சித்தர்களும் சிந்தனைகளும் :
===========================
கோபமே பாவங்களுக் கெலாம் தாய் தந்தை, கோபமே குடி கெடுக்கும்,
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது, கோபமே துயர் கொடுக்கும்,
கோபமே பொல்லாது, கோபமே சீர்கேடு, கோபமே உறவ றுக்கும்,
கோபமே பழி செய்யும், கோபமே பகையாளி, கோபமே கருணை போக்கும், கோபமே ஈனமாம், கோபமே எவரையும் கூடாமல் ஒருவ னாக்கும்,
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீய நரகக்குழியி னிற்றள்ளும்.
-அம்பலவாணக் கவிராயர் (சதுரகிரி அறப்பளீசுரச்சதகம்
(மறலி-எமன்)
கோபம் என்பது எல்லா சீவன்களுக்கும் வரக்கூடியது.மனிதனும் அதற்கு
விதிவிலக்கு அல்ல. மனிதன் கோபத்தின் விளைவுகளை அறிந்து,அதை
தவிர்த்து வாழ பழகிக்கொள்ளவேண்டும். கோபம் நம் உடல் நலம், நட்பு நலம், மன நலம், பொருள் வளம் அனைத்தையும் அழித்துவிடும். இது
விலங்கினப் பதிவுகளால் வருவது.ஆறறிவு பெற்ற மனிதன் இதை
உணர்ந்து பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவைகளை
கடைப்பிடித்து வாழ்ந்தால் சினத்தின் விளைவுகளிலிருந்து தன்னைக்
காத்துக்கொள்வதொடு இன்பமான வாழ்க்கையும் வாழலாம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment