Saturday, September 17, 2016

பக்தி - ஞானம்


===========

வெறும் பக்தி மட்டுமே மனிதனாக்க முடியாது, ஞானம் தான் மனிதனாக்கும்.

"பக்தி எதையும் எடை போடாது,
ஞானம் எதையும் எடை போடாமல் இருக்காது.

பக்தி தடை விதிக்கும்,
ஞானம் தடைகளை களைத்தெரியும்.

பக்தி மாற்றத்திற்கு உட்பட்டது,
ஞானம் நிலைப்பு தத்துவத்திற்கு வழி காட்டுவது.

பக்தி பழக்கத்தை உண்டு பண்ணும்,
ஞானம் விளக்கத்தை அடையும்.

பக்தி நம்பிக்கையை நம்ப வைப்பது,

ஞானம் நம்பிக்கையில் இருந்து விடுபட்டு உண்மை நிலையை கண்டறிய வைப்பது.

பக்தி பயத்தைக் கொடுப்பது,
ஞானம் தைரியத்தைக் கொடுப்பது.

உண்மை இல்லாததை உண்மை என்று கொள்ளவது பக்தி,

உண்மையை உணர்வதற்கு நம்பிக்கை அவசியம் இல்லை என்ற தெளிவைத் தருவது ஞானம்......!!!

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment