Tuesday, September 6, 2016

சித்தர்களின் "ழ" என்கிற சாகாக்கலை !!! ****************

******************************

சாகாக்கால் ; வேகாத்தலை; போகாப்புனல்
பரிபாஷை என்பது ஒரு குறிப்பிட்ட குழுவினர்
மட்டும் உபயோகிக்கும் ரகசிய வார்த்தைகளே.

பொற் கொல்லர்கள்(தங்க ஆசாரிகள்) தங்கத்தை
பறி என்பார்கள்.அவர்கள் பறிப்பதாலோ, வேறு
யாரேனும் தங்கத்தை பறிப்பதாலோ
தங்கத்திற்கு இந்தப் பெயர் பரிபாஷையில்
இட்டார்களோ என்னமோ? சித்தர்களின்
பரிபாஷையில் மரணமில்லாப் பெருவாழ்வை
அடைய மேலே குறிப்பிடும் வார்த்தைகளின்
முதல் எழுத்துக்களை சேர்த்துப் பாருங்கள்

சா வே போ

மேற்கூறிய வார்த்தைகளின் பொருள் புரிந்தால்
சாவே போ என்றால் சாவு என்ற இறப்பு
போய்விடும்.இவ்வளவு எளிமையாக இறப்பை
போக வைக்க முடியுமா?

அப்படியானால் ஏன் யாரும் இதற்கு
முயற்சிக்கவில்லை என்ற கேள்வி
உங்களுக்கு எழும் இல்லயா?

முயற்சிக்காமலா இத்தனை சித்தர்கள் நம்
நாட்டில் தோன்றியுள்ளார்கள்!

அவர்கள் காட்டிய வழிகளை ரகசியமாக
வாய்மொழியாக பல தலை முறையாக
காப்பாற்றி வருகிறார்கள்.

திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ்
தாண்டிச் சிறந்தசாகாக் காலும்வேகாத்
தலையுந் தாண்டிமறைபுகுந்து வோதுகின்ற
வேதந் தாண்டி மதனகலி யாணதிரு வல்லி
மாதுவரையெழுந்த பதினெட்டாங்
கோட்டின்மேலு மாதளம்பூ வடிவமனோன்
மணியைப் போற்றிகரை கடந்து பறையனென்று
தள்ளி வைத்த கருத்தையினிச் சொல்லுகிறே
னாண்டே கேளே

சாகாக்கால் செத்துப்போக வேண்டும்?

வேகாக்கால் வெந்து போக வேண்டும்?

போகாப்புனல் வற்றி போக வேண்டும்?

(புனல் என்றால் தண்ணீர் என்று பொருள்)

மேலே கண்ட இரண்டாவது படம்
லிங்கோத்பவர் என்பது ஒவ்வொரு சிவன்
கோவிலிலும் கருவறைக்குப் பின்னால்
இருக்கும்.இது மிக ரகசியப் பொருள் விளக்கம்
என்பதால் கருவறைக்குப் பின்
வைக்கப்பட்டுள்ளது. அது சிவனின் திருமால்
பன்றி வடிவமாக(வராக அவதாரம்)அடியையும்
(கால்),பிரம்மா அன்னப் பட்சி வடிவில்
முடியையும் (தலையையும்) தேடியதையும்
விவரிக்கும் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.

(அடி முடி தேடிய படலமாக புராணங்களில்
வருணிக்கப்படுகிறது).

அதில் ஜோதி வடிவமாகவும் பொருள்
வடிவமாகவும் இறைவனான சிவன் (ஜீவன்)
இருப்பதைக் காணலாம்.

கால் என்பதை காற்று என்றும் ;மூக்கில்
மேலும் கீழும் வாசித்துக் கொண்டிருக்கும்
காற்று ,சிந்தைதனில் ஒத்து ஆடாது,ஓடாது
நின்று போய்விட்டால் மரணமிலாப்
பெருவாழ்வு’ என்று பொருள் கூறுவார்கள்.

அதையே அவ்வையார் ‘வாசி வாசி என்று
வாசித்த சிவம் இன்று சிவா சிவா என
சிந்தைதனில் நின்று’ என்று பாடினார் .

சரிதான்.ஆனால் ‘வாசிக்குதிரையேறி (மூச்சு)
ஞான வேட்டையாட வேண்டுமே தவிர குதிரை
முன்னால் சென்று மறிக்கக் கூடாது’.அதாவது
குதிரையின் கடிவாளத்தைப் பற்றி
குதிரையோட்ட வேண்டுமேயல்லாது குதிரை
முன்னால் சென்று மறிக்கக் கூடாது.

குதிரையின் கடிவாளம் எது ?

‘காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்திட்டால்
கூற்றை உதைத்துக் குதித்தாட மாட்டேனோ? ‘
என்றொரு சித்தர் கூத்தாடுகின்றார்.

