Wednesday, April 5, 2017

உடல் எடை பராமரிப்பு எப்படி?*

*உடல் எடை பராமரிப்பு எப்படி?*
*********************************
பெண்ணோ, ஆணோ... உங்கள் உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க விரும்புகிறீர்களா? ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் பட்டினி கிடப்பதால், ஒர்க்கவுட் செய்வதால், தினம் 5 கிமீ ஓடுவதால், காலை வெறும் வயிற்றில் அந்த ஃபிட்னஸ் செண்டர் சென்று அவர்கள் கொடுக்கும் பழச்சாற்றினை அருந்துவதால், டிவி யில் விற்பனை செய்யும் பெல்ட் அணிவதால், வைப்ரேட்டிங்க் மிஷின் வைப்பதால் என இவை எதனாலும் உங்களுக்கான இயற்கையான, வாகான, ஆற்றல் மிக்க உடலை பெற்றுவிட முடியாது.

அப்ப என்ன செய்ய? அப்படின் கேட்கிறீர்கள்... செலவு செய்வதை நிறுத்தி விட்டு, இன்றைய உங்கள் எடையை குறித்து கொள்ளுங்கள் அடுத்த பதினைந்து நாட்களுக்கு பின்வரும் படி நிலைகளை பின்பற்றுங்கள் 16 வது நாள் உங்கள் எடையை பார்க்க தேவையில்லை, உங்கள் மனமே சொல்லும் இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே என....

1. பால், பால்-டீ, பால்-காபி மற்றும் பால் கலந்த உணவு பொருட்களை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள் (ப்ளாக் டீ, காபி ஓகே)
2. பசி இல்லாத போது வாய்க்குள் எதையும் அனுமதிக்காதீர்கள், நொறுக்கு தீனிகள் உட்பட.
3. நன்றாக பசித்த பின்னர் பிடித்த உணவை, நன்றாக சுவைத்து சாப்பிடுங்கள், பசி அடங்கியதும் சாப்பிடுவதை நிறுத்துங்கள். வீணாகி விடுமே என குப்பையில் கொட்ட வேண்டியதை உங்கள் வயிற்றில் கொட்டி வயிற்றை குப்பை தொட்டி ஆக்கிவிடாதீர்கள்.
4. மூன்று வேளையும் மணி அடித்தால் சாப்பிடும் கொடிய பழக்கத்தை கைவிடுங்கள், பசிக்கிறதா என கேளுங்கள்.
5. டிவி பார்த்து கொண்டோ, புத்தகம் படித்து கொண்டோ, பேசி கொண்டோ எதையும் உண்ணாதீர்கள்
6. கதிரவன் மறைந்த பின்னர் சமைத்த உணவை உண்ணாதீர்கள், இரவு உணவை மாலை 6.30 மணிக்குள் முடியுங்கள் அப்போதும் பசி இருந்தால் மட்டும் உண்ணுங்கள்.

  அய்யய்யோ என பதறாதீர்கள், உங்களை பட்டினி கிடக்க சொல்லவில்லை, சமைத்த உணவை தான் உண்ண வேண்டாம் என கூறுகிறேன், கதிரவன் மறைந்த பின்னர் பசித்தால் அ. பழங்கள் ஆ. பழச்சாறு இ. சூப் இவைகளை மட்டும் உங்களுக்கு பசிக்கின்ற அளவு தாராளமாக உண்ணுங்கள்.

   இவற்றில் எல்லாற்றையும் கடைபிடிக்க முடியாவிட்டாலும் கடைசியாக சொன்னதை மட்டுமாவது செய்யுங்கள். இதனால் செரிமானம் மேம்படும், ஆற்றல் மிக்கவராக திகழ்வீர்கள், அதிகாலையில் எழ முடியும் மேலும் உங்கள் உடல் வசீகரமானதாக மாறிவிடும். ஒரு பதினைந்து நாட்கள் முயற்சித்து தான் பாருங்களேன், உங்களுக்கும் மாலை 7 மணிக்கே சமையலறையிலிருந்து விடுதலை கிடைத்தால் மகிழ்ச்சிதானே.

ஹீலர்.இஸ்மாயீல்

No comments:

Post a Comment