Saturday, August 31, 2019

Brain death. (Dont kill them)

மூளை சாவு அடைந்தவர்களை அறுத்து விடாதீர்கள் !

மூளை சாவு அடைந்தவர்களை வர்ம மருத்துவத்தின் மூலம் எளிதில் குணமாக்க முடியும்.
தங்களுக்கு தெரிந்து யாரேனும் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

For Further details contact:
Master: S.SIVA KUMAR
MA(yoga)., Msc(varma)., M.phil(varma&yoga), Palm leaf reader., Dip.in.Sidhdha herbal science.,

முகவரி:
யோகாலயம் & வர்மாலயம்,
10/A,எட்டியப்பன் நகர்,
லக்ஷ்மிபுரம் நீடிப்பு,
குலத்தூர், சென்னை-600099.

E-mail: sivakumar0018@gmail.com
Mobile: +91 9444749969, +91 9445687969.

https://www.facebook.com/YogalayamVarmalayam

இப்பதிவை முடிந்த வரை ஷேர் செய்யுங்கள் !

Tamil quotes

*இட்டுக் கெட்டது காது*
*இடாது கெட்டது கண்*
*கேட்டுக் கெட்டது குடி*
*கேளாது கெட்டது கடன்*
*பார்த்துக் கெட்டது பிள்ளை*
*பாராமல் கெட்டது பயிர்*
*உண்டுக் கெட்டது வயிறு*
*உண்ணாமல் கெட்டது உறவு*

விளக்கம் :

குச்சியைச் சதா காதில் விட்டு குடைவதால் காது கெடும் 🌹

மையை இடாததால் கண் கெடும் 🌹

பிறர் சொல்லும் கோள் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்டால்,
குடும்பம் சீரழியும் 🌹

அடிக்கடி கேட்காததால் கடன் திரும்பி வராமல் அழியும் 🌹

தயவு தாட்சண்ணியம் பார்த்துக் கண்டிக்காமல் இருந்தால்
பிள்ளைகள் திருந்தாமல் கெட்டுப் போவார்கள் 🌹

அடிக்கடி போய் பார்க்க வில்லையானால் பயிர் கெடும் 🌹

அடிக்கடி உண்பதால் வயிறு கெடும் 🌹

உறவினர் வீடுகளில் விசேஷக் காலங்களில்
நாம் கலந்துக் கொண்டு உணவு உண்ணவில்லையானால்
உறவினர் நட்புக் கெடும்.🌹

Saturday, August 3, 2019

Thursday, August 1, 2019

Suicide. Thoughts. Remedy

மனம் குழப்பத்தில் இருக்கும்போது நம் ஒன்றும் செய்ய வேண்டாம்.

அதை அப்படியே விட்டு விடுங்கள்.

சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும்.

நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்.

அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும்.

நடக்கும்.

கண்ணதாசனின் அர்த்தமுள்ள

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்-Part-26

🌸
பக்குவம்
🌸
”பக்குவம்” என்பது என்ன?
ஒரு  மனிதன் பக்குவம்  அடைவதற்கு முன் உள்ள நிலை என்னஃ?
அடைந்த பின் காணும் நிலை என்ன?
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், சில அற்புதமான உவமைகளைக் கூறுகிறார்.
ஒன்று-
குடத்தில் தண்ணீர் மொள்ளும் போது”பக்பக்” கென்று சத்தம் உண்டாகிறது.
குடம் நிரம்பியதும் அச்சத்தம் நின்று விடுகிறது.
இரண்டு-
ஒரு வீட்டில் விருந்துக்குப் பலரை அழைத்தால் முதல் முதலில் அவர்கள் போடும் சத்தம் அதிகமாக இருக்கும்.
சாப்பிட உட்காரும் வரையில் அச்சத்தம் இருக்கும்.
இலையில் அன்னம் பரிமாறும விருந்தினர்கள் சாப்பிடத் தொடங்கியதும், முக்கால்வாசிச் சத்தம் நின்றுவிடும்.
கடைசியாகத் தயிர் பரிமாறும் போது அதை உண்ணும் ”உஸ், உஸ் என்ற சத்தம் தான் கேட்கும்.
மூன்று-
தேனீயானது, மலரில் உள்ளே இருக்கும் தேனையடையாமல் இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் பண்ணிக்கொண்டு பூவைச்சுற்றிச் சுற்றி வரும்.
ஆனால் பூவுக்குள் நுழைந்துவிட்டால், சத்தம் செய்யாமல் தேனைக் குடிக்கும்.
நான்கு- புதிதாக வேறு மொழியைக் கற்று கொள்பவன் தான் பேசும் போதெல்லாம் அம்மொழியின் வார்த்தைகளை உபயோகித்துத் தனது புது ஈடுபாட்டைக் காட்டிக் கொள்வான்.
அந்த மொழியில் விற்பன்னனோ, தன் தாய் மொழியில் பேசும்போது, அந்த மொழி வார்த்தைகளை உபயோகிப்பதில்லை.
ஐந்து-
ஒரு மனிதன் சந்தைக்கடைக்கு வெகு தூரத்தில் இருக்கும் போது உருத் தெரியாத ”ஓ” என்ற சத்தத்தை மட்டும் கேட்கிறான்.
ஆனால் அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக்கிழங்கிற்கும், மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் பேரம் பண்ணுவதைத் தெளிவாகக் கேட்கிறான்.
ஆறு-
சுடாத  மாவுப்பலகாரம் ஒன்றைக் கொதித்துக்கொண்டிருக்கும் நெய்யில் போட்டால், முதலில் ”பட்பட்” என்ற சத்தம் உண்டாகும்.
அந்தப்பலகாரம் வேக வேக அதன் சத்தம் குறையும்.
முற்றிலும் வெந்தவுடன் சத்தமே கேட்காது.
பக்குவமற்ற நிலைக்கும் பக்குவ நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பகவான் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார்.
🌸
கல்லூரியில் படிக்கும்போது ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.
கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வாரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்கு ப் புரிகிறது.
இளமைக்காலத்து ஆரவாரம் முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.
ஒவ்வொரு துறையிலும் நிதானம் வருகிறது.
🌸
இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத்தோன்றும்.
வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து  ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில்படும்.
🌸
பக்குவமற்றவனுக்கு நாத்திகம்.அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.
பக்குவம் வர,வர ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள்  எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.
நடைமுறைக்கு ஒத்த சிந்தனை,பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.
🌸
இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச்சொன்னால் எல்லாப்பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த் தான் தெரிவார்கள்.
நாற்பது வயதிற்கு மேலே தான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.
🌸
கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால், காதல் கதையையும் மர்மக் கதையையும் படிப்பதில் தான் அவன் கவனம் செலுத்துவான்.
காதலித்துத் தோற்றபின் தான் அவனுக்குப் பகவத்கீதைப் படிக்கும் எண்ணம் வரும்.
🌸
விளையாட்டுத்தனமான மனோபாவம்  பிடிவாதத்திற்குப் பெயர் போனது.
எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு, அதைவிட உலகமே கிடையாது என்று வாதாடும்.
எதிர்த்தால் வேரொடு பிடுங்க முயலும்.
பக்குவமற்ற நிலை என்பது இரண்டு ”எக்ஸ்ட்ரீம்” நிலை.
ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில்  இருந்து குதிக்கும்.
பக்குவ நிலைக்குப் பெயரே நடுநிலை.
மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.
🌸
இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி. முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்.
இது தான் அந்தப் பழமொழி.
🌸
பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப்போனால்  தெய்வம் தெரியாது. என்பது மட்டுமல்ல.அங்கே சிலையில் இருக்கும் அழகு கூடத்தெரியாது.
ஐம்பது வயதில் கோயிலுக்குப்போனால் சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.
இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம்  மட்டுமில்லை.
பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.
ஏன் உடம்பே  கூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.
நாற்பதிற்கு மேலே தானே ”இது வாய்வு””இது பித்தம்” என்கிற புத்தி வருகிறது.
🌸
டென்ஷன்” என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப்புரியவில்லை.
முறுக்கான நிலை” என்று அதைக்கூறலாம்.
அந்த நிலையில் ”எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்” என்கிற திமிர்” வருகிறது.
அதில்  நன்கு அனுபவப்பட்ட பிறகு, இதைத்தான் செய்யலாம், இப்படித்தான் செய்யலாம் என்ற புத்தி வருகிறது.
இனி விஷயத்திற்கு வருகிறேன்.
🌸
ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்” என்பதைக் கூறவே இவற்றைக்கூறினேன்.
உள்ளம் உடலுக்குத்தாவி உடல், ஆன்மாவுக்குத் தாவிய நிலையே பக்குவப்பட்ட நிலை.
தேளைப்பிடிக்க போகும் குழந்தை அதையே அடிக்கப்போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.
அதற்குப்பிறகு அந்தத்தேளிடமே கூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.
🌸
இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால்,எனது அரசியலில் கூட முரண்பாடு தோன்றியிருக்காது.
வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப்போகிறது.
ஆரம்பத்தில் இது தான் சரி” என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு பின்னால் ”இது தவறு” என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய WHATSAPP 9789374109