய இன்ப ஊற்று தான் மனதிலே வளரும். தெய்வத்தோடு தெய்வமாகவே நிற்கும் ஒரு நல்ல காட்சி உள்ளத்தில் ஏற்படும்.*

   

         *அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*
°
     *ஸ்ரீ விகாரி வருடத் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மன மகிழ்வையும், அனைத்து செல்வங்களையும் சேர்க்கட்டும். அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம்,  உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழட்டும். அதற்காக இறையருளையும், குரு அருளையும் வணங்கி, அனைவரையும் வாழ்க வளமுடன் எனத் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி மகிழ்கின்றேன்.*

      

Maharishi thoughts ( April 13)

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!

வாழ்க்கை மலர்கள்....

ஏப்ரல்,13....

வினைப்பதிவின் கருவி:

எண்ணம் நின்றுவிட்டால் நலமாக இருக்கும் என்று இயற்கைக்குப் பொருந்தா நினைவு கொள்ள வேண்டாம்.  உயிர் வாழும்போது, விழித்திருக்கும்போது, எண்ணங்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.  தூங்கும் போது எண்ணங்களில்லையே  அதனால் என்ன பயன் பெற்று வருகிறீர்கள்.  மரணத்தில் எண்ணம் அடியோடு நின்றுவிடும்.  பிறகு என்ன உயர்வைக் காண முடியும்.  எண்ணம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே முறைபடுத்தி பயன் கண்டு சிறப்படையுங்கள். தவத்தில் பழக்கும் எண்ணம் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் சிறப்பளிக்கும்.

வாழ்த்துக் கூறுவதைப் பற்றி சில அன்பர்கள் வினா எழுப்புகிறார்கள்.  வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தோடு ஒருவர் எனக்குத் தீங்கு இழைக்கிறார்,  துன்பம் தருகிறார் என்றால் அவரை எப்படி வாழ்த்தமுடியும்? ஏன் அத்தகைய கொடுமையாளரை வாழ்த்த வேண்டும்?  என வினவுகின்றனர்.  எவரும், எவருக்கும் எத்தகைய கெடுதலும் அவர் விருப்பம் போல் செய்துவிட முடியாது.  ஒவ்வொருவரிடத்தும் வினைப் பயன் பதிவுகள் உள்ளன.  அப்பதிவுகளை வெளியாக்கி தூய்மைப்படுத்த வேண்டியது இயற்கையின் நியதி.  தனது தவறான செயல்கள் மூலமாகவும் தனக்கு துன்பம் விளைந்து வருந்தி அப்பதிவுகள் நேர் செய்யப்படலாம். 

பெரும்பாலும் இயற்கை வேற்றுமனிதர் செயலின் மூலமே அப்பதிவுகளை வெளிக்கொண்டு வருகிறது.  ஒருவர் இன்னொருவருக்கு தீமை செய்கிறார்,  அல்லது துன்பம் அளிக்கிறார் என்றால் இயற்கை ஒருவர் வினைப்பதிவை வெளிக் கொணர இன்னொருவரை கருவியாக உபயோகிக்கின்றது என்று தான் பொருள்.  எனவே, தீமை செய்தவர் தானே விரும்பி இன்னொருவருக்குத் துன்பம் அளித்தார் என்று கொள்வதைவிட துன்பம் கண்டவர் வினைப்பதிவை இன்னொருவர் இயற்கையின் ஒருங்கிணைந்த பேராற்றல் உந்துதலால் வெளிக் கொணர்ந்து நேர்செய்து விட்டார் என்று கொள்வதே சரியான விளக்கம். 

தனது வினைப்பதிவே இன்னொருவர் மூலமாகத் துன்பமாக விளைந்தது என்று உணர்ந்து கொண்டால் பிறர் மீது வெறுப்பு எவ்வாறு எழும்?    

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

விரிவடையா மனநிலையும் விரிந்த மனச்செயலும்:

"விரிவடையா உள்ளத்தால் நமது தொண்டின்
வித்து வளர்ச்சி உயர்வு எல்லையாவும்-
தெரியாத அன்பர் பலர்  தங்கள் போக்கில்
திரித்து பல சுடுசொல்லால் வருத்தினாலும்;
பரிவோடு அவர்திருந்த வாழ்த்துச் சொல்வோம்
பரநிலையில் நம் மனத்தை இணைத்துக் கொண்டு,
சரியில்லை நம் செயலொன்றுண்டு என்னில்
சமப்படுத்தி நலம் காண்போம் சலிப்பு இன்றி".

எல்லார்க்கும் உதவி செய்வோம் :

"தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி
தவறென்று பிறர் செயலைப் பிறரைக் குறைகூறும்
அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார் நம்மில் ;
அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது
சொற்கனிவால் வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி
சூட்சுமமாய் அவர் உயிரை அறிவையறிந்துய்ய
நற்பணியைச் செய்திடுவோம் சமுதாயத் தொண்டாம்;
நம் தகைமை பொறுமைகளைச் சோதிக்க வாய்ப்பாம்".

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரிமகரிஷி.

சித்ரா பௌர்ணமி

18.4.2019 இரவு 7.10 மணிக்கு சித்ரா பௌர்ணமி தொடங்குகிறது!

சித்ரா பவுர்ணமியன்று சித்தர்களின் புனித மலைகள் , ஜீவ சமாதிகளுக்கு செல்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சித்ரா பௌர்ணமி அன்று  இறையருளை  வழங்குவதற்காக  சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து பூமிக்கு வருவதாக அகத்தியர் பெருமான் கூறுகிறார்.

சித்ரா பவுர்ணமியன்று சித்தர்கள் ஜீவ சமாதிகள் , புனித மலைகள் போன்ற இடங்களுக்கு  செல்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.

பவுர்ணமியன்று தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தப்படி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

குறிப்பாக சித்தர்களின் அருளை நாம் தியானத்தில்  பெற முடியும். சித்ரா பவுர்ணமி வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாக சித்தர்களின் அருளை பெறுவது வலியுறுத்தப்பட்டுள்ளது.

நமக்கு மட்டுமல்ல சித்தர்களுக்கும் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூமி யில் இருந்து ஒருவித உப்பு கிளம்பும். அந்த உப்புக்கு பூமிநாதன் என்று பெயர். இந்த உப்பு அதிக சக்தி தரக்கூடியதாகும். இதை சித்தர்கள்தான் கண்டுபிடித்து உலகத்துக்கு தெரிவித்தனர்.

சித்ரா பவுர்ணமி தினத்தன்று அந்த உப்பு சக்தி பெறுவதற்காகவே சித்தர்கள் பல இடங்களில் தோன்றுவது உண்டு. மேலும் பல முக்கிய தலங்களில் உள்ள இறைமூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் நம்பிமலை , கொல்லிமலை , பொதிகை மலை , தீர்த்த மலை , திருவண்ணாமலை, சதுரகிரி மலை,  உள்பட பல்வேறு மலைகளில் சித்தர்களும் வலம் வருவார்கள்.

இறைவனின்  அருளை பெறுவதற்காக சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து  வருவதாக நம்பப்படுகிறது. வண்ணத்துப்பூச்சியாக, ஏதோ விலங்காக அல்லது மனிதர்கள் போலவே சித்தர்கள் வலம் வருவார்கள். அந்த சமயத்தில் நாமும்  சென்றால் நமக்கு இறையருளும் சித்தர்களின் அருள் ஆசியும் கிடைக்கும்.

எனவேதான் கிரிவல தலங்களில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை சித்ரா பவுர்ணமி தினத்தன்று தவறாமல் வழிபட வேண்டும் என்று நமது மூதாதையர்கள் அறிவுறுத்தி உள்ளனர். நம்பிமலை போன்ற சித்த மலைகளில்  ஏற்கனவே நிறைய சித்தர்களின் அருள் உள்ளது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று மற்ற இடங்களில் உள்ள சித்தர்களும் நம்பிமலைக்கு வந்து பூத நாராயண சித்தர் தலைமையில் ஒன்று கூடி உலக மாற்றங்களை பற்றி முடிவெடுப்பார்கள் என கோரக்கர் மலை வாடகம் என்ற நூலில் கோரக்கர் பெருமான் சொல்கிறார்.  ஆகையால்  செல்பவர்கள் ஈசன் பெயருடன் சித்தர்களையும் நினைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

பொதிகை மலையில் அகத்தியரை சித்ரா பௌர்ணமி தினம் வழிபட்டால் சிவபெருமானின் திருவடியை மிக எளிதாக சென்றடைய முடியும் என்பார்கள். அதுபோல மதுரையில் ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி தினத்தன்றும் இந்திரனே நேரில் வந்து சொக்கநாதரை பூஜித்து வழிபடுவதாக சொல்வார்கள். அந்த சமயத்தில் மதுரை சொக்கநாதரை நாமும் வழிபட்டால் இந்திரனின் அருள்ஆசி பெற முடியும்.

சித்ரா பவுர்ணமி தினத்தன்று சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்வதால் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கணித்து உள்ளனர்.  கடலில் நீராடினால் இதுவரை சம்பாதித்த பாவங்கள் அனைத்தையும் கரைத்து விடலாம் என்பது ஐதீகம். அன்றைய  தினம் கடலில் புனித நீராட வருபவர்களுக்காக சித்தர்கள், ரிஷிகள் தயாராக காத்து இருப்பார்கள் என புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே ந கடலில் புனித நீராடினால் சித்தர்களின் ஆசி பரிபூரண மாக நமக்கு கிடைக்கும்.

