Thursday, May 19, 2016

உனது சிரிப்பு தியானத்தன்மையை       மலர செய்யும் - பகிர்வு

உனது சிரிப்பு தியானத்தன்மையை       மலர செய்யும் - பகிர்வு

எந்தக் சூழ்நிலையிலும் உன்னை பார்த்து சிரித்துக் கொள்ளும் பக்குவம் வந்தால் அதுவே நீ ஆன்மீகத்தில் ஆழத்தின் வெளிப்பாடு என்பதை நீ புரிந்து கொள்ளக்கூடும்

சிரிப்பு என்பது நீ ஒருவரை குறைகூறி - அடுத்தவரின் வீழ்ச்சியை பார்த்து  வரும் சிரிப்பை தாண்டி- உன் குறைகளை உனது குணங்களை பார்த்து ஆனந்தமாக சிரிக்க  இருக்கக் கற்றுக்கொள் - இந்த நிலையில் உயர்வு தாழ்வை கொண்ட குற்றஉணர்வு உன்னிடம் மறையத் தொடங்கும்.

அப்படி ஒரு மாற்றம் வரும் பொழுது உன்னை யார் புகழ்ந்தாலும் - இகழ்ந்தாலும், சலனம் ஏற்படுத்தினாலும்   அதர்க்கு அடித்தளத்தில் உள்ள அன்பின் வெளிப்பாடு சிரிப்பாக மலர செய்யும் 

இப்படி உள் நோக்கம் இல்லாத சிரிப்பில் உன் மனதை மறந்த நிலையில் நிகழ்கால  சந்தோஷத்தில் ஊரி நிற்க முடியும்

இந்த நோக்கம் இல்லாத சிரிப்பில் உனது இரட்டை தன்மை குணங்கள் மறைவதை உணர முடியும் அதாவது

விருப்பு - வெறுப்பு
கோபம் - அமைதி
நல்லது - கெட்டது
உயர்வு - தாழ்வு
இன்பம் - துன்பம்

என சொல்லி கொண்டே போகும் இரட்டை தன்மைகள் தாண்டி பேரின்ப மகிழ்ச்சியைக் உணர முடியும்

உனது குடும்பத்தில் காணும் ஒவ்வொரு சிரிப்பை கொண்டு வந்த அனுபவ உணர்வு - இந்த உணர்வில் குடும்பத்தில் ஒரு கோவில் என்ற (கவலைகள் என்ற சுமை கடந்த) நேசிப்பை காண முடிகிறது

உனது வீட்டில் காரணம் இல்லாத சிரிப்பை காண முடியும் எனில் நீ எந்த கோவிலுக்கு , ஆன்மீக அமைப்புக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது - உனது தியானத்தை நீ அங்கேயே ஆழமாக செய்ய முடியும்

இன்னும் உனது  உள் சிரிப்பை ஆழமாக உணர்ந்து அதில் மூழ்கும் பொழுது நீ உனக்கு உள்ளே கடவுள் தன்மையை
(இறை உணர்வை) காண முடியும்.

உள் சிரிப்பு பெருக பெருக உன்னிடம் இருந்து வெளியேரும் உனது அலைகள் வெளியே இருக்கும் மனித உணர்வுகளையும் அந்த சிரிப்பின் ஆழத்தை உணர்த்தும் - இதுவே  நீ சமுதாயத்துக்கு செய்யக்கூடிய மிக பெரிய சேவை

உனக்கு உள்ளே சிரிப்பு மலர பிடிப்புகள் அல்லது பற்று கடந்த தியானத்தன்மை மலர வேண்டும்.

தியானம் செய் உள் சிரிப்பு மலரும்

நன்றி
கரிகாலன்

No comments:

Post a Comment