Tuesday, May 29, 2018

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,*

*_அவர்கள் வாழ்ந்த நாட்கள்._
*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
*10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
*11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
*12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
*13. நந்தீஸ்வரர்* – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
*14. இடைக்காடர்* – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
*15. மச்சமுனி* – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
*16. கருவூரார்* – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
*17. போகர்* – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
*18. பாம்பாட்டி சித்தர்* – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.
*(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி)* உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.
_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்._

மரணத்திற்கு பின் ஜீவன்  எங்கே போகிறது?


சனாதன தர்மம் சாஸ்திரம்.

ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும் அடுத்த மூன்று  நாட்கள் ஆகாயத்திலும் வசிக்கிறது. இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு துக்கம் கேட்கப்போவோர் வருவோரை பார்த்துக்கொண்டு நிற்கிது. 10வது நாளில் நம் வீட்டிற்குள் அந்த ஜீவன் வருகிது. ஆகவே தான் பத்தாம் நாள் காரியம் முக்கியம் என இந்து  சாஸ்திரம் கூறுகிறது. 11வது 12வது நாளில் நம்மால் கொடுக்கப்படும் பிண்டத்தை உண்கிறது. 13வது நாள் தான் யம கிங்கரங்கள் கயிற்றால் இந்த ஜீவனை கட்டி இழுத்துச்செல்ல தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம் நாள் ஒன்றுக்கு 247 காத தூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது. இவ்வாறு நடந்து செல்லும்பொழுது அந்த ஜீவனுக்கு பசி தாகம் அதிகம் ஏற்படும் பசியோடு நடந்து செல்லும் அந்த ஜீவன் மாதத்தில் ஒரு நாள் அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும். ஆகவே ஒரு ஜீவன் இறந்த பின் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க உங்களை வாழ்த்தும். இவ்வாறு  12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும். இவ்வாறு  ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் யமபுரத்தை அடைகிறது. உடலிலிருந்து நீங்கி ஆன்மா யமபுரிக்கு செல்வதற்கு ஓர் ஆண்டு காலம் பிடிப்பதால் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுபகாரியம் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
ஒரு ஜீவன் பாவம்  செய்திருப்பின் கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று யமபுரம் செல்கிறது. அந்த ஜீவன் புண்ணியம் செய்திருப்பின் சூரிய மண்டலம் மார்க்கமாக பிரம்மலோகம் செல்கிறது.
👌👌👌👍🙏👍👌👌👌

*எளிய முறையில் சரணாகதி விளக்கம்*....🔑🗝📩

மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை

மாட்டுக்கு
உயிர், அறிவு
இரண்டும் உண்டு

ஆனால்.....

*வண்டிக்காரன்*

உயிரில்லாத
வண்டியை....

அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..

எந்த இடம் செல்ல
வேண்டும்...

என்பதை தீர்மானித்து,

வண்டியை
செலுத்துவான்.

*எவ்வளவு தூரம்...*

*எவ்வளவு நேரம்...*

*எவ்வளவு பாரம்...*

அனைத்தையும்

*தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே*!

அறிவிருந்தும்.....

சுமப்பது தானாக இருந்தாலும்

மாட்டால்
ஒன்றும் செய்ய
இயலாது...

அதுபோல....

உடம்பு என்ற
ஜட வண்டியை

ஆத்மா, உயிர்
என்ற மாட்டுடன் பூட்டி

*இறைவன் என்ற வண்டிக்காரன்*

ஓட்டுகிறான்....

*அவனே தீர்மானிப்பவன்*

*அவன் இயக்குவான்..*

*மனிதன் இயங்குகிறான்*

👉 *எவ்வளவு காலம்..

👉எவ்வளவு நேரம்..

👉எவ்வளவு பாரம்..

*தீர்மானிப்பது  இறைவனே*

இதுதான்

நமக்காக
இறைவன்
போட்டிருக்கும்
*டிசைன்..*!

இதுதான்

இறைவன் நமக்கு
தந்திருக்கும்
*அசைன்மென்ட்*..!

*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*

*இதை*
*உணராதவனுக்கு*
*அமைதி இல்லை*.

*இருக்கும் காலங்களில்*
*இனியது செய்வோமே*!.786

Monday, May 28, 2018

திருமலையில் தங்குவதற்கு  ஒரு அறை கண்டுபிடிக்க

*திருமலையில் தங்குவதற்கு  ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கல் நண்பர்களே .*
**********************************
மூல் மட் மின்: 0877-2277499.
புஷ்பா மாண்டபம் ப: 0877-2277301.
ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.
உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.
ஸ்ரீ திருமல காஷி மட் Ph-0877-2277316.