ஒரு கடினமான காரியம் இல்லை. சித்தர்கள்
எல்லா (4448 வகையென வகுத்திருக்கிறார்கள்)
நோய்களுக்கும் மருந்திருப்பது போல் இறப்பும்
ஒரு வியாதியென்றும்.சாவு என்பதை
மீறியவர்கள் சித்தர்கள்.எனவே அவர்கள்
ஒருவரை ஒருவர் சாமீ(சாவை மீறியவர்) என
அழைத்துக் கொண்டார்கள்.எங்கள் சித்த ஞான
சபை உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர்
இவ்வாறே அழைத்துக் கொள்ளுவோம்.

அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்களும்
இவ்வாறே சும்மா அர்த்தம் புரியாமல்
அழைத்துக் கொள்ளுகிறார்கள்.

ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு வீதம்,ஒரு மணி
நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளுக்கு
21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன.இப்பட
ி மூச்சு ஒரு கதியில் ஓடி விதியை உருவாக்கி
வைத்து இருக்கிறது.ஒரு நாழிகையான 24
நிமிடங்களில்
360 மூச்சுக்கள் ஓடும்,அந்த 360
மூச்சுக்களும் வட்டத்தின் 360 டிகிரிகளையே
குறிக்கும்.அதற்குள் நவகிரகங்களின்
கதிரியக்கப் பாய்ச்சல் ஒருசுற்று
முடிந்துவிடும்.அதனாலேயே ஒரு நாழிகைக்கு
24 நிமிடக்கணக்கு ஏற்படுத்தப்பட்டது.

216 உயிர் மெய்யெழுத்துக்களும் இந்த 21,600
மூச்சுக்களையே குறிக்கின்றன.12
உயிரெழுத்துக்களும் வலது நாசியில் ஓடும்
சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதைக்
குறிக்கும்.ஒரு மாதத்தில் காலையில் 6
மணியிலிருந்து 7 மணிவரை சூரிய கலை 12
நாட்கள் மட்டுமே ஓடும்.அந்த விவரம் கீழே
கொடுக்கப்பட்டுள்ளது .

உயிரெழுத்துக்களில்குறில் எழுத்து ஐந்தும்
பஞ்ச பூதங்கள் ஐந்தை குறிக்கும்.நெடில்
ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள்
ஏழைக்குறிக்கும்.வள்ளுவர் தமது
குறட்பாக்களில் முதலடியில் 4 சீர்களையும்
இரண்டாவது அடியில் மூன்று சீர்களையும்
(3+4=7)ஏழும் ,அதிகாரங்கள் 133(1+3+3=7)
ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள்
ஏழைக்குறிக்கும்.

18 மெய்யெழுத்துக்களும் இடது நாசியில் 16
அங்குலம் ஓடக்கூடிய சந்திர
கலையையும்,மனம்,உயிரையும் சேர்த்து 18
டை குறிக்கும்.இந்த 18 டையே,பதிணென்
சித்தர்கள் என்றும் ,(பதி எண்ணும் சித்தர்கள்
என்றும் குறிப்பிடுவர்),பதினெட்டுப்
புராணங்கள் என்றும், யோக சாதன முறைகளி
ஏற்படும் தடைகள்(நிலைகளும்)
பதினெட்டு,அய்யப்பன் கோவில் படிகள்
பதினெட்டு,பகவத் கீதையில்
பதினெட்டுஅதிகாரங்களைக் குறிக்கும்,

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த
யுத்தம் பதினெட்டு வருடங்கள்,ராம ராவண
யுத்தம் பதினெட்டு மாதங்கள்,மஹா பாரத
யுத்தம் பதினெட்டு நாள்,சேரன்
செங்குட்டுவன் இமவானுடன் யுத்தம்
புரிந்தது பதினெட்டு நாழிகை, பதினெட்டாம்
படிக்கருப்பசாமி என்றழைப்பதும் இதனால்தான்,

ஏன் பைபிளில் ஆகமங்கள் பதினெட்டு,அதே
போல இடது நாசியில் மூச்சு காலையில் 6
மணியிலிருந்து 7 மணிவரை ஓடும் நாட்களும்
ஒரு மாதத்திற்கு பதினெட்டு நாட்கள்.

"ழ" என்கிற சாகாக்கலையை
******************************

சித்தர்கள் காட்டு ம் சாகாக்கலை !!!? உலகில்
வாழும் மனித இனமே ஆறு அறிவு கொண்டது.

மனித இனம் மட்டுமே இயற்கையை வென்று
வாழ தன உயர்ந்த அறிவுத் திறனைப் பயன்
படுத்தி வருவதை அறிவோம். பிறப்பு இறப்பு
பற்றிய சிந்தனையைச் சீர் தூக்கி சிந்தித்து
வாழும் வகையை அறிய முயற்ச்சித்தான் .

மனிதன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று
விரும்புவது இயற்கைதானே . நீண்ட நாள்
உயிர் வாழ பல மூலிகைகளை க்
கண்டுபிடித்து மருந்துகளை செய்த சித்தர்கள்
குறிப்பாக சில பாடல்களில் எழதிவைத்து
சென்றுள்ளார்கள்.

