Thursday, December 8, 2016

தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு

👤📝
மனோபாவங்களில் மாறுதல்களை ஏற்படுத்த வேண்டும். வீழ்ச்சியுற்றுக் கிடக்கும் மனம் எழுச்சி பெற வேண்டும். என்னால் முடியாது என்ற மனோநிலையை மாற்றிக் கொண்டு என்னால் முடியும் என்ற மனோநிலைக்கு வரவேண்டும். தளர்ந்த நிலையை மாற்றி உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.உற்சாகமான மனோபாவம் தன்னம்பிக்கையை கைநீட்டி வரவேற்கும். உற்சாகமான மனநிலை இல்லாமல் எந்த வெற்றியும் அரும் பெரும் சாதனைகளும் சாத்தியமில்லை. குழந்தை எழுந்து நடக்கும் போது கீழே விழுந்தால் எழுந்து நடக்கச்சொல்லி உற்சாகப் படுத்தும் பெரியவர்கள், குழந்தை எழும் பின் விழும் மீண்டும் எழும் என்று உறுதியாக நம்புவதால் நடக்கும் முயற்சியில் குழந்தை தோற்று விடும் என்பதை நம்புவதே இல்லை. ஆனால் ஓர் இளைஞன் எடுத்த முயற்சியில் தோல்வி கண்டுவிட்டால் அதே பெரியவர்கள் தோல்வி அடைவான் என்று முன்பே எனக்கு தெரியும் என்கிறார்கள். இது தவறான மனோபாவம். விழுந்த குழந்தை எழுந்து நடப்பது போல் தோல்வியுற்றவர்கள் வெற்றி பெற முடியும். இதற்கு தோல்விகண்டவனைப் பார்த்து “தம்பி தோல்வி ஒன்றும் நிரந்தரமானதல்ல, உன்னால் வெற்றி பெற முடியும்” என்ற நம்பிக்கை ஊட்டினால் தோல்வி கண்ட இளைஞன் வெற்றி பெற முடியும். இந்நிலைக்கு பெரியவர்கள் தங்கள் மனோநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

  ‘விழுந்தவன் விழுந்தவன் தான் என்பது ஒரு மனோபாவம்

  விழுந்தவன் எழுவான், வெற்றி பெறுவான் என்பது இன்னொரு மனோபாவம்.

  மனோபாவங்கள் மாறுபடும் போது அதற்கு ஏற்ப தன்னம்பிக்கையும் வளர்கிறது.’

ஆங்கிலப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவன் தன்னால் இந்த முறை ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்று எண்ணுவதை கைவிட்டுத் தேர்ச்சி பெறுவதற்குரிய மதிபெண்கள் பெறமுடியும் என்று தன்னுடைய மனோநிலையை தயார் செய்து கொண்டு ஆங்கிலப் பாடத்தை பயில்வதும் பின்னர் அதே பாடத்தில் கூடுதல் மதிப்பெண் பெறமுடியும் என மாணவன் தன் மனோபாவத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

  தனது மனோபாவத்தை படிப்படியாக தன்னம்பிக்கையை நோக்கிச் செலுத்தும்போது மனோபாவ மாறுதல் தன்னம்பிக்கை வளர்க்கும் வழியாக அமைந்து விடுகிறது.
👤📝 *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

No comments:

Post a Comment