'சார்... உங்க செல்போன் நம்பர் என்ன?'- மறந்துபோன மனப்பாடக் கல்வி!
''சார்... உங்க செல்போன் நம்பர் என்ன?''
-இப்படி யாராவது என்னிடம் கேட்டால், உடனே என்னோட செல் நம்பரை ஒப்பிக்க முடியாது. என்னோட செல் நம்பர் மட்டுமல்ல..அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள்னு நெருக்கமானவர்கள் நம்பர் கூட நினைவில் இருப்பதில்லை. ஆனால், டெலிபோன் மட்டுமே புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில், வீடு, உறவினர்கள், நண்பர்கள், அரசு அலுவலகங்கள் என்று கிட்டத்தட்ட 200 போன் நம்பர்களை மனப்பாடம் செய்துவைத்திருந்தேன். அதில் எஸ்.டி.டி.கோடும் அத்துப்படி.
சரி! விஷயத்துக்கு வருவோம்...
இன்றைய செல்போன் எண்களை எத்தனை முறை மனப்பாடம் செய்தாலும் அதை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லையே ஏன்?
எல்லாமே டெக்னாலஜிதான், வளர்ந்துவரும் டெக்னாலஜி நமது நினைவாற்றலை படிப்படியாக குறைத்துவருகிறது. மூளை செய்யவேண்டிய இது போன்ற பணிகளை மெமரி கார்டு செய்துவிடுகிறது. நாம் போன்செய்ய வேண்டிய நபரின் பெயரை 'டச்' செய்தாலே போதும் அடுத்த நொடியில் அவருடன் பேசமுடியும்.
ஒரு வேளை போன் ரிப்பேர் ஆனாலோ, தொலைந்துபோனாலோ நமதுபாடு அம்போதான். இப்படித்தான் ஒரு முறை கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு இளைஞர் வேலை சம்பந்தமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு சந்திக்க வேண்டிய நபர்களின் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தனது போனில் மட்டுமே பதிவு செய்திருந்தார்.
டெல்லி ரயில் நிலையத்தில் இறங்கியவுடன், தான் வந்ததை நண்பருக்கு தெரிவிக்க செல்போனை எடுத்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது செல்போன் முற்றிலும் செயல் இழந்து இருந்தது. டெல்லி நண்பர்களின் தொடர்பு மட்டுமல்ல அவரது குடும்பத்தினர் செல்போன் எண் கூட நினைவில் இல்லை. தேவைப்படும் எண்களை அவர் துண்டு சீட்டில் கூட குறித்து வைக்கவில்லை. எல்லாமே போனில் பதிவாயிருக்கிறது என்கிற நம்பிக்கைதான்.
அந்த நம்பிக்கை அவரை நடுரோட்டில் அலைய விட்டது. ஏறத்தாழ பல மணிநேரம் அலைந்து திரிந்து விசாரித்து, ஒருவழியாக நண்பரின் வீட்டுக்கு சென்று சேர்ந்துள்ளார். அங்கு இவர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? நண்பரின் தொடர்பு எண்ணை துண்டுச்சீட்டில் குறித்து, பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டார்.
இது இவருக்கான அனுபவம் என்று எடுத்துக்கொள்ள தேவையில்லை. பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். என்னதான் டெக்கனாலஜி நமக்கு துணைபுரிந்தாலும் அது யோசிக்க தெரியாத ஓர் இயந்திரம்தான் என்பதை நினைவில் வைத்து, இனிமேலாவது, முக்கிய விஷயங்களை தலைமை செயலகமான நம் மூளையிலும் பதிவு செய்வோ
No comments:
Post a Comment