நோயெதிர்ப்புத் திறன் வளர்க்க, இரத்த சோகை, உடல் தளர்ச்சி நீங்க, நெல்லி மணப்பாகை பயன்படுத்தலாம்.
நெல்லி மணப்பாகு தயாரிக்கும் முறை:
நெல்லிவற்றல் - 300 கிராம்
கருப்பட்டி - 750 கிராம்
300 கிராம் நெல்லிவற்றலுடன் நான்கு லிட்டர் நீர் சேர்த்து அடுப்பேற்றி ஒரு லிட்டராக வற்ற வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் தூய்மைப்படுத்திய கருப்பட்டியைக் கலந்து அடுப்பேற்றி பாகுபதம் வரும்வரை சிறு தீயாக எரித்து இறக்கி வைத்துக்கொண்டால் நெல்லிமணப்பாகு தயார்!
.
அளவு:
பெரியவர்களுக்கு- 15 மில்லி
சிறியவர்களுக்கு -5 மில்லி
.
கற்ப அவிழ்தம் சித்த மருத்துவ மாத இதழில் வெளியான கட்டுரை
.
எழுதியவர்:
மருத்துவர் M.அருண் B.SM.S.,
No comments:
Post a Comment