Thursday, May 26, 2016

பிரணாயாமம்👇

சித்தர்கள் உணர்த்தும் மூச்சு அடக்கல் : பிராணன் என்பது உயிர் காற்று. தச வாயுக்களில் பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்ற ஐந்து முக்கியமானது, இதில் முக்கியமானது பிராணனே. இந்த பிராண வாயு இயங்காமல் அதன் உதிப்பிடத்தில் சலன படாமல் நிறுத்த வேண்டும். இதுவே பிரணாயமம் . பிராணன் சலன பட்டால் உயிர் புலன்களோடு கூடி செயல் படும். இந்த செயலை தடுத்து நிறுத்துவதே பிரணாயாம பயிற்சி. பிரானனது இயக்கம் இருக்கும் வரை பொறி புலன்கள் எதாவது ஒன்றை பற்றி காரியத்தில் ஈடுபட்டு மனம் அலையும். இந்த அலையை நிலைபடுதுவதே பிரணாயமம். பிராணன் நிலைக்க மனமும் நிலைக்கும்.

பூரக, ரேச, கும்பம் ஆகிய நினைப்பு மறப்பு செயல் ஆகிய மூன்றும் இடகலை பிங்கலை சுழுமுனை நாடிகளின் வழியே கீழும் மேலும் ஓயாது இயங்கும் காற்றை யாரொருவர் ஒரு பிடிக்குள் அசையாது நிறுத்தும் கணக்காகிய கால அளவை அறிந்து கொண்டார்களோ, அவர்களே எமனை வெற்றி கொண்டு எக்காலத்தும் உலகில் மரணமில்ல வாழ்வை பெறுவார்.

அவ்வை
வாயு வழக்கமறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கமுண்டாம்

வாயுவானது தானே அடங்க வேண்டும், பலவந்தமாக அடக்க கூடாது.
உடலில் ஈசன் குடி கொண்டு இருக்கும் இடம் ஒன்று. அங்கே வாயுவை நிறுத்த வேண்டும்.
அந்த வெளிக்குள்ளே வாயு செறிந்து அடங்கும். அப்படி அடங்க பிராணன் அடங்கும். ஆன்மா
தன் உண்மை சொருபத்தில் ஆனந்தித்து உடம்பின் தத்துவங்களை மாற்றி அமைக்கும்.

திருவடியிலே மனதை நிறுத்தி பழகினால் பிராணன் அங்கு அடங்கும். அதுவே பிரணயாம சித்தி.

சுவாசம் கண்டத்துக்கு கீழ் உலகவர்க்கு கண்டதிக்கு மேல் யோகியர்க்கும் செயல் படும் என்பது சித்தர் அனுபவித்து உரைத்தனர் மனம் அழிந்த நிலையில் தான் பிரணாயமம் சித்திக்கும், சிவ வாக்கியர் குறிப்பிடும் உருத்தரித்த நாடி என்பது இடகலை பிங்கலை சுழுமுனை நாடிகள்அல்ல. தச நாடிகள் அல்ல என்பதை சித்தி பெற்ற குருவின் துணையை நாடவேண்டும்.

குரு தொட்டு கட்டும் இடம்தான் மனம் விரிவதக்கும் ஒடுங்குவதக்கும் காரணமாக இருப்பது. மனமும் உயிரும் அடங்கும் இடத்தை காட்டி கொடுக்கும் குருவை தேடி அடையுங்கள். கண்டத்திற்கு கீழே ஆதாரங்கள் இருப்பது போலே சிரசிலும் ஆதாரங்கள் உள்ளன.
அவை விழிப்படைந்து நாதாகலையும் விந்துகலையும் அமிர்தகலையும் செயல் பட வேண்டும். அப்பொழுது தான் ஜீவனின் உலகியல் செயல்பாடுகள் விடுபட்டு புதிய ஆனந்தமான செய்திகளும் அற்புதமான ஆன்மாவின் செயல்களும் ஆன்மாவின் வல்லமைகளும் தெரிய வரும்.

பிரணாயாம பயிற்சியும் பிரணாயாம சித்தியும் ஆன்மாவை பிறப்பு இறப்பில் இருந்து விடுதலை அடைய செய்கிறது. தன்னை வினை/வேதனையில் இருந்து விடுவித்து
பிறருக்கு நல்லவற்றை உணர்த்தும் தன்மையை பெறுகிறது.

உடம்பு அழியாமல் காக்கும் பொருட்டே பிரணாயாம பயிற்சியை சித்தர்கள் கூறி வைத்தனர். அனுபவித்து உணர்வது வேறு படித்து தெரிவது வேறு. ஆகவே அனுபவித்து அறிவதே பிராணாயாமம். அதற்க்கு தகுந்த ஆசான் தேவை.

No comments:

Post a Comment