புகழ்பெற்ற 18 சித்தர்கள் கோவில்கள் !!
உலகில் கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.
அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.
உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே.
அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே.
இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் இதோ:-
அகஸ்தியர் - திருவனந்தபுரம்
கொங்கணர் - திருப்பதி
சுந்தரனார் - மதுரை
கரூவூரார் - கரூர்
திருமூலர் - சிதம்பரம்
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் - பொய்யூர்
குதம்பை சித்தர் - மாயவரம்
இடைக்காடர் - திருவண்ணாமலை
இராமதேவர் - அழகர்மலை
கமலமுனி - திருவாரூர்
சட்டமுனி - திருவரங்கம்
வான்மீகர் - எட்டிக்குடி
நந்திதேவர் - காசி
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
போகர் - பழனி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
பதஞ்சலி - இராமேஸ்வரம்
இவைகள் போலவே, தமிழகத்தில் மிகப் பிரபலமாக உள்ள கோவில்களில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளதை அறியலாம்.
ஜீவசமாதிகளுக்கு சென்று வணங்கினால், நமக்கு உள்ள எல்லா தோஷங்களும் விலகி ஓடும். தீய சக்திகள் நம்மை நெருங்காது. மனம் அமைதி பெரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்வில் வெற்றி நம்மைத் தேடிவரும்.
எனவே, ஜீவசமாதிகள் பெரும்பாலும், மூலவருக்கு அருகிலேயே தனிச்சன்னதி கொண்டு இருக்கும். அங்கு சென்று, மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், நமது எல்லா செயல்களும் வெற்றி பெறுவது நிச்சயம்.
-கே.என்.வடிவேல்
http://tamil.webdunia.com/
No comments:
Post a Comment