Monday, May 16, 2016

ஆசை சக்கரத்தில் மனம் உழலும் வரை பிறவிச் சக்கரத்தில் சுழல வேண்டியது தான். ஆசை மிகின் துன்பம். அறியாமை மிகின் துன்பம். அகங்காரம் மிகின் துன்பம். மிகுந்தால் மட்டுமில்லை. இருந்தாலே துன்பம் தான். அழகு, ஆற்றல், அஞ்ஞானம் கூட அகங்காரத்தைக் கொடுக்கிறது. அகங்காரம் நிரந்தரமாக நீங்கினாலே பரிபூரண ஞானம் கிடைக்கிறது. உடலோடு அடையாளப் படுத்திக் கொள்ளும் வரை, ஐக்கியப் படுத்திக் கொள்ளும் வரை அறியாமை - அஞ்ஞானம், அகங்காரம், ஆசை, பேதாபேதங்கள் இருந்து கொண்டேத் தான் இருக்கும். உயிரோடு, ஆத்மாவோடு அடையாளப் படுத்திக் கொண்டால் பேதங்கள் குறைகின்றன. ஐக்கியப்படுத்திக் கொண்டாலோ மறைகின்றன. உடலையும், மனதையும், புத்தியையும், புலன்களையும் மௌனத்தில் இருத்துவது தியானம். நிரந்தரமான இருப்பில் இருப்பது, தொடர்பு கொள்வது தியானம். சாட்சி் பாவத்தில் இருப்பது தியானம். தியான முறைகள் மாறக்கூடும். நிரந்தரமான இருப்போடு, ஆத்மாவோடு தொடர்பு கொள்வதே தியானம். பக்தியோ, ஞானமோ, தியானமோ உள்ளே தான், தனக்குள்ளேயே தான், உடலுக்குள்ளேயே தான் நிகழ்ந்தாக வேண்டும். அறிவதென்றாலும், ஆனந்தத்தை அடைவதென்றாலும் உள்ளே தான் அது நிகழ்ந்தாக வேண்டும். ஒருமுகப்படுத்தப்பட்ட இயல்பான பக்தி பாவத்திலோ, ஞான பாவத்திலோ, சாட்சி பாவத்திலோ, இயல்பான தன் முனைப்பற்ற உணர்வில் இருப்பது தியானம். அந்த தியானத்தில் தன்னை இழந்து பூரணத்தோடு கலந்து விட்டாலோ சமாதி். உயிருடன் இறத்தல், அறிதுயில், சுய உணர்வற்று பிரபஞ்ச உணர்வுடன் இருத்தல் என்று அடைந்தவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். இருப்பில் இருப்பது, தியானத்திலேயே இருப்பது ஆனந்தமும் கூட. திகட்டாத ஆனந்தம். திகட்டுவதாய் இருந்தால் உன்னதத்தை யாரும் நிரந்தரமாக அடைய முடியாது. அதாவது சமாதியில் கலக்க முடியாது. ஆத்மாவில் லயிக்க முடியாது. கர்ம வினைகள் நீங்கும் வரை பூரணத்தில் கலத்தல் இயலாது. உலகில் வேறெதையும் அடைய நினைக்கும் வரை, அதை - ஆத்மாவை அடைய இயலாது. இதை அடைய பூரணமாக விரும்பியவர்களுக்கு ஆத்மா வழிகாட்டுகிறது. இந்த ஆத்மாவை இறைவன் என்றழைக்கின்றனர் பக்தர்கள். தன்னுள்ளேயே தேடிக்கண்டனர் சித்தர்கள். அனைத்தையும் இறைவனாய் கண்டவர்கள் ஞானிகள். அறிவு என்பது கடன் வாங்கப் பட்ட ஒன்றே. எதையாவதை எதன் மூலமாகவோ அறிந்துக் கொள்வது. அறிவினால் சுயமாக அறிந்து கொள்ள முடியாது. அறிந்து கொள்ள ஏதாவது ஒன்று வேண்டும். அறிவது அறிவு. ஆனால் சுயத்தை, மூலத்தை, அந்த ஆதி மூலத்தை அறிவதே, அறிந்து அடைதலே ஞானம். தன்னைத் தன்னில் அறிதல். தன்னைத் தன்னிலேயே அடைதல். தன்னைப் படைத்தவனை அறிந்து அடையாதவரை ஆசையும், அறியாமையும், அகங்காரமும் நீங்காது. உலகில் எத்தனையோ விந்தைகள், வினோதங்களும், கேளிக்கைகளுமிருந்தாலும் இறைவனால் அளிக்கப் படும் ஏதோ ஒன்று ( ஆறுதலோ, நிறைவோ, அமைதியோ, ஆனந்தமோ , பரிபூரணமோ - அது ஒவ்வொரு நாமத்தில், ரூபத்தில் ஏதோ ஒரு விதத்தில் அளிக்கப் படுகிறது.) ஒவ்வொரு மனித உயிரையும் இறைவன் பால் ஈர்த்துக் கொண்டு தானிருக்கிறது வேறு வேறு தருணங்களில். ஏனென்றால், யாரும் தர முடியாத ஒன்று இறைவனால் தரப்படுகின்றது. அதனால் தான் இறைவனிடம் கூட ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றது. உரிய தருணம் வரும் பொழுது இறைவன் குருவை காட்டுகிறார். உரிய தருணத்தில் குருவும் தகுதியான சீடனுக்கு இறைவனை அடையும் வழியைக் காட்டுகிறார். அது வரை உயிர்கள் உலகில் பயணிக்கின்றன. இவை எல்லாமே வெறும் நம்பிக்கையா இல்லை உண்மை தானா..? நம்பிக்கையில் ஆரம்பித்து 'அதை' அடையும் வரை உயிர்கள் பயணித்தும் அனுபவத்தில் தாமே விடை காண வேண்டிய கேள்வி. ஞானம் ஒன்றும் பழையதுமில்லை, புதியதுமில்லை. விந்தையுமில்லை. முன்பே இருந்த ஒன்று பின்பு இல்லாத ஒன்று என்றால் அது பழையது. ஏற்கனவே இல்லாத ஒன்று இப்பொழுது இருந்தால் அது புதியது. ஆத்மாவோ எப்பொழுதுமிருப்பது. காலத்தை வைத்து ஒப்பிட்டால் தான் பழையது, புதியது எல்லாம். மாற்றத்திற்கு உட்படும் ஒன்றுக்குத் தான் கால நேர அவசியமுண்டு. எப்பொழுதும் நிரந்தரமான, அழியாத, மாற்றமடையாத ஆத்மா காலமற்றது. (Eternal, Timeless). எனவே ஞானம் என்பது பிரபஞ்சத்தை படைத்த அழியாததோடு, ஆத்மாவோடு சம்பந்தப் பட்டது. அதன் இருப்பு என்பது எப்பொழுதும் இருப்பது. ஞானம் அடைந்தவர்கள் வேண்டுமென்றால் புதியவர்களாக இருக்கக்கூடும் ஒவ்வொரு காலகட்டங்களில். இறையருளில்லாமல் குருவினைக் காண முடியாது. குருவில்லாமல் இறைவனை அடைய முடியாது. சிலருக்கு இறைவனே குருவாய் வழி காட்டுகிறார். முற்காலத்தில் குருக்கள் உண்டு. இக்காலத்திலும் உண்டா? எக்காலத்திலும் உண்டு. ஏனென்றால் எக்காலத்திலும் இறைவன் உண்டு. இறைவன் சத்தியமானவன். நித்தியமானவன். சத்தியம், நித்தியம் என்றாலே எப்பொழுதும் மாறாதிருக்கும் உண்மையே. குருவும் சத்தியமே. இறைவனைக் காட்டும் வழியைக் காட்டுபவரே குரு. சற்குரு. ஆனால் அந்த வழியில் நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் பயணித்தல் அவசியமாகிறது. அறிதல் அல்ல ஞானம். புரிதலுமல்ல ஞானம். அடைய முயற்சித்தலுமல்ல ஞானம். அதுவாய் நிரந்தரமாய் இருத்தலே ஞானம்.by.pp

ஆசை சக்கரத்தில் மனம் உழலும் வரை
பிறவிச் சக்கரத்தில் சுழல வேண்டியது தான்.

ஆசை மிகின் துன்பம்.
அறியாமை மிகின் துன்பம்.
அகங்காரம் மிகின் துன்பம்.
மிகுந்தால் மட்டுமில்லை.
இருந்தாலே துன்பம் தான்.

அழகு, ஆற்றல், அஞ்ஞானம் கூட அகங்காரத்தைக் கொடுக்கிறது.
அகங்காரம் நிரந்தரமாக நீங்கினாலே பரிபூரண ஞானம் கிடைக்கிறது.

உடலோடு அடையாளப் படுத்திக் கொள்ளும் வரை, ஐக்கியப் படுத்திக் கொள்ளும் வரை அறியாமை - அஞ்ஞானம், அகங்காரம், ஆசை, பேதாபேதங்கள் இருந்து கொண்டேத் தான் இருக்கும்.

உயிரோடு, ஆத்மாவோடு அடையாளப் படுத்திக் கொண்டால் பேதங்கள் குறைகின்றன. ஐக்கியப்படுத்திக் கொண்டாலோ மறைகின்றன. உடலையும், மனதையும், புத்தியையும், புலன்களையும்  மௌனத்தில் இருத்துவது தியானம். நிரந்தரமான இருப்பில் இருப்பது, தொடர்பு கொள்வது தியானம். சாட்சி் பாவத்தில் இருப்பது தியானம். தியான முறைகள் மாறக்கூடும். நிரந்தரமான இருப்போடு, ஆத்மாவோடு தொடர்பு கொள்வதே தியானம்.

பக்தியோ, ஞானமோ, தியானமோ உள்ளே தான், தனக்குள்ளேயே தான், உடலுக்குள்ளேயே தான் நிகழ்ந்தாக வேண்டும். அறிவதென்றாலும், ஆனந்தத்தை அடைவதென்றாலும் உள்ளே தான் அது நிகழ்ந்தாக வேண்டும்.

ஒருமுகப்படுத்தப்பட்ட இயல்பான பக்தி பாவத்திலோ, ஞான பாவத்திலோ, சாட்சி பாவத்திலோ, இயல்பான தன் முனைப்பற்ற உணர்வில் இருப்பது தியானம். அந்த தியானத்தில் தன்னை இழந்து பூரணத்தோடு கலந்து விட்டாலோ சமாதி். உயிருடன் இறத்தல், அறிதுயில், சுய உணர்வற்று பிரபஞ்ச உணர்வுடன் இருத்தல் என்று அடைந்தவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.

இருப்பில் இருப்பது, தியானத்திலேயே இருப்பது ஆனந்தமும் கூட. திகட்டாத ஆனந்தம். திகட்டுவதாய் இருந்தால் உன்னதத்தை யாரும் நிரந்தரமாக அடைய முடியாது. அதாவது சமாதியில் கலக்க முடியாது. ஆத்மாவில் லயிக்க முடியாது. கர்ம வினைகள் நீங்கும் வரை பூரணத்தில் கலத்தல் இயலாது. உலகில் வேறெதையும் அடைய நினைக்கும் வரை, அதை - ஆத்மாவை அடைய இயலாது. இதை அடைய பூரணமாக விரும்பியவர்களுக்கு ஆத்மா வழிகாட்டுகிறது.

இந்த ஆத்மாவை இறைவன் என்றழைக்கின்றனர் பக்தர்கள். தன்னுள்ளேயே தேடிக்கண்டனர் சித்தர்கள். அனைத்தையும் இறைவனாய் கண்டவர்கள் ஞானிகள்.

அறிவு என்பது கடன் வாங்கப் பட்ட ஒன்றே. எதையாவதை எதன் மூலமாகவோ அறிந்துக் கொள்வது. அறிவினால் சுயமாக அறிந்து கொள்ள முடியாது. அறிந்து கொள்ள ஏதாவது ஒன்று வேண்டும். அறிவது அறிவு. ஆனால் சுயத்தை, மூலத்தை, அந்த ஆதி மூலத்தை அறிவதே, அறிந்து  அடைதலே ஞானம். தன்னைத் தன்னில் அறிதல். தன்னைத் தன்னிலேயே அடைதல். தன்னைப் படைத்தவனை அறிந்து அடையாதவரை ஆசையும், அறியாமையும், அகங்காரமும் நீங்காது.

உலகில் எத்தனையோ விந்தைகள், வினோதங்களும், கேளிக்கைகளுமிருந்தாலும் இறைவனால் அளிக்கப் படும் ஏதோ ஒன்று ( ஆறுதலோ, நிறைவோ, அமைதியோ, ஆனந்தமோ , பரிபூரணமோ - அது ஒவ்வொரு நாமத்தில், ரூபத்தில் ஏதோ ஒரு விதத்தில் அளிக்கப் படுகிறது.) ஒவ்வொரு மனித உயிரையும் இறைவன் பால் ஈர்த்துக் கொண்டு தானிருக்கிறது வேறு வேறு தருணங்களில்.

ஏனென்றால், யாரும் தர முடியாத ஒன்று இறைவனால் தரப்படுகின்றது. அதனால் தான் இறைவனிடம் கூட ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றது. உரிய தருணம் வரும் பொழுது இறைவன் குருவை காட்டுகிறார். உரிய தருணத்தில் குருவும் தகுதியான சீடனுக்கு இறைவனை அடையும் வழியைக் காட்டுகிறார். அது வரை உயிர்கள் உலகில் பயணிக்கின்றன. இவை எல்லாமே வெறும் நம்பிக்கையா இல்லை உண்மை தானா..?  நம்பிக்கையில் ஆரம்பித்து 'அதை' அடையும் வரை உயிர்கள் பயணித்தும் அனுபவத்தில் தாமே விடை காண வேண்டிய கேள்வி.

ஞானம் ஒன்றும் பழையதுமில்லை, புதியதுமில்லை. விந்தையுமில்லை. முன்பே இருந்த ஒன்று பின்பு இல்லாத ஒன்று என்றால் அது பழையது. ஏற்கனவே இல்லாத ஒன்று இப்பொழுது இருந்தால் அது புதியது. ஆத்மாவோ எப்பொழுதுமிருப்பது. காலத்தை வைத்து ஒப்பிட்டால் தான் பழையது, புதியது எல்லாம். மாற்றத்திற்கு உட்படும் ஒன்றுக்குத் தான் கால நேர அவசியமுண்டு. எப்பொழுதும் நிரந்தரமான, அழியாத, மாற்றமடையாத ஆத்மா காலமற்றது. (Eternal, Timeless). எனவே ஞானம் என்பது பிரபஞ்சத்தை படைத்த அழியாததோடு, ஆத்மாவோடு சம்பந்தப் பட்டது. அதன் இருப்பு என்பது எப்பொழுதும் இருப்பது. ஞானம் அடைந்தவர்கள் வேண்டுமென்றால் புதியவர்களாக இருக்கக்கூடும் ஒவ்வொரு காலகட்டங்களில்.

இறையருளில்லாமல் குருவினைக் காண முடியாது. குருவில்லாமல் இறைவனை அடைய முடியாது. சிலருக்கு இறைவனே குருவாய் வழி காட்டுகிறார். முற்காலத்தில் குருக்கள் உண்டு. இக்காலத்திலும் உண்டா? எக்காலத்திலும் உண்டு. ஏனென்றால் எக்காலத்திலும்  இறைவன் உண்டு. இறைவன் சத்தியமானவன். நித்தியமானவன். சத்தியம், நித்தியம் என்றாலே எப்பொழுதும் மாறாதிருக்கும் உண்மையே. குருவும் சத்தியமே.  இறைவனைக் காட்டும் வழியைக் காட்டுபவரே குரு. சற்குரு. ஆனால் அந்த வழியில் நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் பயணித்தல் அவசியமாகிறது.

அறிதல் அல்ல ஞானம்.
புரிதலுமல்ல ஞானம்.
அடைய முயற்சித்தலுமல்ல ஞானம்.
அதுவாய் நிரந்தரமாய் இருத்தலே ஞானம்.by.pp

No comments:

Post a Comment