ஸ்ரீ ராகவேந்திர
ஸ்வாமி மட் Ph-0877-2277302.
ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா
விவேர்டினினி சபை Ph: 0877-2277282.

ஸ்ரீ காஞ்சி
காமகோடி மட் மின் : 0877-2277370.
ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.
ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.
உடுப்பி மட் Ph-0877-2277305.

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத்
ஆத்வான் ஆசிரமம் ப: 0877-2277826.

ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.
ஸ்ரீ திருப்பதி ஸ்ரீமன்னாரயன
ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.

ஸ்ரீ சிருங்கரி சாரதா
மடம் Ph: 0877-2277269,2279435.
ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.

ஸ்ரீ திருமல
காஷி மத் தொலைபேசி: 222 77316
உடுபி மட் பி: 0877 222 77305

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி
ராமனுஜீயர் மட் பீ: 0877 222 77301)

ஸ்ரீ காஞ்சி காமகோடி
பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ப., 0877 222 77370)

ஸ்ரீ வல்லபச்சரிய மடம்
தொலைபேசி: 222 77317
மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் ப: 0877 222 77302
ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.
ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி: 0877 222 77436

ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி
ஆதித்யான் ஆஷ்ரம் ப. 0877 222 77826
ஸ்ரீ வைகநாத ஆசிரமம்: 0877 222 77282
ஸ்ரீ அஹோபில மட் பட்: 0877-2279440
ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் பி: 0877 222 77269
ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால்
பன்சிலால் தர்மசாலா ஃபீ: 0877 222 77445

ஹோட்டல் நரிலமா
சௌல்ரி பி: 0877 222 77784
ஸ்ரீ சீனிவாச சொல்ரி டி: 0877 222 77883
ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்: 0877 222 77240

கர்நாடகா விருந்தினர்
மாளிகை பி : 0877 222 77238
தக்ஷிணா இந்தியா
ஆர்யா வியா கபு முனிரட்ணம்
அறநெறிகள் பி: 0877 222 77245

ஸ்ரீ சிருங்கேரி
சங்கர நீலம் ப: 0877 222 79435
ஸ்ரீ ஸ்வாமி
ஹதிராஜ் முட்டம் ப: 0877-2220015

வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளும் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.

65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?

நிபந்தனைகள் :
----------------------------
1) ஆதார் அட்டை அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4) காலை 10 மணி முதல்
மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
6.) உதவி செய்வதெற்கென
உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.
7) காலை உணவு பால் இலவசம்.
8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப்படுவர்.
10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை !

🙏 *ௐ நமோ நாராயணா....!*

➡➡➡➡➡⬆⬅⬅⬅⬅⬅

Saturday, May 26, 2018

அற்புத வாழ்க்கை

**

*அப்பன்*
*உயிர்துளி*
*கொடுத்து..*

*அம்மை*
*உயிரை*
*சுமந்து..*

*தொப்புள்*
*கொடி*
*உயிர் வளர்ந்து..*
*பத்து மாதம்*
*கருவறை*
*இருட்டில்*
*மூச்சுபயிற்சி*
*கண்டு*
*பூமியின்*
*வெளிச்சத்தில்*
*வந்து விழும்*
*குழந்தை*

*வித்தியாசமான*
*உருவம்*
*கொண்டு*
*வேற்றுமையான*
*எண்ணம்*
*கொண்டு*
*மனிதாபிமான*
*குணம்*
*கொண்டு*
*ஆண்டவன்*
*விருப்பபடி*
*நிறம்*
*கொண்டு*

*வளர்ந்து*
*வாழ்ந்து*

*நல்லதும் கண்டு*
*கெட்டதும் கண்டு*

*சுகமும் கண்டு*
*அவமானமும் கண்டு*

*ஒவ்வொருவரும்*
*ஒவ்வொரு*
*வித்தியாசமான*
*அனுபவம்*
*கண்டு*

*இது தான் உலகம்*
*இது தான் வாழ்க்கை*

*இது தான் பாதை*
*இது தான் பயணம்*
*என்று*

*தெளிவதற்குள்ளே*
*விதி சதி செய்து*
*இயற்கை*
*மாற்றம்*
*கொண்டு*

*உடலை வளர்த்து*
*அறிவை வளர்த்து*

*நட்பை வளர்த்து*
*எதிர்ப்பை வளர்த்து*

*கோழையை எதிர்த்து*
*வீரத்தை வளர்த்து*

*படிப்பு கண்டோம்*
*தினமும்*
*பிடித்த உணவு* *உண்டோம்*

*வேலை கொண்டோம்*
*உழைப்பு கொண்டோம்*

*பணம் கண்டோம்*
*திமிர் கொண்டோம்*

*ஆணவம் கொண்டோம்*
*அறியாமை கொண்டோம்*

*ஏளனம் கொண்டோம்..*
*எளிமை துறந்தோம்*

*பழைய நிலை மறந்து*
*பணம் கண்டு புது*
*வாழ்க்கை*
*வாழ்ந்தோம்*

*பணம் கண்டு பாசம்*
*என்ற வேசம்* *கொண்டோம்..*

*மனைவி மக்கள்* *கண்டோம்..*
*பேரப்பிள்ளை*
*கண்டு*
*பேரின்பம் கண்டோம்..*

*ஒருநாள்*
*அப்பன் உயிர்துளி*
*வெளுத்து சாயம் போக*

*அம்மை கொடுத்த*
*உயிர் போக*

*உணவு உண்டு*
*வளர்ந்த உடல்*
*மட்டும்*

*அனாதையாய்*
*இடுகாட்டில்*
*நெருப்பின்*
*வாயில்போக*

*பெத்தவளும் வர* *தயாராக இல்லை..*

*பெத்தவனும் வர*
*தயாராக இல்லை ..*

*உள்ளத்தாலும்* *உடலாலும் இணைந்து*
*வாழ்ந்த கட்டிய* *மனைவியும்*
*வர தயாராக*
*இல்லை..*

*பெத்த சீர்மிகு* *பிள்ளையும்*
*வர தயாராக இல்லை..*

*பேரின்பம் அடைந்த*
*ஆயிரம் முத்தம் நீ*
*கொடுத்த* *பேரப்பிள்ளையும்*
*உடன் வர*
*தயாராக இல்லை..*

*உன்னுடைய*
*உயிர் போனால்*
*சகலமும் போனது..*

*உடல் நெருப்போடு* *போனது..*

*பணம் வீட்டோடு*
*நின்றது ..*

*பாசம்*
*சுடுகாட்டோடு*
*போனது..*

*கடைசி வரை*
*யார் வருவார்*

*என்று*
*அறியும் ஆற்றல்*
*எவன் அறிவான்*
*அகிலத்தில்..*

*அனுபவத்தோடு*
*சேர்ந்த*
*கர்மவினையும்..*

*பாவமும்*
*புண்ணியமும்*
*கடைசி வரை வந்து*
*சேர்ந்தது..*

*ஆத்மா மட்டுமே*
*ஆண்டவனை*
*அடைந்தது..*

*சுடுகாட்டு*
*வெந்தணலில்*
*ஒரு கை பிடி*
*சாம்பல் மட்டுமே*
*மிஞ்சியது..*

*அறுபது வருடம்*
*இல்லை*
*நூறு வருட*
*வாழ்விற்கு*
*மிச்சம்..*

*இவ்வுளவுதான்..*
*வாழ்க்கையில்..*
*இப்பூவுலகில்*

*எதுவும் உடன் வர* *முடியாது*
*என்று*
*தெளிந்த*
*நமக்குள்*
*எதற்கு இந்த*
*கேவலமான*
*வஞ்சம்*
*வக்கிரம்*
*பொறாமை*
*ஏளனம்*
*வரம்பு மிறி பேச்சு*
*தகுதி மிறி ஆசை..*
*பொறுமையோடும்*
*எளிமையோடும்*
*நல்ல எண்ணத்தோடும்*
*வாழ்ந்தால்*
*போகும் பாதை*
*கடைசியில்*
*மோச்சத்திற்கு*
*வழி வகுக்கும்..*

*நாம் வாழும் காலத்தில்*

*போட்டி             இன்றி*
*பொறாமை     இன்றி*
*காமம்                இன்றி*
*குரோதம்       காட்டாமல்*
*களவு           செய்யாமல்*
*பேராசை   கொள்ளாமல்*

*அடுத்தவரின் குடியை* *கெடுக்காமல்*

*வாழ கற்றுக்*
*கொள்ளுங்கள்*

*பிறரின் தவறை* *மன்னித்து பழகுங்கள்* 

*தன்னிடம் ஆயிரம்* *கறைகள்* 
*ஆயிரம் குறைகள்*
*அவற்றை நீக்க*
*முயற்சியுங்கள்*

*பிறரை பழிக்காதீர்கள்*

*நல்ல வண்ணம்*
*வாழலாம்*

*வாழ்வில் வளம்*
*பெறலாம்*

*வாழ்க வளமுடன்* *வளர்க நலமுடன்...*
நட்புடன் ............

🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻

Friday, May 25, 2018

Jeeva kaarunyam

*152.ஆம் ஆண்டு வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை விழா !*

பிறர் துன்பம் நீக்கினால் தன் துன்பம் தானே நீங்கும் !

பல ஆண்டுகளாக நாம் செய்த தீய காரியங்கள் தீய வினைகளாக நம்முடைய ஆன்மாவில் பதிவாகி,தீராத துன்பம் விளைவிக்கின்றது .

அதனால் நமக்கு கிடைக்க வேண்டிய ஆன்ம லாபம் கிடைக்காமல் போய் விடுகின்றது.ஆன்ம லாபம் என்பது ! இறைவன் இடம் இருந்து நியாயமாகப்   பெற வேண்டிய அருள் என்பதாகும்.அந்த அருள் கிடைக்காமல் நரை ,திரை,பிணி,மூப்பு, பயம்,மரணம் போன்ற துன்பங்கள் வந்து , மாண்டு மறைந்து போகின்றோம்.

அந்த துன்பங்களில் இருந்து  விலக வேண்டுமானால் ,மற்ற ஜீவர்களுக்கு உண்டாகும் துன்பங்களை நீக்கினால் மட்டுமே!  நம்முடைய ஆன்மாவில் பதிவாகி உள்ள  துன்பங்கள் நம்மை விட்டு விலகிவிடும்.வேறு வகையால் துன்பங்கள் தீராது ! தீர்க்க முடியாது என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்  என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

நாம் சாதி,சமய,மதங்களில் பற்று வைத்து ,துன்பங்களை தீர்ப்பதற்காக பலபல வழிப்பாட்டு முறைகளிலும் ஈடுபட்டு ,பலப்பலஆச்சார, சங்கற்ப,விகற்பங்களும்,அதற்குண்டான பரிகாரங்களும்,பிரார்த்தனைகளும்  செய்து கொண்டு வருகின்றோம்,அதனால் அற்ப வினைகள் தீருமேத் தவிர முழுமையான வினைகள் தீரவே தீராது .

ஆன்மாவில் பதிவாகி உள்ள வினைகள் என்னும் திரைகளை விளக்கிக் கொள்ள வேண்டுமானால் .பிறர் துன்பங்களைப் போக்கும் ஜீவ காருண்யமே வழி என்பதலால் அதற்கு ஜீவ காருண்ய ஒழுக்கம் என்று பெயர் வைத்துள்ளார் .
அறிவு விளங்கிய  மனிதர்கள் !

அறிவு விளங்கிய ஜீவர்கள் எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடாக பின் பற்ற வேண்டும் என்றும் .உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்.ஜீவ காருண்யமே போட்ச வீட்டின் திறவு கோல் என்றும்.ஜீவ காருண்யமே சுத்த சன்மார்க்கம் என்றும் ---சுத்த சன்மார்க்கமே அருளைப்  பெரும் வழியாகும் என்பதை வள்ளலார் மிகத் தெளிவாக சொல்லியும் எழுதியும் வைத்து உள்ளார் .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை.!

வள்ளலார் சொல்லியதோடு அல்லாமல் .எழுதி வைத்ததோடு அல்லாமல் வடலூரில் சத்திய  தருமச்சாலையை தோற்றி  வைத்து உள்ளார் .

உலகில் மக்கள் பட்டினி,பசி ,பிணி.
இச்சை.எளிமை.பயம் .கொலை..
வறுமை.முதலியவைகளால்
துன்பம் அடைந்து  வாடி வதங்கி அல்லல் அவதிப்பட்டு அலைந்து  தங்கள்  உயிர்களை இழந்து மாண்டு  கொண்டு உள்ளார்கள் ,,அதுவும் தமிழ் நாட்டில் வள்ளலார் கண்முன்னே இந்தக் கொடுமைகள் நடந்து கொண்டு இருந்தன .

அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் . .

1867-5-23,24,25,ஆம் நாள் தமிழ் வருடம் பிரபவ வருடம் வைகாசி திங்கள்  11,ஆம் நாள் வியாழக்கிழமை அன்று  ..வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை''நிறுவினார் வள்ளலார் ..