தஞ்சை பெரிய கோவிலில்    பவுர்ணமி  தினம் சித்ரா பவுர்ணமி விழாவை “சித்தர் பெருவிழா” என்றே நடத்துவார்கள். இதையட்டி நந்தி எம்பெருமானுக்கும், கருவூராருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்னதானமும் செய்வார்கள். இதில் பங்கேற்றால் சித்தர் பெருமான் கருவூராரின் அருளை பெறலாம்.

சித்தர்கள் பெரும்பாலும் ஏழை எளியவர்களின் பசியை போக்க அன்னதானம் செய்யுங்கள் என்பதையே வலியுறுத்தி உள்ளனர். எனவே முடிந்தால் சித்ரா பௌர்ணமி அன்று  அன்னதானம் செய்யுங்கள். இல்லையெனில் அன்னதானத்துக்கு உதவி செய்யுங்கள்.

சதுரகிரியில் இதை கருத்தில் கொண்டே 24 மணி நேரமும் அன்னதானம் கொடுக்கிறார்கள். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் கணக்கில் அடங்காத சித்தர்களை தரிசனம் செய்ய முடியும். குறிப்பாக கோரக்கர் சித்தரை நினைத்து தியானம் செய்தால் நிச்சயமாக அவரது தரிசனத்தை சதுரகிரியில் பெற முடியும்.
சதுரகிரியில் சித்தர்களின் முக்கிய ஆசியாக நமக்கு நல்ல உடல்நலம் கிடைக்கும்.

16 வகை பேறுகளில் ஒன்று நோயின்மை. சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கும் நோயின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சித்தர்கள் கண்டுபிடித்து கூறி உள்ளனர். எனவே சதுரகிரியில் எந்த அளவுக்கு நாம் முழு மனதுடன் சித்தர்களை வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு நன்மைகள் கிடைக்கும். சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் அருகே 18 சித்தர்களின் சன்னதி உள்ளது. அந்த பகுதியில் நாளைய தினம் அமர்ந்து தியானம் செய்தாலே போதும், சித்தர்கள் உங்களுக்குள் ஊடுருவுவார்கள்.

அதுபோல திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திலும் கிரிவலத்தின்போது சித்தர்களின் அருளை பெறலாம். திருச்செங்கோடு மலையானது ஓங்கார வடிவில் அமைந்தது. எனவே அங்கு சித்தர்கள் அருள் அதற்கேற்ப கிடைக்கும்.

நாகை மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோவி லில் பதினெண் சித்தர்களில் ஒருவரான வால்மீகி சித்தர் அடங்கியுள்ளார்.  சித்ரா பவுர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் பங்கேற்றால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆலயங்களில் மட்டுமின்றி சித்ரா பவுர்ணமி  தினம் ஜீவ சமாதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபாடு செய்தால் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்குரிய அனைத்து பலன்களையும் நிச்சயம் பெற முடியும்.

சிங்கம்புணரியில் புகழ்பெற்ற முத்து வடுகநாதர் ஜீவ சமாதி அமைந்துள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அந்த ஜீவ சமாதி தலத்தில் சித்தரின் திருஉருவ சிலையை தேரில் வைத்து நகர் வலமாக எடுத்து செல்வார்கள். அப்போது சித்தரை வழிபட்டால் நாம் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சித்தர்களை வழிபடச் செல்லும் முன்பு சித்ரா பௌர்ணமி அன்றுகாலை வீட்டில் குளித்து முடித்து விட்டு உங்களது குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். முடிந்தவர்கள் சக்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது. மாலையில் சந்திரனை பார்த்து விட்டு ஜீவ சமாதிக்கு சென்று வழிபடுங்கள் அல்லது சித்தர்களை நினைத்தப்படி கிரிவலம் வாருங்கள்.

உங்களது தேடல் உண்மையாக இருந்தால் நிச்சயம் சித்தர்களின் அருளை பெற முடியும்.

                            - சித்தர்களின் குரல்.

Wednesday, April 10, 2019

தங்கம் தங்கம் தங்கம்


——————————
தங்க வியாபாரம் பற்றிய கதிகலங்க வைக்கும் மர்மப்பின்னணி !

தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?*
_____________________

💫 ஒரு பவுன் தங்கசெயினுக்கு
1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!

💫 இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!

💫 ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...!

💫 இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்...!

💫 ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் ! ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்...!

💫 ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!

💫 இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்...!
1 கிராம் தங்கம் ரூ. 2922/-
8 கிராம் தங்கம் ரூ. 23,376/-
1 கிராம்  செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-
6.5 கிராம் தங்கம் - 18,993/-

6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அடக்க விலை -18993+7=19000/-

1 பவுனுக்கு தங்கத்தில் லாபம் - 23376-19000= 4376/--

சேதாரம் 1.5 கிராம் = 4383/-

1 பவுனுக்கு மொத்த லாபம்  4376+4383=8759                

💫 என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...!

💫 நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே ! உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி ஷேர் செய்யவும்.
எதுவும் மக்களால் முடியும்...!