Monday, April 10, 2017

மகரிஷி ஒருமுறை இரவில் நடந்

மகரிஷி ஒருமுறை இரவில் நடந்து செல்லும்போது வெளிச்சமில்லாத இடத்தில் தவறுதலாக மலத்தை மிதித்துவிடுகிறார்.அப்போது அவருக்கு முகம்சுழிக்கும்படி ஆகிவிட்டது.உடனே சுதாரித்துகொண்டு கவனிக்கிறார்,மலம் இவரைநோக்கி பேசுவதாக உணருகிறார்.

என்னை மிதித்து விட்ட ஒரே காரணத்திற்காக இப்படி அருவறுப்பு படுகிறாயே,நேற்றுவரை நான் எல்லோரும் விரும்பும் ஒரு சுவையான உணவாகத்தான் இருந்தேன்.எப்போது ஒரு மனிதனுக்குள் நுழைந்தேனோ இப்படி நீங்கள் வெறுக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேன்.

நான் இந்தநிலைக்கு ஆனதுக்கு நான் காரணமா?நீங்கள் காரணமா? இன்றோ நாளையோ வெயில்/மழையில் நான் தூய்மை ஆகிவிடுவேன்.நீ தூய்மையாவது எப்போது என்று கேட்டதாம்.

அன்றுமுதல் மகரிஷி அவர்கள் அருவறுப்பு படுவதையே நிறுத்திவிட்டாராம்.இதை அய்யாவே குறிப்பிட்டுள்ளார்.நாம் புற அழுக்கை மட்டுமே சிந்தித்துகொண்டு இருப்பதால்தான் இத்தனை வாசனை திரவிய நிறுவனங்கள் கல்லா கட்டுகின்றன.நம்மை பொறுத்த வரையில்  புற உடல் அழகாகவும்.வாசனையாகவும் இருந்தால் அவர் தூய்மையானவர்.நாகரீகமானவர் என்று ஒரு மாயையை தோற்றுவித்துள்ளோம்.அப்படி நல்ல உடையும் நல்ல பர்சனால்ட்டியும் இல்லாதவரை கண்டால் விரும்பமாட்டோம்.அல்லது விலகி கொள்வோம்.காரணம் சுத்தம் இல்லாதவர்.உண்மையில் ஒரு மனிதன் சுத்தமில்லாதவன் என்பது அவனது தோலின் நிறம்,உடுத்தும் உடை,பூசிக்கொள்ளும் வாசனை திரவியங்கள் இவற்றை வைத்தா நிர்னயக்கபடுகிறது?.அப்படி நிர்னயத்தால் அறியாமையில் இருக்கிறோம் என்று அர்த்தமில்லையா? அகத்தின் தூய்மையை வைத்தல்லவா அவனுடைய தூய்மை நிர்னயக்க படவேண்டும்?புறத்தூய்மையை ஒரு ஐம்பது ரூபாயில் ஆக்கிவிட முடியும்.அகத்தை எவ்வாறு தூய்மை ஆக்குவது?

தவம்.அகத்தவம் செய்திடல் வேண்டும்.அகத்தவம்தான் மனிதனை தூய்மையாக்க ஒரே வழி.அகம் அங்கே தூய்மையாக தூய்மையாக நம்முடைய புறமும் தூய்மையாகிவிடுகிறது.ஆகையால் தவம் செய்வோம்.தூய்மை அடைவோம்.

வாழ்க வளமுடன்!!

No comments:

Post a Comment