திருவள்ளுவர் ,திருக்குறளில் நோய்முதல் நாடி
அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்
(திருக்குறள் -948)

நோய் எனபது என்ன என்று அறிந்து நோயின்
காரணத்தை ஆராய்ந்து அந்நோயை நீக்கும் வழி
கண்டுபிடித்து அதற்குரிய மருந்து கொடுத்து
நோயை நீக்கும் படியான செயலை
செய்யவேண்டும் ,என்று விளக்குகிறது .

திருமூலரின் திருமந்திரத்தில் நோய் வராமல்
பாதுகாப்பாக இருக்க வேண்டிய தேவையைக்
கூறுதலைக் காணமுடிகிறது .

உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட
மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை
வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை
வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே !

உடம்பு அழிந்தால் உயிரும் அழியும்
,உறுதியான மெய்ஞானத்தை அடைய
முடியாது , ஆகவே உடம்பை வளர்க்கும் வழி
அறிந்து கொண்டு உடம்பைப் பேணி
வளர்த்தேன் அதனால் உயிரையும்
வளர்த்துக்கொண்டேன்! என்று திருமூலர்
கூறியுள்ளார் .

உணவுக்கட்டுப்பாடு ,தியானம் ,ஒழுக்கம்
ஆகியவற்றை கடைப்பிடித்தால் நீண்ட ஆயுள்
வாழ முடியும் என்பதை நம் சித்தர் பலர்
வாழ்ந்து காட்டியுள்ளார்கள் .

புருவ நடுவில் நாடு நாடியாகிய
சுழுமுனையில் சூரிய கலையும்,
சந்திரகலையும் ஒடுங்கும்போது சுவாசம்
மிகவும் குறைந்து காணப்படும் சுவாசம்
குறைந்து,குறைந்து இயக்கம் இல்லாமல்
மனமும் ஒடுங்கும் அப்போது புருவ
மையத்தியானம்தொடர்ந்து
நடைபெற்றால்மரணமில்லாப் பெருவாழ்வு
வாழ இயலும் என்பதை நினைவூட்டுவதர்க்காகவே நெற்றிநடுவில்திலகமிடுதல் ,திருநீறு
அணிதல் ,திருமண்இடுதல் போன்ற மரபுகள்
தோன்றின .

தமிழ் மொழியை பேசுவதாலும் ஆயுள்
நீடிக்கும் திருமூலரின் திருமந்திரத்தில் "ழ"
என்கிற எழுத்தை உச்சரிக்கும் போது நாவின்
நுனி வளைந்து மேல் நோக்கி அங்குள்ள
மேலண்ணத்தை தொடுகிறது தமிழ் எழுத்தான
"ழ்"லை உச்சரிக்கும் போதே ஆயுளை
நீடிக்கும் நுணுக்கமான யோகா
முறைதிருமந்திரத்தில் காணமுடிகிறது .

நாவின் நுனியை நடுவே சிவிறிடில்
சீவனுமஅங்கே சிவனும் உறைவிடம் மூவரும்
முப்பத்து மூவரும் தோன்றுவர் சாவதும்
இல்லை சதாகொடி ஊனே "ழ்"கரத்தின்
உச்சரிப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும்
இல்லாத சிறப்பு . தமிழ் என்ற சொல்லிலேயே
சாகாக்கலை யின் முத்திரையை
காணமுடிகிறது .

சாகாக்கலையை பயில அடிப்படையாக
இருப்பது சித்தர்களின் பாடல்கள் மேலும்
திருக்குறளில் கூற்றம் குதித்தலும் கைகூடும்
நோற்றலின் ஆற்றல் தலைப் பட்டவர்க்கு இதில்
தவத்தினால் பெற்ற ஆற்றல் சக்தியினால்
மரணம் விளைவிக்கக் கூடிய
கூற்றுவனையும் தாண்டி நீண்ட நாள் உயிர்
வாழ்தல் கூடும் என்று கூறியுள்ளதை
நினைவுகொண்டு வையத்துள் வாழ்வாங்கு
வாழமுற்படுவோம் .

( ், சாகாக்கால், வேகாத்தலை, போகாப்புனல் ஆகிய சொற்களில் உள்ள முதல் எழுத்துகளை சேர்த்து ஒரு சொல்லாக்கி அச்சொல்லில் ஒரு நல்ல அர்த்தம் உள்ளதை கண்ட விதம் வியக்க வைக்கிறது.
சாகாக்கால்... பிராணன்.
வேகாத்தலை... சீவாக்கினி
போகாப்புனல்...அமுதமாகிய சுத்த கங்கை. இதில் யோக முப்பு மறைந்துள்ளது. ஐந்தெழுத்தில் முன் பின் இரண்டெழுத்தைத் தள்ளி நடுவே உள்ள மசிவ என்னும் நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றை பரிபாசையில் சித்தர்கள் கூறியவை மிகவும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.
மேலும் 18 என்ற எண்ணின் பின்னால் உள்ள பல விசயங்களை தெரிந்து கொண்டதின் மூலம் மகிழ்ச்சியாயிருக்கிறது)

வாழ்க சித்தர் வழி , வாழ்வோம் சித்தர் நெறி !!!

1 comment: