கோபுர கலசத்தின் ரகசியங்கள்:
-----------------------------------------
கோயிலின் நுழைவாயிலாக விளங்கும் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டியிருக்கும் கலசங்களின் மகிமை மிகவும் அற்புதமானது.
பழங்காலத்தில் தமிழர்களின் விஞ்ஞான அறிவு நம்மை ஆச்சரியபடுத்தும் அளவில் கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் இருந்தது.
என்ன காரணம் என்றால் கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும்அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன.
நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் ஆகியவை கோபுர கலத்தில் இருக்கும். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக இருக்கும். காரணம் என்ன வென்றால் "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றது என அந்தகாலத்திலேயேஅறிந்து வைத்துள்ளார்கள். இந்த நுட்பம் மிகவும் சரியான விசயம் என இப்போதுள்ள அறிவியல் கூறுகிறது.
மேலும் இயற்கை சீற்றத்தினால் விவசாயங்கள் அழிந்து போனாலும்.மீண்டும் விவசாயம் செய்ய தானியங்களை கோபுர கலத்திலிருந்து எடுத்து பயன்படுத்தலாம்.இந்த தானியங்களின் திறன் 12 வருடங்கள் வரை தாக்கு பிடிக்கக்கூடியது அதற்கு பிறகு தானியங்கள் தன் சக்தியை இழந்துவிடும் என்பதால் பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள்.
ஒரு கோபுரம் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்களை இடியிலிருந்து காப்பாற்றும்.மேலும் பிரபஞ்சத்தில் இருக்கும் நல்ல சக்திகளை மனிதனுக்கு பாய்ச்சக்கூடியது.
அதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்...,சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
Thursday, May 19, 2016
கோபுர கலசத்தின் ரகசியங்கள்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment