சமையலறை டிப்ஸ் !!!
1. மைக்ரோவ் ஒவனில் உட்புறப் பகுதியை சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஒவனில் 2 நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க பளிச்சென்று இருக்கும்.
2. பீட்ரூட் நறுக்கும்போது கைகளில் கறை ஒட்டுவதைத் தடுக்க பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேகவைத்துக்கொள்ளுங்கள். பின்பு தோலை எடுத்துவிட்டு துண்டுகளாக்கினால், கறை ஒட்டாமல் இருப்பதோடு, காய் நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.
3. அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக்கொண்டிருந்தால், டைல்ஸை சாதாரண துணியால் துடத்த பின் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்தால் ‘பளிச்’சென்று ஆகிவிடும்.
4. கேரட் அல்வா செய்யும்போது கேரட்டைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த தண்ணீரில் சிறிது நேரம் வைத்து தோலை சீவினால், மிகச் சுலபமாகத் தோலை நீக்கிவிடலாம்.
5. வடைக்கு அரைக்கும்போது மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால்,ஒரு தேக்கரண்டி நெய் விட்டால், மாவு இறுகிவிடும்.
6. பஞ்சு போன்ற இட்லிக்கு, கிரைண்டரில் உளுத்தம்பருப்பு பதி மசிந்ததும் ஏழெட்டு ஐஸ் கட்டிகளைப் போட்டு அரையுங்கள். மாவும் அதிகம் வரும். இட்லியும் பூப்போல மெத்தென்று இருக்கும்.
சாம்பாரை இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்கினால், கும்மென்று வாசனை தூக்கும்.
மோர்க் குழம்பு செய்யும்போது, சிறிதளவு ஓமத்தை அரைத்துவிட்டால், குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சினால், நெய் வாசனையாக இருப்பதோடு, நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.
வடை, பக்கோடா செய்யும்போது, ஒரு தேக்கரண்டி ரவை கலந்து செய்தால், பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும்.
இட்லிப்பொடி அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால்,சுவை கூடுதலாகும்.
ரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்று இருப்பதோடு, உடம்பிற்கு நல்லது.
எதிர்பாராமல் விருந்தாளி வந்துவிட்டால், பஜ்ஜி போட காய்கறி இல்லையே என்று கவலைப்படவேண்டாம். பஜ்ஜிக்கான மாவைத் தயாரித்து,அதில் தோலுடனான வறுத்த வேர்க்கடலையை தோய்த்து பஜ்ஜி போடலாம். இது சுலமான பஜ்ஜி. சுவையாகவும் இருக்கும்.
இரவில் பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாலில் 6 பூண்டுப் பற்களை போட்டுக்காய்ச்சி சாப்பிட்டால், கொலாஸ்ட்ரல் பிரச்சினையே வராது.
No comments:
Post a Comment