Thursday, May 19, 2016

பஞ்சம் - 5

பஞ்சம் - 5
1.பஞ்ச கன்னியர்
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி,
மண்டோதரி.
2.பஞ்சவாசம்
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய்,
தக்கோலம்.
3.பஞ்சாமிர்தம்
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.
4.பஞ்சபாண்டவர்
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.
5.பஞ்சசீலம்
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை,
காமமின்மை, இரவாமை.
6.பஞ்சதிராவிடர்
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர்,
கூர்ஜரர்.
7.பஞ்சபட்சி
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
8.பஞ்சபுராணம்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.
9.பஞ்சரத்தினம்
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
10.பஞ்சவர்ணம்
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை,
பசுமை.
11.பஞ்சாங்கம்
கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.
12.பஞ்சமூலம்
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி,
பேரரத்தை, சுக்கு.
13.பஞ்சபாதகம்
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை,
கொலை.
14.பஞ்சபாணம்
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.
15.பஞ்சாயுதம்
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.
16.பஞ்சபரமோட்டி
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆச
ிரியர்,சாதுக்கள்.
17.பஞ்சசிகை
தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.
18.பஞ்சதேவர்
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன்,
சதாசிவன்.
19.பஞ்சஸ்தலம்
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம்,
வைத்தியநாத்.
20. பஞ்ச பூதங்கள்
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்.by.pp

No comments:

Post a Comment