ஒரே கவனமாய் மூச்சை நோக்கினால்,அது தானாகவே கும்பகத்தில் கொண்டுபோய் விடும் –
எவ்வளவுக்கு அடக்கம் அமைகிறதோ,அவ்வளவுக்கு அது நல்லது
மனத்தை உள்ளே இருத்தினால்,எங்கும் எந்நிலையிலும் இருக்கலாம்
உலகை ஓர் கனவாக நோக்க வேண்டும்
பொருள்களாலும்,எண்ணங்களாலும் மனம் சிதறக் கூடாது. நமக்கு விதிக்கப்பட்ட வேலை செய்யும் நேரம் போகப் பிற நேரங்களில் ஆத்ம விசாரத்தில் ஈடுபட வேண்டும். ஒருன் நொடியைக் கூடச் சோம்பலில் வீணடிக்கக் கூடாது.
பிறருக்குச் சிறிதளவு கூடத் தொல்லையோ தொந்தரவோ தரக்கூடாது. உங்கள் வேலைகள் நீங்கள் செய்து கொள்ளுங்கள்.
விருப்பு,வெறுப்பு இரண்டையும் ஒரு சேர வெறுத்து ஒதுக்க வேண்டும்.
தன்மையிலும்,இதயத்திலும் கவனம் செலுத்தி ‘ நான் யார் ‘ ? என்ற விசாரத்தைப் பயில வேண்டும். அவ்வாறு செய்தால் மூச்சு தானாகவே அடங்கிப் போகும். அவ்வாறு செய்யும் போது திடீரென்று மனம் வெளிக் கிளம்பலாம். எனவே கவனத்தோடு விசாரத்தை செய்ய வேண்டும்.
எண்ணங்கள் எவையும் இன்றி மௌனமாய் இருப்பதே முழுமை
எண்ணங்கள் இல்லாமல் இருப்பதே நிஷ்டை.
எண்ணங்கள் இல்லாமல் இருப்பதே ஞானம்
எண்ணங்கள் இல்லாமல் இருப்பதே மோக்ஷம்
எண்ணங்கள் இல்லாமல் இருப்பதே ஸகஜம்.
எனவே எண்ணமே இல்லாத நிலையே இறுதியாம் முழுமை நிலை
No comments:
Post a Comment