Friday, September 30, 2016

Breath calculation

மனிதர்களின் சுவாசக்கணக்கு
=======================

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே - திருமந்திரம்

பதிணென் சித்திர்களில் ஒருவராக விளங்கும் திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியுள்ள செய்தி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு
21,600 சுவாசங்களா உள்வாங்கி வெளியிடுவதாக குறிப்பு.

நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை சித்தர்கள் அங்குலக் கணக்கில் அளந்துள்ளனர். வலது நாசித்துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,
இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும் போது 12 அங்குலமும், நடக்கும் போது 16 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றன. மனித உடலில் சேமிப்பில் இருக்கும் பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை முன்சொன்ன கணக்கு தெளிவாக்குகிறது.

சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.

மனிதனின் வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது என ஞானசர நூல் விளக்குகிறது.

1. இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைத்தனர். இட நாசியில் சுவாசம் நடைபெறும் போது அர்ச்சனை, குடமுழக்கு, திருமணம் போன்ற சுபநிகடிநவுகள் இயற்றிட உத்தமம்.

2. வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும் நேரத்தை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைத்தனர். இந்த நாடி செயல்படும்போது சங்கீதம், உபதேசம், கற்றல் ஆகிய பணிகளைச் செய்யலாம்.

3. சுழுமுனை, இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறைசிந்தனை, தியானம், பிராணயாமம் செய்வது நலம். பிறர் நலம் நாடி வேண்டினால் வெற்றி
உண்டாகும். இந்த சுழுமுனையை இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைத்தனர்.

ரேசகம் - உள் வாங்குதல்
பூரகம் - வெளி விடுதல்
கும்பகம் - உள்ளே நிறுத்துதல்.

No comments:

Post a Comment