Wednesday, April 5, 2017

குழந்தை ஊனமாகப்பிறக்க சோதிடத்திலும்,திருமூலரின் திருமந்திரத்திலும் கூறப்படும் காரணங்கள்    

குழந்தை ஊனமாகப்பிறக்க சோதிடத்திலும்,திருமூலரின் திருமந்திரத்திலும் கூறப்படும் காரணங்கள்     ================================

கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை ஏற்பட்டால்
பிரசவத்துக்கு முன்பாகவே கரு கலைந்து
விடுவது.போதிய வளர்ச்சி இல்லாத குழந்தை
பிறப்பது, குறைபிரசவம், பொய்யாக பிரசவ
வலி தோன்றுவது, நஞ்சுக்கொடி இடம்
மாறிவிடுவது பிரசவத்தின் போது தாய்
இறந்து விடுவது ஆகிய கொடிய விளைவுகள்
ஏற்படலாம். கர்ப்பிணிக்கு வைட்டமின் பி-12
ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துகளில்
குறைபாடு இருந்தால் குழந்தை ஊனமாக
பிறக்க வாய்ப்புள்ளது.

சோதிடம்
***********

1. சனி ஓரையில் கர்ப்பம் தரித்தல், அமாவாசை,
கிரகண காலத்தில் மேற்கொள்ளப்படும்
சேர்க்கையால் உருவாகும் கருவும்
ஊனமுற்றதாக இருக்கும் என ஜோதிட நூல்கள்
கூறுகின்றன.

2, கர்ப்பகாலத்தில் தம்பதிகளுக்கு ஏழரைச் சனி
நடந்தாலும், சனி தசை அல்லது கேது தசை
அல்லது 6-ஆம் அதிபதியின் தசை அல்லது 8-
க்கு உரியவரின் தசை அல்லது 6-க்கு
உரியவரின் புக்தி நடந்தாலும் குழந்தைகள்
ஊனமுற்றதாகப் பிறக்கும்.

3. புத்திரகாரகன் வியாழன் கிரகம், புதனின்
வீடுகளாகிய மிதுனம், கன்னியில்
அமர்ந்திருந்து, புத்திர ஸ்தானாதிபதியும்
பலவீனமாக இருந்தால் ஊனமுற்ற குழந்தைகள்
பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.

திருமூலரின் திருமந்திரத்தில்
******************************

பாய்கின்ற வாயுக் குறையின் குறள் ஆகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே.
(திருமந்திரம் 480)

480. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவுக்கு
ஏற்பக் குழந்தையின் அங்கம் அமைதல்:
சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு
குறைந்திடின் குழந்தையானது குட்டையாய்ப்
பிறக்கும். பாயும் வாயு மெலிந்திடின்
முடமாகும். அவ்வாயு தடைப்பட்டால்
குழந்தை கூனாய்ப் பிறக்கும். ஆனால்,
ஆராய்ந்து பார்த்தால், பெண்களுக்கு வாயு
இல்லை.

மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம்
மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம்
மாதா உதரம் இரண்டு ஒக்கின் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.
(திருமந்திரம் 481)

481. கரு வளரும் காலத்தில் தாயின் வயிறு
இருக்க வேண்டிய நிலைமை :
அன்னையின் வயிற்றில் கருவாக அமைந்த
குழந்தைக்கு அந்த அன்னையின் வயிற்றில்
மலம் மிகுமானால் அக்குழந்தை மந்த
புத்தியுடையதாய் விளங்கும். அவள்
வயிற்றில் நீர் மிகுமானால் அந்தக் குழந்தை
ஊமையாய் விடும். மலமும் நீரும் மிகுந்து
இருக்குமானால் அக்குழந்தை குருடாகிவிடும்.

No comments:

Post a Comment