அன்றே ஜீவ காருண்யத்தின் முக்கியத்தை ,அதன் விளக்கமான , ஜீவ காருண்ய ஒழுக்கத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் ஜீவ காருண்ய ஒழுக்கம் என்னும் முதற் பிரிவாகிய நூலை வெளியிட்டார்.
அப்பகுதியை சிதம்பரம் வேங்கட சுப்பு தீஷிதர் அவர்களைக் கொண்டு வழிபாடு முதலியன செய்வித்து அதனை வாசிக்க செய்தார் .

சத்திய தருமச்சாலை ஸ்தாபித்த நாள் தொடங்கி மூன்று நாட்கள் வரை ஒவ்வொரு நாட்களிலும்,16,பதினாறு ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு அன்னம் அளிக்கப் பட்டது.அத்துடன் நிற்காமல் ,
எப்பொழுதும் அந்த சத்திய தருமச்சாலையை நோக்கிப் பசியோடு வருபவர்களுக்கு எவ்விதக் குறைவும் இலாது அன்னதானம் ,
வள்ளலார் கட்டளைப்படி நடந்தேறி வருகின்றது .''
எப்போதும் அடுப்பு அணையாமல் புகைந்து கொண்டே இருக்க வேண்டும் ''என்ற வள்ளல்பெருமான் வாக்கின்படி இன்று வரை அவ்வாறே நடந்து கொண்டு  வருவது அனைவரும் அறிந்ததே !

வருகின்ற 25-5-2018,ஆம் நாள் சத்திய  தருமச்சாலை தோற்றுவித்து 152,வது துவக்க விழா வடலூரில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது .அனைவரும் கலந்து கொண்டு ஆன்ம லாபம் பெற வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம் ..
அதுசமயம் மூன்று நாட்கள்,திருஅருட்பா இசைக் கச்சேரியும் நடைபெறுகின்றது.என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பசியின் கொடுமை !

ஜீவ காருண்ய ஒழுக்கத்தின் முக்கியமான பகுதியை வள்ளலார் தெரிவிப்பது !

கல்வி கேள்விகளால் பகுத்து அறியத்தக்க அறிவுடைய உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் வந்தனம் செய்து அறிவிக்கை வெளியிடப்பட்டது ;---

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க பிரயோசனத்தைக் காலம் உள்ள போதே அறிந்து அடைய வேண்டும்.

அந்தப் பிரயோஜனம் யாதோ? எனில் !

எல்லா அண்டங்களையும்.. ,
எப்பாப் புவனங்களையும்,
எல்லாப் பொருள்களையும்,...
எல்லலாச் சீவர்களையும்,////எல்லாச் செயலகளையும், எல்லாப் பயன்களையும்,...தமது பரிபூரண இயற்கை விளக்கமாகிய அருட் சத்தியால் தோன்றி விளங்க விளக்கம் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினாராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று ..எக்காலத்தும் ----எவ்விடத்தும் ....
எவ்விதத்தும் ----எவ்வளவும் ....
தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வை அடைவதே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க பிரயோஜனம் என்று அறிய வேண்டும் ..

இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரிய வாழ்வை எதனால் அடையவேண்டும் ? எனில்.;---

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடைய வேண்டும் .என்று அறிய வேண்டும் ..

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக் கூடும் ? எனில் ;-

ஜீவ காருண்ய ஒழுக்கத்தால் கடவுள் அருளைப் பெற வேண்டுமே அல்லாது வேறு எந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது  என்று உறுதியாக அறிதல் வேண்டும்.

ஜீவ காருண்யத்தின் முக்கிய லட்சியம் ஆவது எது ? எனில் ;---

எந்த வகையாலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்கு உண்டாகின்ற பசி என்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்விக்கின்றதே  முக்கிய லட்சியம் என்று அறிய வேண்டும்

பசியின் கொடுமை ;-- உலகம் முழுவதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனுக்கும் ---
உலகம் முழுவதும் ஒரு நிமிஷத்தில் வெல்லத்தக்க சுத்த வீரனுக்கும் ---மூன்று ஆசைகளையும் ஒழித்து உண்மை அறிந்து பிரம்ம அனுபவத்தைப் பெற்ற ஜீவன் முத்தர்களுக்கும்,பசி நேரிட்ட போது மனம் இளைத்தும் ----
வலி குலைந்தும் ---அனுபவம் தடைப்பட்டும் ---வருந்துகின்றார்கள் என்றால் எந்த வகையாலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டால் என்ன பாடு படுவார்கள் ..

என்பதை விளக்கி ..அதனுடன் பசி அதிகரித்த காலத்தில் மனித உடம்பில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை வள்ளலார் விளக்குகின்றார் .

முகம் புலர்ந்து போகின்றது !
உச்சி வெதும்புகின்றது !
பிரமரந்த்திரம் அடைபடுகின்றது !
காது கும்மென்று செவிடு படுகின்றது !
கண் பஞ்சடைந்து எரிந்து நீர் உலர்ந்து குழிந்து போகின்றது !
நாசி அழன்று கலைமாறி பெரு மூச்சு விடுகின்றது !
நாக்கு நீர் உலர்ந்து தடிப்பு ஏறுகின்றது !
மெய் முழுதும் கருகி சக்தி அற்று ஸ்மரணை கெடுகின்றது !
வாக்குக் குழறித் தொனி மாறுகின்றது !
கைகளும் கால்களும் தட தடத்துச் சோர்ந்து தடுமாறு கின்றது !
மல சல வழி வெதும்பி வேறுபடுகின்றது !
உரோமம் வெறிக்கின்றது !
பற்கள் கருகித் தளர்கின்றன !
இரத்தமும் சலமும் சுவறுகின்றது !
சுக்கிலம் தன்மை மாறி வரளுகின்றது !
எலும்புகள் குழைந்து நோக்காடு உண்டாகின்றது !
நாடி நரம்புகள் வலி இழந்து மெலிந்து கட்டுவிக்கின்றது !
வயிறு பகீர் என்கின்றது !
மனம் தளர்ந்து நினைவு மாறுகின்றது !
புத்தி கெட்டு நிலை மாறுகின்றது !
சித்தம் கலங்கிப் திகைப்பு ஏறுகின்றது !
அகங்காரம் குலைந்து அச்சம் உண்டாகின்றது !
பிரகிருதி சுருங்குகின்றது !

கடவுள் விளக்கமும் ஆன்ம விளக்கமும் மறைபடுகின்றது ---
தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன ,

இவ்வளவு அவத்தைகளும் எக்காலத்திலும் உண்டாகின்றன ,இது எல்லாச் சீவர்களுக்கும் பொதுவாகவே இருக்கின்றது .

ஆகாரம் உண்டு பசி நீங்கிய தருணத்தில் தத்துவங்கள் எல்லாம் தழைத்தது ''கடவுள் விளக்கமும் ,ஆன்ம விளக்கமும்'' அகத்திலும் முகத்திலும்,வெளிப்பட்டு திருப்தி இன்பம் உண்டாகின்றது .

ஆகலில் இந்த ஜீவ காருண்ய ஒழுக்கத்தை நடத்தும் பொருட்டு கடலூர் மாவட்டம் கூடலூர் தாலுக்காவைச் சார்ந்த ''வடலூர் என்கின்ற பார்வதி புரத்தில்'' ,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை'' என்று ஒரு தருமச்சாலை ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது .

அது பலர் சகாயத்தினாலேயே நிலை பெற வேண்டும் ஆதலால் ,ஜீவ தயவு உடைய புண்ணியர்கள் தங்கள் தங்களால் கூடிய வரையில் பொருள் முதலிய உதவி செய்து ''அதனால் வரும் லாபத்தைப் பாகம் செய்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை'';--

இங்கனம்
பிரபவ ஆண்டு வைகாசி திங்கள் 11.நாள்
சத்திய தருமச்சாலை
வடலூர் .... 

மேலே கண்டபடி ஜீவ காருண்ய ஒழுக்கம் என்றால் என்ன ? என்பதைப் பற்றி சுருக்கமாக சத்திய தருமச்சாலை துவங்கிய அன்று மக்களுக்கு  வள்ளலார் தெரிவித்து உள்ளார் .மேலும் முழு விபரங்கள் அடங்கிய விளக்கத்தை  ஜீவ காருண்ய ஒழுக்கம் என்ற நூலில் உள்ளன படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடு தோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர் உறக் கண்டு உள்ளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தனன் !

இந்த ஒரு பாட்டுப் போதும் !

மேலும்

காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளேகளிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே

மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்சாலையிலே

ஒருபகலில் தந்ததனிப் பதியேசமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே

மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே !

என்ற பாடல் வாயிலாக விளக்கி விளக்கம் தந்துள்ளார்..

விரிக்கில் பெருகும் ;--

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896 ...