Sunday, September 11, 2016

ந‌மது சித்த‍ர்கள், எத்த‍னை எத்த‍னை வகையான அரிய கண்டுபிடிப்புக

ந‌மது சித்த‍ர்கள், எத்த‍னை எத்த‍னை வகையான அரிய கண்டுபிடிப்புக் க‍ளை கண்டுபிடித்து, அதை மனித வாழ்வு க்காகவே பயன்படும் வகை யில் வழங்கியிருக்கிறார்கள்.

அத்த‍கைய அரிய கண்டுபிடிப்புக்களில் இதுவும் ஒன்று, ஆம், தற்காலத்தில், வகையான வகையான உயர் ரக மெத் தை கள் வந்துவிட்து, ஒரு குளிரூட்ட‍ப்ப ட்ட‍ அறையில், ஏதேனும் ஒரு உயர்ரக மெத்தையை வாங்கிப்போட்டு அதில் தூக்க‍மும் வராமல் விழித்திருக்க‍ வும் முடியாம ல் இன்றைய மக்க‍ள் அவதிப்படுகிறார்கள்.

ஆனால், அன்றே சித்தர்கள், நாம் படுக்கும் படுக்கைகளை பற்றிசொல்லி சென்றுள்ள‍னர். அப்ப‍டி இந்த படுக்கை களை பற்றி என்ன‍தான் சொல்லியிரு க்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? இதோ அந்த அற்புத தகவல். இந்த அற்புத தகவல் “மருத்துவத் திறவு கோல்’ என்ற சித்த மருத்துவம் பற்றிய‌ நூலில் இருந்து சில வரிகளை இங்கே காணலாம்.

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை என்னும் விளக்கியுள்ளது.

இலவம் பஞ்சு படுக்கை

உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்க ளும் நிவாரணம் பெறும்.

இரத்தினக் கம்பளம்

நஞ்சுகளின் உண்டாகும் நோய்களை நீக்கி, பூரண சுகம் தரும்

ஈச்சம் பாய்

எப்பேற்ப்பட்ட‍ வாத நோய்களானாலும் இதில் படுத்துறங் கினால் விரைவில் குணமாகுமாம். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

கம்பளிப் படுக்கை

கடுங்குளிரிலிருந்து நம்மை காத்து நமக்கு இதம ளிக்கும். மேலும் குளிர் காய்ச்ச‍லால் அவதிப்ப டும் நோயாளிகள் இந்த படுக்கையில் படுத்தும், போர்த்திக்கொள்ண்டால் சீக்கிரமே குளிர்காய்ச் சல் நீங்கி பூரண சுகம் பெறும்.

கோரைப் பாய்

உடல் சூடு தணியும் , மந்தம் மங்கிப்போகும், காய்ச்ச‍ல் குணமாகும், உடலுக்குக் குளிர்ச்சி கொடுத்து நல்ல‍ உறக்கத்தையும் ஏற்படுத்தும்.

தாழம்பாய்

வாந்தி ஏற்படும் உணர்வை நீக்கும், தலை சுற்றலை நீக்கும், நம் உட லில் தேவையற்ற‍ பித்தத்தை நீக்கும்.

மூங்கில் பாய்

உடல் சூடும் அதிகரிப்பதோடு, பித்தமும் அதிகரிக்கும்.

பிரம்பு பாய்

சீதபேதியிலிருந்து முழவதுமாக குணமாக்கி ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். காலநிலைக்கேற்ப வரும் காய்ச்ச‍லிலிரு ந்து குணமடைய வைக் கும்

பேரீச்சம்பாய்

இரத்த‍ சோகை சோகை நோயை குணப்படுத்தும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும். வாத குன்ம நோய்க்களை குணப்படுத்தும்

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment