Sunday, September 11, 2016

மரண நிகழ்வுகள்

மரண நிகழ்வுகள்
=============

நமதுதேகம் இயற்கை மரணம் சம்பவிக்கும்போது ஏற்படும்
உடலியல் மாற்றங்கள் :-

நம் தேகம் பஞ்சபூதங்களால் ஆனது. மனிதனின் உடலில்

தொடைவரை நிலமும்,

நாபி வரை நீர்,

அதிலிருந்து இதயம் வரை நெருப்பு,

அதற்கு மேல் தொண்டை வரை வாயு,

தலைப் பகுதி ஆகாயம்.

என்று பிரித்துக் கூறுகிறார்கள்.

இயற்கை மரணம் ஒருவருக்கு உண்டாகும் போது முதலில் தொடை வரை செயலிழக்கும்.

அந்தப் பகுதியின் நிலத் தத்துவம் வயிற்றில் உள்ள நீர் தத்துவத்தில் அடங்கும்.

அதன் பிறகு நிலப் பகுதியும் நீரும் சேர்ந்து நாபியிலுள்ள சடராக்கினியில் அடங்கும்.

பிறகு இந்த மூன்றும் சேர்ந்து இதயப் பகுதியில் உள்ள வாயுவில் கலக்கும்.

அப்பகுதி இயக்கங்களும் நின்று போகும்.

அதன் பிறகு தலைப் பகுதியில் வாய், கண், காது, உச்சிப் பகுதிகளைச் சேர்ந்து அவைகளின் இயக்கங்களை நிறுத்தி கண் வழியாக மூக்கு வழியாக உயிர் உடலை விட்டு நீங்கும்.

எல்லா மனிதர்களுக்கும் இது அதாவது இயற்கை மரணம் இவ்விதமாகவே நடக்கும் என்கிறார்கள்.

கடைசியில் உச்சியில் உயிர் பிரியும் விதத்தில் பல வித மாறுபாடுகள் நிகழ்கின்றன.

மனித வாழ்வின் அந்த விலை மதிப்பில்லாத கடைசி நொடி உயிர் பிரியும் வழி எது என்பதை தீர்மானிக்கிறது.

உயிரானது யோகியர் மற்றும் ஞானிகளுக்கு கபாலம் வழியாகப் பிரியும்,

புண்ணியர்களுக்கு கண், காது மூக்கு வழியாகப் பிரியும் ,

பாவிகளுக்கோ ஆசன வாய் வழியாகப் பிரியும் என்றும் சொல்வதுண்டு.

நந்தி தேவர் சொல்கிறார் இது இயற்கை மரணத்துக்கு மட்டுமே பொருந்தும் அகால மரணம் அல்லது விபத்துகளால் மரணமடைபவர்கள் உயிர் அடையாளக் குறி வழியாகவே போகும் என்கிறார்.

இந்த உடலானது ஐம்பூதப் பிரிவுகளாலும், தசவாயுக்களாலுமானது.

இந்த இரண்டும் தன் நிலை மாறும் போது மரணம் சம்பவிக்கிறது.
மரணம் நெருங்கும் போது பிருதிவியான மண்ணின் கூறுகள் தளர்ந்து நீர்மயமாகும். நீரில் மண் கரைந்தால் எற்படும் நிலைபோல் உடலில் சமன்பாடு நீங்கி எங்கோ சரிந்துவிடுதல் போன்ற உணர்வு ஏற்படும். இது முதல் நிலை. இரண்டாம் நிலையில் நீரின் தன்மை தீயின் தன்மையோடு ஒன்றும். அதாவது பழுக்க காய்ச்சிய இரும்பை நீரில் முக்கியது போன்ற ஒரு நிலை. இதனால் உடலில் நீர்சத்து முற்றிலும் வரண்டுவிடும். தாகம் மேலோங்கும். உடலில் ஒரு எரிச்சல் தோன்றும். மூன்றாவது நிலை உடலின் தீயானது காற்றில் கலக்கும். உடலின் வெப்பம் குறைந்து உடல்சக்தி முழுவதும் அடங்கிவிடும். வெப்ப நிலை குறைந்ததால் இரத்த ஓட்டம் குறையும். இதயத் துடிப்பும் படிப்படியாக குறையும். நான்காம் நிலை, உடலின் காற்றுத்தன்மை ஆகாயவெளியில் கலக்கத் தயாராகிவிடும்.இந்நிலையில் உயிரானது பிரிய ஆரம்பிக்கும். இதுவரை கீழே செயல்பட்டுக் கொண்டிருந்த அபானன் வாயு மெல்ல மேலேறி ஏனைய வாயுக்களையும் அழைத்துக் கொண்டு வெளியே பயணிக்க ஆரம்பிக்கும்.

அபானன் உதானனை சந்திக்கும் போது குமட்டல், கிரிதரனை சந்திக்கும் போது சோம்பல், வியானன் வாயுவை சந்திக்கும் போது உடல் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கும். நாகனை சந்திக்கும் போது இமைகள் செயலிழக்கும். கூர்மனை சந்திக்கும் போது கொட்டாவி வரும். சாமனை சந்திக்கும் போது உடல் சூடு குறையும். இறுதியில் பிராணனோடு கலந்து மூச்சுத்தினறலை ஏற்படுத்தும்.

தனஞ்செயனைத் தவிர்த்து நவ வாயுக்களும் வெளியேறிவிடும். இவ்வாறே மரணம் சம்பவிக்கிறது.இது குருதி மரணம் எனப்படும்.

இந்த குருதி மரணத்திற்கு பிறகும் மனித மூளையானது சிந்தனை உணர்வுகளோடு இயங்கிக் கொண்டிருக்கும். அதன்பிறகு தனஞ்செயன் வாயுவானது மேல் நோக்கி பயணித்து உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அது மூளையை அடையும் போது உடல் கெட்டு அழுகத் தொடங்கும். இது சிந்தனா மரணம் எனப்படும். இந்த குருதி மரணத்திற்கும், சிந்தனாமரணத்திற்கும் இடைப்பட்ட நேரம் இரண்டு முகூர்த்த காலம், அதாவது மூன்று மணிநேரம்.

அந்த மாய நொடிகளில் தான் புருவ வில் பூட்டு திறக்கிறது. இறந்த உடலின் நெற்றிப் பகுதியில் தனஞ்செயன் பயணிக்கிற போது அதுவரை துண்டு துண்டாக செயலற்று இருந்த சித்திரை, வஜ்ரணி, தந்திரிணி, அபூர்விணி ஆகிய நான்கு நாடிகளும் ஒன்றாக இணைந்து செயல்படத் தொடங்கும். அதற்கு பிறகு மண்டை ஒட்டை உடைத்துக்கொண்டு தனஞ்செயனின் பயணம் நமக்கு நிரந்தர மரணம்.

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment