ஞானியின் உடலை அடக்கம் செய்யும் இடங்கள் எங்கெல்லாம் அமைக்கலாம் தெரியுமா? சமாதி ஆனவன் வீட்டின் பக்கத்தில், நடமாடும் சாலையோரத்தில்,குளக்கரையில், ஆற்றின் நடுவில், பூஞ்சோலையில்,நகரத்தில் நல்ல சுத்தமான பூமியில், அழகான கானகம், உயர்ந்த மலைச் சாரல் ஆகிய இடங்களே உகந்த இடங்களாம். சமாதிக்கான குகை எனும் குழி அப்படி அமைக்கப்பட வேண்டும்?நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்நிற்கின்ற பாத நவபாத நேர்விழப்பொற்பம ரோசமு மூன்றுக்கு மூன்றணிநிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே.அமைக்கப்படுகின்ற குழி நான்கு புறமும் காலடியால் ஐந்து அடி அகலம், ஒன்பது அடி உயரம் இருத்தல் வேண்டும். ஞானியின் உடலை அந்தக் குழியில் சமாதி வைக்கும்போது அதில் இடப்பட வேண்டிய பொருட்கள்எவை?பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்துவிஞ்சப் படுத்த தன் மேலாசனம் இட்டுமுஞ்சிப் படுத்து வெண்ணீரிட்டு அதன் மேலேபொன்செய் நற் சுண்ணம் பொதியலுமாமே.பொன், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகிய ஐந்து வகை உலோகங்களையும்,வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், பவழம், கோமேதகம், புஷ்பராகம், குருவிந்தம், முத்து ஆகிய நவமணிகளையும் பரப்பி வைத்து, அதன் மீது இருக்கை அமைத்து, தர்ப்பைப் புல் பரப்பி, விபூதியை நிறைய இட்டுவைக்க வேண்டும். அதன் மூது சுண்ணப் பொடியை இட்டு வைக்க வேண்டும். பிறகு?நள்குகை நால்வட்டம் படுத்ததன் மேற்சாரக்கள்ளவிழ் தாமம் களபம் கத்தூரியும்தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்துஒள்ளிய தூபம் உவந்திடுவீரே.குழியின் அடியில் நடுவாக சதுரமாகச் செய்து அதன் மீது தேனொழுகும் மலர்கள், சந்தனம், கஸ்தூரி ஆகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் போன்றவற்றைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும். நல்ல பிரகாசமான தீப ஒளியைக் குழிக்குள் காட்ட வேண்டும்.ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயமீதினில் இட்டு ஆசனத்தின் மேல் வைத்துப்போதறு சுண்ணமும் நீறும் பொலிவித்துமீதில் இருத்தி விரித்திடுவீரே.உடலெங்கும் திருநீற்றால் பூசி மேலாடை போர்த்தியதுபோல செய்து, உடலை இருக்கையில் அமர்த்தி, மலர், அருகம்புல், நறுமணப் பொடி, வெண்ணீறு ஆகியவற்றை அணிவித்துக் குழியில் வைத்து நான்கு பக்கமும் மண்ணைச் சரித்து மூடிட வேண்டும். குப்பாயம் எனும் சொல்லுக்கு மேல்சட்டை என்று பொருள். எனக்கு ஒரு குப்பாயம் வாங்கினேன் என்று சொல்லிப் பழகலாமே.ஆக ஒரு மகா ஞானியை சமாதி இடுதல் என்பது ஏதோ ஒரு குழியை வெட்டி அதில் வைத்து மூடிவிடுவது அல்ல.அந்த குழி எப்படி வெட்டப்பட வேண்டும், எங்கெங்கு அமைக்கலாம், அதில் என்னவெல்லாம் இட்டு வைக்க வேண்டும், உடலை என்னவெல்லாம் செய்து உள்ளே வைக்க வேண்டும், எப்படி மூட வேண்டும் என்பதற்கெல்லாம்விதிமுறைகள் இருப்பது திருமந்திரம் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.அந்த வழியில் தன் உடலை ஜீவசமாதி வைத்திட வேண்டுமென்று சதாசிவ பிரம்மேந்திரர் உத்தரவு இட்டார். அவர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விதிமுறைகளின் அமைக்கப்பட்ட குகை போன்ற குழியில் இறங்கி குருநாதர் அமர்ந்து விட்டார். திருமந்திரம் கூறியுள்ளபடி அனைத்தையும் சரிவர செய்தபின் அவர் இறங்கிய குழியை இட்டு மூடினார்கள்.அவர் சமாதியடைந்த ஒன்பதாம் நாள் அவர் சமாதியின் மீது ஒரு வில்வ மரம் துளிர்விட்டு எழுந்தது. அவர் முன்பே தெரிவித்திருந்தபடி 12ஆம் நாள் காசியிலிருந்து ஒரு பிரம்மச்சாரி வந்தார். அவர் அங்கிருந்து ஒரு சிவலிங்கம் கொண்டு வந்திருந்தார். அந்த சிவலிங்கத்தை சதாசிவ பிரம்மேந்திரர் சமாதிக்குக் கிழக்காக வைத்து லிங்கம் பிரதிஷ்ட செய்யப்பட்டது. அவர் சமாதியில் எழுந்த வில்வ மரம் முதலில் பத்தடிக்கு நேராக வளர்ந்து பின்னர் மூன்றாகக் கிளை விட்டது. அதனை பிரம்ம, விஷ்ணு,சிவன் என்று மக்கள் வழிபடலாயினர். இப்படியாக அந்த மகான் சமாதியான இடம் இன்று அவருடைய அதிஷ்டானமாகக் கட்டி சிறப்பாக வழிபட்டு வருகின்றனர். வேண்டியவருக்கு வேண்டியதை அருளும் அற்புத சக்தியாக அங்கு அவர் அருள்பாலித்து வருகிறார். அங்கு ஒரு முறை சென்று அந்த ஜீவசமாதியில் அவரை வணங்கி வந்தால் அதன் பலனை நிச்சயம் ஒவ்வொருவரும் உணர்வர்.
No comments:
Post a Comment