Wednesday, April 5, 2017

யோகாவும் = வணிகமும்

**
*******************************
இந்தியாவிலும், தமிழகத்திலும் *யோகா* பயிற்சி நிலையங்களுக்கு பஞ்சமே இல்லை.

யோகா பயிற்சி நிலையம் என்ற பெயரில் "யோகா" கற்றுத்தரப்படும் இந்த நிறுவனங்களில் என்ன மாதிரியான யோகா கற்றுத்தரப்படுகிறது என்று முன்னதாகவே யாரும் விசாரிப்பது இல்லை.

விசாரித்தாலும், "நீங்கள் அங்கு வந்து பாருங்கள், மெய் சிலிர்த்து விடுவீர்கள்" என்று பொத்தாம் பொதுவாக விளம்பரம் செய்வார்கள்.

அங்கே கற்றுத்தரப்படுவது தான் நம் *பதினெட்டு சித்தர்கள்* சொன்ன உண்மையான யோகாவா? என்று விசாரிப்பதும் இல்லை, நூல்களைத் தேடிப் படிப்பதும் இல்லை.

முடிவாக ஏதோ ஒரு முடிவெடுத்து, பாடுபட்டு ஈட்டிய பணத்தைக் கொண்டு போய் கொட்டி விட்டு, கொஞ்சம் நேரம் *ரிக்கார்டு டான்ஸ்* ஆடிவிட்டு, கொஞ்சம் சிரிப்பாய் சிரித்துவிட்டு, அங்கே விற்கப்படும் *அவர்களின் உற்பத்தி பொருள்களுக்கு* சில பல ஆயிரம் பணத்தை செலவிட்டு வாங்கி வீட்டுக்கு வந்த சில நாட்களில் *மீண்டும் மனதில் சஞ்சலம்* குடிகொள்ள, மீண்டும் யோகா மறுபயிற்சிக்கு முன்பணம் கட்டி..., பணம் கட்டி....., கட்டி....., ஒரு நாள் நம் தலைவிதி அவ்வளவு தான் என்று முடிவு கட்டி..... யோகாவை தலைமுழுகியவர்கள் தான் ஏராளம், ஏராளம்.

கடைசியில் பார்த்தால் *யோகா பயிற்சி நிலையங்கள்* எல்லாம் *டிரேட்மார்க் வணிக நிறுவனங்களாக* சாதாரண மக்கள்  உள்ளே நுழைய முடியாத அளவுக்கு, VVIP அந்தஸ்து பெற்ற பெரும்புள்ளிகள் மட்டுமே சென்று வரக்கூடிய *கார்ப்பரேட் நிறுவனம்* ஆக மாறிவிடுகிறது.

இவற்றிற்கிடையே *யோகக்கலை* என்பது அனைத்து மக்களுக்குமானது தான் என்ற உன்னதமான குறிக்கோளுடன் *குருவின் நோக்கம் சிறிதும் சிதையாமல்* இன்றும் தொடர்ந்து சேவை செய்து வருகின்றார்கள்.

அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியது தான் *மனவளக்கலை யோகா* என்பது.

14-08-1911 அன்று தோன்றி 26-03-2006 வரை 95 ஆண்டுகள் வாழ்ந்து சமாதி அடைந்த *அருட்தந்தை வேதாத்திரி மாமுனிவர்* அவர்கள் *1958 ஆம் ஆண்டு உலக சமுதாய சேவா சங்கத்தை* தோற்றுவித்து *மனவளக்கலை யோகா* பயிற்சிகளை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

இன்று வரை *குருகாணிக்கையாக ஒரு சிறிய தொகை*யை ஒரே ஒரு முறை மட்டுமே பெற்று கொண்டு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இந்தியாவிலும், பல வெளிநாடுகளிலும் அரசாங்கத்தின் அனுமதியுடன் *பல்கலைக்கழக பட்டப்படிப்பு கல்வியாக மனவளக்கலை யோகா* பயிற்றுவிக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக இயங்கி வரும் *உலக சமுதாய சேவா சங்கத்தின் பெயரிலோ, மனவளக்கலை யோகாவின் பெயரிலோ எந்தவிதமான வணிகமும் நடைபெறவில்லை.*

ஆகவே போலியான *யோகா விளம்பரங்களை* நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

*யோகா என்பது ஆன்ம விடுதலைக்கான* ஓர் அற்புதமான வாழ்க்கை முறை.

*பயிற்சி,* *முயற்சி,* *வளர்ச்சி,* *விடுதலை.*

*நீடித்த நிரந்தர ஏற்புத்திறனுடன் கூடிய மனநிறைவு தான் ஆன்ம விடுதலை* ஆகும்.

*பிற அனைத்தும் ஆரவாரத்தன்மை உடையதாகும்.*
நன்றி! வணக்கம்!!

வாழ்க வையகம் !        வாழ்க வளமுடன் !!

அன்புடன்:  Vasan Suruli 25-02-2017; 12.55pm

No comments:

Post a Comment