தாடிப்புராணம் ?
===============
ஆன்மீக வாதிகள் தாடி வளர்ப்பது ஏன்..?
“உண்மையான ஆன்மீகவாதிகளுக்கு வீட்டில் இடம் கிடையாது. வெளியில் போனவருக்கு முடி திருத்தும் வசதி கிடையாது;
இப்போது ரேசர் இருக்கிறது. இது அப்போது இல்லை. தாடி வளர்ந்து விடுகிறது. அதை பார்ப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள்..?
‘ஓ !.... ஆன்மீகவாதி என்றால் தாடி ஓர் அடையாளம் போலிருக்கிறது.!’
இப்படி நினைத்துக்கொண்டு எல்லோரும் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் தாடி வைத்துக்கொள்வதற்கு வேறு காரணமும் உண்டு.
குளிர் முகத்தை தாக்க கூடாது; தாக்கினால் முகவாதம் வந்துவிடும். அதை தவிர்ப்பதற்காக பலர் தாடி வைத்துக்கொண்டார்கள்,
குருகுல கல்வி கற்ற பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் சந்நியாசி ஆகிறவர்கள் மொட்டையுடன் இருப்பார்கள்.
இல்லறத்தார்கள் குடுமி மட்டும் வைத்துக்கொள்வார்கள்.
இல்லறத்தில் இருந்து கடமைகளெல்லாம் முடித்துவிட்டு, பின்னர் சந்நியாசி ஆகிறவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா..?
தாடியும் வைத்துக்கொண்டார்கள். தலையில் குடுமியும் வைத்துக்கொண்டார்கள்.
தாடியும், குடுமியும் வந்த கதை இதுதான்.
-வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment