====================================
❣ மூச்சு இழுக்கும் போது
பிறக்கின்றோம் நாம்
வெளியே விடும் போது
இறக்கின்றோம் நாம்
இழுக்க மறந்தால்
அதுவே நிரந்தரம் ......!!!
❣ பிறப்பும் இறப்பும்
நமக்குள் ஒவ்வொரு
நொடியிலும் நிகழ்கிறது. ...!!!
❣ நோயின் கொடுமையிலும்
காதலின் தோல்வியிலும்
தேர்வின் பயத்தாலும்
உணவின்றி குப்பைகளில்
சேர்க்கின்றதே மரணம் ......!!!
❣ இதில் என்ன கொடுமை....???
நல்லவனுக்கு ''சொர்க்கமாம் ''
கெட்டவனுக்கு ''நரகமாம் ''
❣ விதையில் ஆரம்பித்து
மீண்டும் ஒரு கனிக்குள்
முடிவதுதானே
வாழ்க்கை தத்துவம்.....!!!
❣ மாண்டவர்களுக்கு மரணம்
ஒன்றுமில்லை
நெருங்கி இருப்பவர்களுக்கு
மரணம் வலியாம்......!!!
❣ வாழ்வது ஒரு முறைதான்
வாழ்நாள் முழுதும்
வாழ்வோம் தலை முறை
போற்றும் படியாக ......!!!
❣ பூமியைவிட மிகபெரிய நரகம்வேறெங்கும் இருக்க வாய்ப்பில்லை.......!!!
❣ மரணத்தைவிட ஆகபெரிய சொர்க்கம் வேறெதுவும் இல்லை.......!!!
❣ மரணத்தை "கவனத்தோடு "கடந்து செல்லுங்கள் சொர்கத்திற்கு ......!!!
❣ "மரணத்தை தவறவிட்டு விடாதீர்கள்"...பின் மீண்டும் பிறக்க நேரிடும்.......!!!
❣ மரணம் என்பது என்றோ எப்போதோ நிகழ்வதில்லை......!!!
❣ ஒவ்வொரு உள் மூச்சும் பிறப்பு.......!!!
❣ ஒவ்வொரு வெளி மூச்சும் இறப்பு......!!!
❣ தலை முடி உதிர்வது மரணம்......!!!
❣ விரல்நேகம் வெட்டப்படுவது மரணம்......!!!
❣ பல் விழுவது மரணம்......!!!
❣ கண்பார்வைகுறைவு மரணம்......!!!
❣ இப்படி ஒவ்வொரு கணமும் மரணம் நமக்குள்நடந்துகொண்டுதான் இருக்கிறது......!!!
❣ ஆனால் இதுதான் மரணம் என்று தெரியாதால் தெரியாத ஒன்றை மரணம் என்று சிந்தித்து மரணம் சொல்லைக் கேட்டாலே அபசகுனம், அதைப்பற்றி பேசுவதோ தவறு என்று கற்பனை வலையில் காலம் கடத்திக்கொண்டு இருக்கிறோம்.......!!!
❣ உடலெடுத்து பூமியில் விழும்வரை தான் பிறப்பிற்கு மகத்துவதும்.......!!!
❣ இந்த உடல் மண்ணில் விழுந்த அந்த கணம்முதல் இறப்பை நோக்கிய பயணத்தில் தான் சென்றுகொண்டிருக்கிறோம்.........!!!
❣ மரணம் என்று மகான்கள் குறிப்பிடுவது "நான்" என்ற உணர்ச்சியை கடந்து நிற்கும்போது தான் நான் மரணம் அடைவதில்லை என்ற தத்துவம் புரியும்.......!!!
❣ இதை உணர்ந்து தெளிவு பெறாதவரை மரண பயம் ஆட்கொண்டு தான் இருக்கும்......!!!
❣ இதைத்தான் மகான்கள் மரணத்திற்கும் முன் "நீ" மரணித்து விடு என்றும்......!!!
❣ இஸ்லாமில் "உனக்குதொழுகை நடத்துவதற்கு முன் நீ தொழுது எழு" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.......!!!
❣ மரண பயம் தீர "நான் யார்" என்ற தெளிவு அவசியம்......!!!
விளக்கம் தேவை. முடிந்தால் பகிருங்கள்
ReplyDeleteவிதையில் ஆரம்பித்து
மீண்டும் ஒரு கனிக்குள்
முடிவதுதானே
வாழ்க்கை தத்துவம்.....!!!
அருமை
ReplyDelete