#.!!!
சிலகேள்விகளை கேட்கிறேன் தயவுசெய்து அதற்கு தங்கள் பொன்னான பதிலை எதிர்பார்க்கிறேன்
#வெயிலிலும் மழையிலும் எந்நேரம் என்று பாராமல் கால்கடுக்க நின்று உங்களுக்கு பாதுகாப்பு பணிசெய்கிறோமே.
எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து எங்காவது அமைதியாக நிற்கிறீங்களா?
#நீங்க நிம்மதியா குடும்பத்துடன் இரவில் தூங்குவதற்காக நாங்கள் இரவு தூக்கம் என்பதையே மறந்து இரவை பகலாக நினைத்து பணிசெய்கிறோம் என்றாவது இதை எண்ணியதுன்டா ?
#காலை உணவை மதியமும் மதியம் உணவை இரவும் இரவு உணவு விடிந்தே விடும் நேரத்தில் கண்ட இடத்திலும் நேரந்தவறி உண்டு
உடம்பில் ஆயிரத்தெட்டு நோய்கள் வந்தும் நின்று கொண்டே பணிசெய்கிறோம்,
நீங்கள் ஒருநாள் நேரம் தவறி சாப்பிடுங்களேன் பார்க்கலாம்?
#எங்களை மனிதநேயமற்றவர்கள் என்று பேசுகிறீர்கள் ரவுடிகளிடமும் கொலையாளிகளிடமும் கண்ணே மணியே என்று விசாரணை செய்யமுடியுமா நீங்கள் செய்வீர்களா?
#தினம் தினம் ரவுடிகள் கொலையாளிகள் பயங்கரவாதிகள் எங்களை அடிமைப்படுத்தும் அரசியல்வாதிகள் மூஞ்சை பார்த்துகொண்டு நிம்மதியில்லாமல் மன உளைச்சலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உங்களால் ஒருநாள் இவர்களிடம் குப்பைக்கொட்டமுடியுமா?
#குற்றவாளிகளை வழக்குக்காக அழைத்துசெல்லும்போது நாங்கள் சாப்பிடுகிறோமோ (அ)இயற்கை உபாதைகளை கழிக்கிறோமோ இல்லையோ ஆனால் அவர்களுக்கு அனைத்து சேவைகளையும் செய்கிறோம்.
அதுல அவன கஞ்சா சிம்கார்டு கொன்டு போகாமலும் அவனோடு எதிரிகள்ட இருந்தும் பாதுகாக்கனும்.
உங்களால் எந்த சலிப்பின்றியும் செய்யமுடியுமா?
#எங்களுடைய உறவினர்களுடைய சுப நிகழ்ச்சிக்கும் துக்க நிகழ்ச்சிக்கும் செல்ல முடியாததால் அவர்களுடைய ஏச்சிற்கும் பேச்சிற்கும் ஆளாகிறோமே.
உங்களால் இதுமாதிரியான பேச்சுகளை தாங்கிகொள்ளமுடியுமா?
#எங்கள் குடும்ப சுப துக்க நிகழ்ச்சிகளை கேள்விப்பட்டாலும் உடனே மற்ற துறையிலுள்ளவர்கள் போல் கோப்புகளை மூடிவிட்டு சென்றுவிடமுடியாது.
#ஏனென்றால் விஐபிகளுக்கோ, கைதிகளுக்கோ, பொதுமக்களுக்கோ, துப்பாக்கியுடனோ, மற்ற உபகரனங்களுடன் பாதுகாப்பு பணியில் இருப்போம் அவர்களை பத்திரமாக சேரவேண்டிய இடத்தில் விட்டுவிட்டு அதன்பிறகு துப்பாக்கியை அரசு பொருட்களை ஒப்படைத்துவிட்டுபோய்
கால்கடுக்க லீவிற்காக நின்று கேட்டா.
#உயரதிகாரி எங்களுக்கு லீவு குடுத்தா அவருக்கு சம்பளம் பிடிச்சுக்கிற மாதிரி திட்டுவாப்ள அத இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு கெஞ்சிதான் லீவு வாங்க வேண்டும்.
இந்த மனநிலையில் நீங்கள் எப்படி இருப்பீர்கள்?
#மற்ற துறைகளில் வேலை நேரம் முடித்து வீட்டிற்கு வந்தவுடன் மறுபடியும் அவரை கூப்பிட மாட்டார்கள் கூப்பிட்டாலும் அவர்கள் செல்லமாட்டார்கள்.
#காவலர்கள் ரெண்டு நாள் கழிச்சு அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்து நிம்மதியாக சாப்பிட்டு ஓய்வெடுக்கலாம் என இருக்கும்போதுதான். தொலைபேசியில் கலவரம், கொலை, கொள்ளை, வழிப்பறி, என்ற தகவல் கேட்டவுடன் உடனே சீருடை அணிந்து பணிக்கு கிளம்புவோம் நீங்கள் செய்யமுடியுமா?
#நியாயமாக போராடுகிறோம் என்று கூறி நடுரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு செய்து உங்களிள் ஒருவர் விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸில் வந்தால் அதற்கு வழிவிடாமல் அநியாயம் செய்கிறீர்கள்.
#இதை தட்டிகேட்டால் எங்களையும் எங்களது குடும்ப உறுப்பினர்களையும் கேவலமாக பேசுகிறீர்கள் இந்த நிலைமையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
#எங்களை லஞ்ச பேர்வழிகள் என்று அழைக்கிறீர்கள் நீங்கள் தவறு செய்யாத போது எதற்கு லஞ்சம் தருகிறீர்கள் நீங்கள் செய்த தவறிலிருந்து தப்பிப்பதற்காகவும் சுயநலத்திற்காகவும் எங்களை தவறுக்குள்ளாக்கி விட்டு விடும்.
#நீங்கள் எங்கள் மீது குறைசொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வீர்களா?????
#கோடிகோடியாக கொள்ளை அடிப்பதற்காக. ஓட்டுக்காக பணத்தையும் இலவசமாக கொடுக்கும் பொருட்களான லஞ்சத்தை வாய் கிழிய சிரித்து வாங்கும் உங்களுக்கு எங்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வீர்களா?
#250 நாட்கள் காலை பத்து மணிக்கு சென்று மாலை நாலு மணிவரை உட்கார்ந்தே பணி செய்பவர்களுக்கு
இதில் இரண்டு இடைவேளை ஒரு உணவு இடைவேளை வேறு.
பத்தாதற்கு அரசு விடுமுறை நாட்கள் வேறு
அவர்களுக்கு கை நிறைய சம்பளம் பென்சன்.
#வருடம் முழுவதும் 24மணிநேரத்தில் எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் சரி, அதெல்லாம் கணக்கில் இல்லாமல் பணிசெய்யும் எங்களுக்கு குறைந்த சம்பளம்.
எங்கள் நிலையில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்?
#நாங்களும் பொதுமக்களான உங்களிலிருந்துதான் வந்து இருக்கிறோம்.
#உங்களில் உள்ளது போலவும் மற்ற துறையிலுள்ளவர்கள் போலவும்தான்
#காவல்துறையிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கிறது நாங்களும் ஒத்துகொள்கிறோம்.
#அதனால் ஒட்டுமொத்த காவல்துறையையும் கொச்சைப்படுத்தி கேவலமாக பேசுவது என்பது உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
*இப்படிக்கு உங்களுக்காக அனைத்து சந்தோஷங்களையும், இழந்து வாழும் உண்மையான காவலர்களில் நானும் ஒருவன்.*
நன்றி :- வாட்ஸ் அப்
No comments:
Post a Comment