Sunday, September 11, 2016

வாழை இலை   

                                                       
==========
புராண  காலங்களில்  வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண  காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது ,  அனுமனையும் தன்னுடன்  ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான்  அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம்  ராமன்.

ராமர் இருந்த பக்கத்தில்  மனிதர்கள்  விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும்   , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும்   காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய  அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம்.

வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.

“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக  வர வேண்டுமா..? வலது பக்கமா..?”

இலையின் நுனி  , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக  வருகிற மாதிரி போட வேண்டும்.

ஏன்..?

நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின்   வலது பக்கம் அதிக இடம் தேவை..!

சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான  இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது   ஏன்..?

உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான்  சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !

சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை  இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.

சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?

இல்லை..!

இலையில்  முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.

இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

ஆனால் ....
இவை எல்லாவற்றையும்
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,
அந்நிய கலாச்சாரத்திற்கு நாம் மாறி விட்டோம் என்பது உண்மை.



No comments:

Post a Comment