மலர்கள் நிறமும் மணமும் நிறைந்தவை மட்டும் அல்ல. சில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும் உள்ளன.
இதோ அவ்வாறன மலர்களும் அதில் உள்ள குணங்களும் எவை என பார்ப்போம்.
செம்பருத்திப்பூ :
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்புவலியால் அவதிப்படுபவர்கள் செம்பருத்திப்பூக்களை தண்ணீரில் இட்டு காய்ச்சி காலையும் மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும். குழந்தைகளுக்கு இப்பூவை சிறிது சுடுநீரில் தலையில் தேய்த்துக் குளிப்பாட்டி வந்தால் தலையில் உள்ள அழுக்குகள் நீங்கி முடி நன்கு வளரும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.
ரோஜாப்பூ :
இருதயத்திற்கும், மனதிற்கும் வலிமை தரக்கூடியது. பசும் பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்துவந்தால் நெஞ்சில் சளி பிடிக்காது நீங்கிவிடும். இரத்தவிருத்திக்கும் துணைசெய்யும். சிவப்பு ரோஜாக்கள் மிகவும் உபயோகமானது.
மல்லிகைப்பூ :
தலையில் சூடிக்கொள்வதால் கண்பார்வை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. உணர்ச்சிகளைத்தூண்டும் ஆற்றலும் அதிகரிக்கும். கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.
அகத்திப்பூ :
அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலோடு சேர்த்து காய்ச்சி சக்கரை சிறிது சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு பித்த சூடு நீங்கும்.
முருங்கைப்பூ :
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கச்செய்து தாதுப்பெருக்கம் அடையச்செய்யும் தன்மையது. அதை சுண்டல் செய்து சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
குங்குமப்பூ :
கர்ப்பம் தரித்த பெண்கள் ஒருநேரம் 5 முதல் 10 வரை குங்குமப்பூ இதழ்களை இரவு பகல் பாலில் போட்டு காய்ச்சிக் குடித்து வர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.
வேப்பம்பூ :
சிறந்த கிருமி நாசினி இப்பூவாகும். இப்பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது. இப்பூவை சுண்டல் செய்து சாப்பிட வயிற்றில் உள்ள கெட்ட கிருமிகளை அழித்துவிடும். சிறிது கசப்புத்தன்மை கொண்ட இப்பூவை வடகம் போன்று செய்து வெயிலில் உலர்த்தி காயவைத்து நல்லெண்ணெய் நெய் இவற்றில் பொரித்து சாப்பிடுவதால் கற்பப்பை பூச்சிகள் கோளாறுகள் நீங்கி சிறந்தபலனை அடையலாம். சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது.
ஆவாராம்பூ :
இரத்தத்துக்கு மிகவும் பயன்தரும், ஆவாரம்பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால் ,சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்குமாவுடன் சேர்த்து உடலில் தேய்த்து குளித்து வர வியர்வையால் ஏற்படும் நாற்றம் நீங்கும். தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் குணமாகும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஆவாரம்பூ சிறிதளவு சிறு இஞ்சித்துண்டு, சிறுசீரகம் சிறிதளவு சேர்த்து அவற்றை கசாயம் போல் நீர்விட்டு காய்ச்சி குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.
வாழைப்பூ :
வாழவைக்கும் வாழைப்பூ மிகுந்தமருத்துவ குணம் கொண்டது. இதை சுத்தம் செய்து சுண்டல் செய்து சாப்பிடுவதால் மலச்சிக்கலை நீக்கிவிடும். அத்துடன் உடலின் தேவையற்ற கழிவுப்பொருள்களை அகற்றும் தன்மை இப்பூவுக்கு உண்டு. வாரத்தில் ஒருமுறையேனும் உணவாக உட்கொள்ளும் போது உணவு செரிமாணம் அடைவது மட்டுமல்லாது எமக்கு மேலதிகமாக தேங்கப்படும் சத்துக்கள் கல்லாகமாறிவிடுவதையும் வாழைப்பூ கட்டுப்படுத்தி கரைத்து விடுகிறது.
கல்லாகும் தன்மை அளவுக்கு அதிகமான உணவால் ஏற்படுகிறது. அது மனிதர்க்கு உடல் உபாதையை மட்டுமல்ல உயிர் ஆபத்தையும் ஏற்படுத்தும். மருந்தாகும் உணவுவககளை அதாவது இலை பூ வகைகள் அதிகம் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நீண்ட ஆயுளுடன் நலமோடு வாழலாம்
No comments:
Post a Comment