Monday, September 26, 2016

மாங்கல்யம்


=========

திருமணநாளன்று சுபமுகூர்த்தநேரத்தில் கூறைச்சீலை உடுத்து மணமகனின்வலது பக்கத்திலே கிழக்கு நோக்கி மணமகள்அமர மணமகன் எழுந்து மணமகளின்வலதுபக்கம் வந்து வடக்குத் திசையை நோக்கிநின்று குருக்கள் மற்றும் பெரியோர்ஆசீர்வதித்துக் கொடுத்தமாங்கல்யத்தை எடுத்து, மாங்கல்யம்தந்துநாநே நமஜீவன ஹேதுநா கண்டேபத்தாமி ஸுபுகே சஞ்ஜிவசரதசம்' என்றமந்திரத்தைக் குருக்கள் உச்சரிக்க,கெட்டிமேளம் முழங்க (அபசகுனவார்த்தைகள் எதுவும் காதில்கேட்காவண்ணம்) பெரியோர்கள்அர்ச்சதை, மலர்கள் தூவ மணமகன் மேற்குத்திசை திரும்பி நின்று மணமகள் கழுத்தில்மாங்கல்யம் அணிவான்.கணவன் வாழும்வரை மனைவிமார்பில் எப்பொழுதும் இத்தாலிதவழ வேண்டும். அவனை நெஞ்சோடுதான் தாங்கி வாழும் தன்மையை காலம்முழுவதும் அப்பெண் எடுத்துக்காட்டவேண்டும். இவ்வாறு அணியப்பட்ட தாலி நிலைமை மாறி இப்போதுஅழகுசாதனமாக்கப்பட்டு விட்டது. தமிழர்கலாசார சின்னத்துள் ஒன்றாகக்கருதப்படும். இத்தாலிக்கு ஒரு மகத்துவமும்உண்டு. மார்பிலே உயிரோட்டம் உள்ளஇதயத்தில் இத்தாலி தட்டுப்பட்டுக்கொண்டு இருக்க, அது சீனமருத்துவ முறையான அக்யூபக்சர் முறைபோல்தொழிற்படுகின்றதாம். எனவே,தாலி என்பது பெண்ணுக்கு வேலிஎன்பது மாத்திரம் அன்றிபெண்ணுக்கு வலிமை என்றும்சொல்ல வேண்டும். கலாசாரவிழுமியங்கள் காரணம் இல்லாமல்தோன்றவில்லை. அது கால சூழலுக்கேற்ப கட்டிக்காக்க வேண்டியதும் அவசியமே.

வாழ்கவளமுடன்

No comments:

Post a Comment