Wednesday, April 5, 2017

*வாசி யோகம்-7

*
******************

*அடுத்த பயிற்சிசூரிய யோகம் .*
******************************

ஏதுமென்ற பங்குனி சித்திரை இரண்டில்
இதமாக உதயத்தில் ரவியை பாரு
தேருமடா கண் கூசிடாது இளமை வெயில்
தீர்க்கமாய் பிங்கலையில் கண் மூடிப்பரு .
நூறு மடங்காய் அருணன் காந்தி வீசும்
நுனியான சுழி முனையில் உற்று பாரு
பேருபெருன்ச் சுளினைஎலே கண் கெடாது .
பேராக இன்னமொரு சேதி கேளு
அகத்தியர் பூஜா விதி  பாடல்

பொருள்
**********

பங்குனி சித்திரை மதத்தில் சூரியன் உதயமாகும் போது சூரியனை பாருங்கள் . கன்னியா குமரியில் சூரிய உதயம் பார்ப்பது போல் .

கண் கெடாது பின்பு கண்ணை மூடி மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியில் சுவாசியுங்கள் .

அன்நாக்கிற்கு மேல் மனதை நிறுத்தி பாருங்கள் . உள்ளுக்குள் ஒளி தெரியும் ..

தயவு செய்து இதை உடனே செய்ய தீர்கள் த்ரடக செய்து சித்தி ஆனா பின்பு சூரியனை நேரில் பாருங்கள்
யோகதொடக்கம் .

ஆரம்பத்தில் குளித்து மேல் ஆடை இல்லாமல் சூரியன் முன்பு நில்லுங்கள் . ஓம் ந மா சி வ யா என்று 108 முறை சொல்லுங்கள் . .

அல்லது உங்கள் விருப்ப ஜெபம் , மந்திரம் சொல்லுங்கள் சுமார் 7 முதல்  10நிமிடம் செய்தால் போதும் .

இந்த யோகம் சக்தி வாய்ந்தது . ஸ்ரீ ராமர் சூரிய யோகம் செய்து அதித்ய ஹிருதயம் என்ற மந்திரம் ஜெபித்து ராவணனை வென்றார் . சூரிய ஒளி தரும் வைடாமின் டி உணவில் இருந்து கல்சியத்தை பிரித்து உடலின் செல்களுக்கு கொடுக்கும் . கல்சியம் உடலை இளமையாக வைத்திருக்கும் . சூரிய நாடியில் உயிர் சக்தி முழுமையாக பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கும் ..

பின்பு வீட்டிற்குள் வந்து ஒரு கோரை பாய் அல்லது பருத்தி துணிமேல் சம்மணம் இட்டு நிமிர்ந்துஉட்காருங்கள். உங்கள்ளல் எவ்வளவு மூச்சை இரண்டு நாசியிலும் இளுக்க முடியும்மா அவ்வளவு இழுங்கள் . எவ்வளவு நேரம் நிறுத்த முடியுமோ நிறுத்துங்கள் . பின்பு வெளிவிடுங்கள் இப்படி 7 முறை செய்யுங்கள் .. இப்படி 10 நாட்கள் செய்யுங்கள் .

இதை செய்தாலே போதும். சூரிய யோக சித்திகள் முழுமையாக கிடைக்க தொடங்கி விடும்.

*தொடரும்*

- *சித்தர்களின் குரல் shiva shangar*

No comments:

Post a Comment