"உண்ணும் போது உயிரெழுத்தை உயர வாங்கி
உறங்கும் போதெல்லாம் அதுவேயாகும்
பெண்ணின்பால் இந்திரியம் விடும்போதெல்லாம்
பேணியே வளம் நோக்கி அவத்தில் நில்லு
தின்னும் காயிலை மருந்துஉண்ணும் - ---------------போதெல்லாம் தினமும் இப்படி செய்ய
வல்லார் மண்ணூழி காலம் மட்டும்
வாழ்வார் பாரு மறலி கையில் - அகப்படமாட்டார்தானே."
பொருள் =
தினமும் சாப்பிடும்போது உயிரெழுத்தாகிய அகாரம் அதாவது சூரியகலையாகிய வலது பக்கம் சுவாசம் நடக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
உறங்கும் போதெல்லாம் - அதாவது தூங்கும் போது இடது கை பக்கம் ஒருக்களித்து படுத்தால் வலது பக்கம் சூரிய கலையில் சுவாசம் நடை பெரும் ஆயுள் அதிகமாகும் .
பெண்ணிடம் உடலுறவு கொண்டு விந்துவை வெளியிடும் போது சூரிய கலையில் அதாவது வலது பக்கம் சுவாசம் நடை பெறும்போது உங்கள் கவனத்தை உங்கள் இரு புருவங்களுக்கு இடையில் கவனத்தை வைத்து செய்யவேண்டும் . இதனால் விந்து அதிகமாக வெளியேறாது.
உணவு, மருந்து , சாப்பிடும் போதும் சூரியகலையாகிய வலது பக்கம் சுவாசம் நடக்கும் போது மட்டும் சாப்பிட்டு தினமும் மேல்கண்ட முறைகளை கடைபிடிப்பவர்கள் ஆண், பெண் அனைவரும்,
இந்த உலகம் உள்ளவரை வாழ்வார்கள் மறலி ( எமன் ) கையில் மாட்டமார்கள் சாக மாட்டார்கள். இது அகத்திய முனிவர் அப்பாவி தமிழ் மக்களுக்கு சொல்லும் ரகசியம் ..
No comments:
Post a Comment