Sunday, September 11, 2016

ரேஷன் கார்டில்  ஆதார் எண்களை நாமே ஸ்மார்ட்ப போன் மூலம் எளிதாக செய்யலாம்.

அரசு நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு பதிவு செய்யப்பட்டுக்கொண்டு உள்ளது.

அதை செய்யாதவர்கள், ரேஷன் கடைக்கு சென்று  வரிசையில் நிற்க முடியாதவர்கள் நிறைய உள்ளனர்.

அவர்கள் ஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNePDS என்ற இலவச செயலியை (APP) பதிவிறக்கம் செய்தால் அது நமது ஸ்மார்ட் போன் ஸ்க்ரீனில் வந்துவிடும். பின் அதற்குள் செல்ல  அதில் குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை போட்டால் ஒரு முறை பாஸ்வேர்ட்  குறுஞ்செய்தியாக  (one time password) நமது தொலைபேசிக்கு வரும்.அதை அந்த செயலியில் போட்டவுடன்  நமக்குரிய  நம் பக்கம் திறக்கும.

அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டு காமரா முன்பு நம் ஆதார் அட்டையில்  உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR code ஸ்கேன் செய்து நமது ஆதார் எண் திரையில் தோன்றும். நாம் "சமர்ப்பி" என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். பதிவான ஆதார் எண் அதில் தோன்றும்.

பிறகு அதே போல் ரேசன் கார்டில் உள்ள வரிசைப்படி  குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளை வரிசையாக  பதிவு செய்யலாம்.

அதிகம் இதை பகிரவும் .

No comments:

Post a Comment