Friday, September 30, 2016

பதஞ்சலி முனிவரின் "அஷ்டாங்க யோகம்"

பதஞ்சலி முனிவரின் "அஷ்டாங்க யோகம்"
===============================

1,யமம் (தள்ளுபவை):
உயிர்களை வதைத்தல், கொல்லுதல், பொய் பேசுதல், பிறர்மனம் புண்படும் படி நடத்தல் ஆகியவற்றை தள்ளப்பட வேண்டியவை.

2,நியமம் (கொள்ளுபவை):
சுத்தமாய் இருத்தல், மனநிறைவுடன் இருத்தல், இறைவனிடம் பூரண சரணாகதி அடைதல். அமைதியான நிலையில் தியானம் செய்ய நியமம் உதவுகிறது.

3,ஆசனம் (இருக்கை):
தியானத்தில் நாம் எப்படி அமர வேண்டும் என்பது ஆசனம். தலை கழுத்து முதுகு ஒரே நேர்கோட்டில் இருக்கும் படி அமர வேண்டும்.
பத்மாசனம், பத்திராசனம், குக்குடாசனம், சிம்மாசனம், கோடுகளாசனம், அவஸ்திகாசனம், வீராசனம், சுகாசனம் போன்றவை எட்டுவகை ஆசனம்.

4,பிராணாயாமம் (மூச்சு பயிற்சி) :
மூச்சுகாற்றை சரியான அளவில் உள்ளே இழுத்தல், அடக்குதல்,  வெளி விடுதல் பற்றியது.
சுக பிராணாயாமம், சமவிருத்த பிராணாயாமம், விசம விருத்த பிராணாயாமம், யோக பிராணாயாமம், விபாக பிராணாயாமம், மஹத்யோக பிராணாயாமம், வியாக்ர பிராணாயாமம், நாடி சுத்தி பிராணாயாமம், அனுலோக விமோல சுத்தி பிராணாயாமம், உஜ்ஜயி பிராணாயாமம், சீத்தளி பிராணாயாமம், சித்காரி பிராணாயாமம், சதாந்தா பிராணாயாமம், பரமாரி பிராணாயாமம் என 14 வகை உள்ளது.

5,பிரத்யாகாரம் (ஆற்றலை ஒன்று படுத்துதல்):
மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்துதல் ஆகும். புத்தியின் மூலம் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவைகளை அறிதல்.

6,தாரனை (சக்திகளுக்கு வலிமையூட்டுவது):
மனதை ஒருமுக படுத்துவதாகும். இது தியானம் செய்ய அடிப்படை அம்சமாகும்.

7,தியானம் (மனம் ஒன்றுபடல்):
ஆன்மாவை கொட்டியாக பிடித்து கொள்வது. தூக்கம் என்பது நினைவில்லாத தியானம், தியானம் என்பது நினைவோடு தூங்குவது. இதனால் வான்வெளியின் சக்தியை அதிகமாக ககிடைக்கிறது. மேலும் ஞானம், நல்ல உடல்நிலை, வளமான வாழ்வு, மகிழ்ச்சி, அமைதி, அனுசரித்தல் ஆகியவற்றை அளிக்கிறது.

8,சமாதி (பேரின்பம் துய்த்தல்):
நினைவு நிலைக்கு அப்பாற்பட்ட நிலை. அதாவது பேரின்பம் துய்த்தலாகும். துன்பங்களுயும், கவலைகளும் நீங்கி எந்த வெளி உலக நினைவு இன்றி இருத்தல் சமாதி நிலையாகும்.

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment