Sunday, April 14, 2019

Bribe. Story.

*ஒரு மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் நாலாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அதன் நிர்வாக இயக்குனர் மீது குற்றம்* *சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார் !*
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
நீதிபதிக்கு அவரது அலங்கோலமான நிலை, உறக்கமின்றி சிவந்த  கண்கள், அவமானத்தால் கூனிக்குருகி, நின்றவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது !

*"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?''*

*"இல்லை*' என்று தலையாட்டினார் இயக்குனர்.

நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.

இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது.

"பரவாயில்லை. இங்கேயே அமர்ந்து நிதானமாக  சாப்பிடுங்கள்.

அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன். என்றார் நீதிபதி.

இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிடவே முடியவில்லை.

பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டிருந்தார் இயக்குநர்.

"என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்?

சாப்பிடுங்கள்.''

என்றார் நீதிபதி.

"முடியவில்லை ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை.''

என்றார் இயக்குநர்.

"பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான்.

அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை.

இதற்காகவா நீங்கள்
நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்?

மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. ஆடம்பர தேவைகள்தான் அதிகம்.

*உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது.

அதற்கு நான்கு இட்லியே அதிகம்.*

*உங்கள் ஆடம்பரத் தேவைக்கு நான்காயிரம் கோடி என்ன...

நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..''*

இயக்குனர் பெரிதாக குலுங்கி அழ ஆரம்பித்தார்.

அவர் மீதம் வைத்த *அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டுமல்ல ,

நமக்கும் தான்*

கொலை, கொள்ளை;  லஞ்ச ஊழல் தான் பாவம் என்றில்லை.

வரிசையில் நம்பிக்கையுடன் உணவுக்காகவோ,உத்யோகத்திற்கோ
நிற்பவர்களை புறம் தள்ளி குறுக்கு வழியில் சென்றடைவது,

வசதி வாய்ப்புகள் இல்லாத நெருங்கிய உறவுகளிடம் அவர்களை ஒதுக்கி விட்டு,

உங்கள் வசதிக்கு ஏற்ப வேறு இடத்தில் முடிப்பது,

பசி மற்றும் பணகஷ்டத்தோடு, இருப்பவர்களுக்கு ஆதரவு தருவது போல் ஆசை காட்டி உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும்போது, ஒன்றும் செய்யாமல்
ஒதுங்கி நிற்பது,

இது போன்ற பல வழிகளில் பாவங்களை செய்துவிட்டு,

புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று பரிகாரம் என முயற்சிப்பது பெரும்பாவம்.

அது கடப்பாரையை முழுங்கி விட்டு சுக்கு கசாயம் குடிக்கிற மாதிரி,

சந்தோஷத்திலே பெரிய சந்தோஷம்,

நம்மருகில் நம்முடன், நம்மை சுற்றி உள்ளவரை,

சந்தோஷப்படுத்தி பாருங்கள்.

உதவி பெற்றவர்கள் ஆண்டவரிடம்,

ஆண்டவா.....

எங்கள் ஆயுட்காலத்தை குறைத்து,

எங்களுக்கு உதவிபுரிந்தவருக்கு நீண்ட ஆயுளைக்கொடு,

ஏனெனில் எங்களை போன்றவர்களுக்கு அவர் நெடுங்காலம் உதவவேண்டும் என வேண்டுவார்கள்.

பிறகு பாருங்கள்.

ஆரோக்கியம் கூடும், ஆனந்தம் பெருகும்,

ஏன், ஆண்டவனே,

" யாருப்பா இது நாம செய்ய வேண்டிய வேலையை தானாகவே செய்றது " என்று
உங்களை ஆண்டவனே,

ரசிப்பான்.

ரட்சிப்பான்.

நாம் யாரும் 200 ஆண்டுகள் வாழ போவதில்லை. அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லை.

உங்கள் தேவைக்கு வைத்துக்கொண்டு மீதியை இல்லாதவர் களுக்கு உதவி செய்யுங்கள்.

உங்கள் இல்லம் ஆலயமாகும்.

நீங்களே இறைவனாவீர்கள்.

சதா சர்வகாலமும் ஆண்டவரிடமும் எதையாவது ஒன்றை பிச்சையாக வேண்டி பெற்று கொள்ள மட்டுமே முயற்சிக்கிறோம்.

ஒரு நாளாவது நம்மிடம்  மீதமுள்ள உணவையோ, உடையோ இல்லாதவர்களை தேடிசென்று கொடுத்து பாருங்கள்!

கர்ணனாக ஆவீர்கள்

அகம் அழகு பெறும்,
முகம் பொலிவு பெறும் தர்ம சிந்தனை மேலோங்கும்.

No comments:

Post a Comment