Thursday, May 19, 2016

தேவையில்லாத ஆணிகள்  மகாத்மா காந்தி  

தேவையில்லாத ஆணிகள்  மகாத்மா காந்தி   இங்கிலாந்தில் இருந்தபோது  ஒரு பல்பொருள் அங்காடி முழுவதும் பார்த்துவிட்டு எதையும் வாங்காமல் வெளியேற எத்தனித்தபோது அங்கிருந்த கடை மேற்பார்வையாளர் எங்கள் கடையில் விதவிதமான துணிகள் அழகுப்பொருட்கள், உணவுப் பொருட்கள் என்று அத்தனையும் இருக்கிறது. ஆனால் நீங்கள் எதையும் வாங்காமல் செல்கிறீர்களே?  இதில் எதுவும் உங்களுக்கு பிடிக்கவில்லையா? என்று கேட்டாராம் அதற்கு மகாத்மா " உண்மையை சொல்வதென்றால் நான் இங்கு எதையும் வாங்க வரவில்லை இந்த கடையில் இருக்கின்ற எத்தனை பொருள்களின் தேவை இல்லாமல் என்னால் வாழமுடியும் என்று பார்க்கவே வந்தேன் இங்குள்ள எந்த பொருளும் எனக்கு தேவைப்படாது என்று சொல்லிவிட்டு வெளியேறினாராம்.!  ஆனால், நாம் இன்றைக்கு அறிந்தும் அறியாமலும்  வாங்கி குவிக்கும் குப்பைகள் ஏராளம்.!  ஒவ்வெரு நடுத்தர வீட்டிலும் சப்பல் முதல் மின்னனு பொருட்கள் வரை எத்தனையோ பொருட்கள் தேவையைவிட அதிகமாக இருக்கிறது.! ஒரே வீட்டில் பலவிதமான சோப்பு, பவுடர், பேஸ்ட் , கிரீம், லோசன், கொசுமருந்து, கழிவறை சுத்திகரிப்பு பொருட்கள், வீட்டை வாசனையாக்கும் திரவங்கள் என்று எத்தனையோ நச்சுக் குப்பைகள் ஒவ்வெரு வீடுகளிலும் நிரம்பி வழிகிறது.! இதுவாவது பரவாயில்லை உடலை கெடுக்கும் ஏசி, கிரைண்டர், ஹார்லிக்ஸ், பூஸ்ட், சீனி,  மைதா,பாக்கெட் பால் , வாசிங் மிசின், பாக்கெட் குப்பை உணவுகள்,பெப்ஸி,கோக், மிராண்டா,மாசா போன்ற  பாட்டில்  ஆசிட்கள் இல்லாத வீடுகளை பார்ப்பது இன்று மிகவும் அரிதாக இருக்கிறது.! சமீபத்தில் ஒரு டீச்சர் வீட்டு விசேசத்திற்கு சென்றிருந்தேன் பந்தி ஆரம்பித்து ஐந்து நிமிடத்தில் இரண்டு முறை சாதம், பருப்பு, மோர், இரண்டு பாயாசம் பழம் என்று அத்தனையும் என்னை கடந்துவிட்டது நான் முதலில் சாப்பிட ஆரம்பித்த சாம்பாரை கூட முடிக்கவில்லை எனது பக்கத்தில் இருந்த  அத்தனை பேரும் பாதி உணவுப் பொருட்களை இலையில் வைத்துவிட்டே எழுந்து விட்டார்கள்.! அங்கு வீணாண உணவை வைத்து இன்னொரு திருமண விருந்தையே முடித்துவிடலாம் அவ்வளவு வீண்.! இப்பொழுது எல்லா திருமண வீட்டிலும் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கொடுக்கிறார்கள்.! வசதியான இடம் என்றால் ஐஸ்கிரீம், பாப்கார்ன் என்று அந்த குப்பைகள் வேறு தனியாய் ஓடுகிறது.! இன்னும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாத ஒரு தேசத்தில்  விவசாயம் அழிந்து வரும் ஒரு தேசத்தில்  தினமும் பட்டினியாக தூங்குபவர்கள் இருபது கோடிக்கும் மேல் என்று கணக்கிடப் பட்டுள்ள ஒரு தேசத்தில் இதுபோன்ற கேடித்தனங்கள் நடந்தால் மண்மாதா நம்மை மண்ணிப்பாளா, நீ வீண் விரயம் செய்த ஒவ்வெரு துளி நீருக்கும்  கூட மறுமையில்  கேள்விகேட்கப் படுவாய் என்ற இறைவன் தான்  இதைப் பார்த்து பொறுத்துக் கொள்வானா?  இப்பொழுதெல்லாம் நிறைய இளம் வயது பிள்ளைகள் 28 அளவுள்ள இடுப்பிற்கு 34 அளவுள்ள பேன்ட் வாங்கிப் போட்டுக் கொண்டு பின்னகத்தை திறந்து போட்டுக் கொண்டே நடக்கிறார்கள். பேருந்திலோ இரயிலிலோ  கையை தூக்கினால் ஜட்டியில் சக்கரை வரை தெரிகிறது.! என்ன ஒரு கோமாளித்தனம்?  இவ்வளவு துணியை விரயம் செய்தும் மறைக்க வேண்டியதை மறைக்காத நவநாகரீம் என்ற காட்டு மீராண்டித் தனத்தை எந்த  அறிவாளி முதலில் செய்தான்? அதைப் பார்த்து யூத் என்றால் இப்படித்தான் --த்தை காட்டி நடக்க வேண்டும் என்று எந்தப் பள்ளி கல்லூரியில் படித்தார்கள்.! லூசாக இருப்பது இவர்களின் உடை மட்டுமல்ல மண்டையும் அல்லவா.! என்ன மாதிரியான மோகம் இது.! தேவை இல்லாத பொருளை வாங்குபவன் தேவையான பொருளை விற்க வேண்டிய நிலமைக்கு வருவான்.! கண்டகண்ட இரசாயண குப்பைகளையும் உள்ளே தள்ளுவதற்கு  நமது வயிறொன்றும் நாற்றெமெடுக்கும் குப்பை தொட்டி இல்லை.! தேவையில்லாத பொருட்களை சேகரிப்பதற்கு நமது இல்லம் ஒன்றும் காயலான் கடையில்லை.! உலகில் உள்ள அனைத்து வாசனைப் பொருட்களையும் போட்டு மணப்பதற்கு நமது உடல் பிணமில்லை.!    பூமியை அதிரவைத்து மாசுபடுத்தி ஆடம்பர நாகரீக வலையில் மாட்டி எதிர்கால சந்ததிக்கு சொர்க்கமாக ஒப்படைக்க வேண்டிய பூமியை வர்த்தக நரகமாய் மாற்றாமல்  மனிதனாய் வாழ்வோம்.! மகாத்மாவாக வாழாவிட்டாலும் பரவாயில்லை.!         நலம் பெருகட்டும் …     amyogatrust.blogspot.com    mobile:9629368389

No comments:

Post a Comment