ு!!
இந்தச் சளி பிரச்சனைகளுக்கு, வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய வகையில் தற்காலிகத் தீர்வுகள் சிலவற்றை சத்குரு நமக்கு இங்கே வழங்குகிறார்…
தினம் காலை எழுந்திருக்கும் போதே சளியினால் மூக்கடைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வேம்பு, மிளகு, தேன் மற்றும் மஞ்சள் உட்கொள்வது மிக நல்லது. வேப்ப இலைகளை நன்றாக பசை போல அரைத்து, சின்ன உருண்டையாக உருட்டி, அதை சிறிது தேனில் நனைத்து, தினம் காலை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு வேறு எதுவும் உண்ணக்கூடாது. வேப்பம் முழுவதுமாய் செரிக்க இந்த நேரம் தேவைப்படுகிறது. இது சருமம், உணவு என்று மட்டுமில்லாமல் எல்லா வகையான அலர்ஜிக்கும் வேலை செய்யும். இதை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதிற்கும் தொடரலாம். இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது.
வேப்பம் மிக அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதன் கசப்பை நீங்கள் கொஞ்சம் தவிர்க்க விரும்பினால், இளந்தளைகளை பயன்படுத்தலாம். இல்லையென்றால், பச்சை இலைகளே போதுமானது. 10 அல்லது 12 மிளகுகளை 2 ஸ்பூன் தேனில் இரவு முழுவதும் ஊரவைத்து (8ல் இருந்து 12 மணி நேரம்), அதை காலையில் நீங்கள் உட்கொள்ள வேண்டும். முடிந்தால் மிளகை நீங்கள் மென்று உண்ணலாம். சிறிது மஞ்சளை தேனுடன் கலந்து உண்பதும் கூட வேலை செய்யும். குறிப்பாக பால் சம்பந்தப்பட்ட எல்லா உணவு வகைகளையும் நீங்கள் தவிர்ப்பது, சளி/கோழை உருவாவதை குறைத்துவிடும்.
Read more at : மூக்கடைப்பு போயே போச்சு!! http://isha.sadhguru.org/blog/ta/mookadaippu-poye-pochu/
No comments:
Post a Comment