தனி ஒரு மனிதனின் மன நிர்வாகமே, அவனுடைய வாழ்க்கை நிர்வாகத்திற்க்கு அமைகிறது.
இதைத்தான், 'உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்' மற்றும் 'மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்', என்று நம் சான்றோர்கள் சொல்கிறார்கள்.
தனி மனிதனின் உண்மையான எதிரி வெளி உலகில் இல்லை. தனி மனிதனின் உண்மையான எதிரி உள் உலகில் உள்ளான். அது என்ன உள் உலகம் ? அதாவது, ஒருவனுடைய மனதில் எழும் முறையற்ற எண்ணங்களே.
உள்ளத்திலே களங்கம், உடலிலே நோய்.
ஒரு தனிமனிதனின் உயரிய வாழ்க்கை, தனிமனிதனின் கையில் தான் உள்ளது.
குறிப்பாக, தனி ஒரு மனிதனின் அர்த்தமுள்ள வாழ்க்கை, தனிமனிதனின் எண்ணத்தின் வழியில்தான் உள்ளது.
மனிதனின் மேல்நோக்கிய உயரிய சிந்தனை.....வாழ்க்கையில் வெற்றியைத் தேடித் தரும்.
மனிதனின் கீழ் நோக்கிய தாழ்வான சிந்தனை............... வாழ்க்கையில் தோல்வியைத் தழுவச் செய்யும்.
மேல் நோக்கிய உயரிய சிந்தனை -- வெற்றி
கீழ் நோக்கிய தாழ்வான சிந்தனை -- தோல்வி
மன நிர்வாகம் என்றால் என்ன ?
மனம் சொல்லும் படி ஐம்புலங்கள் இயங்க வேண்டும். ஆனால், சாதாரண மனிதனின் வாழ்க்கையில் ஐம்புலங்களின் சொல்லும்படிதான் மனம் இயங்குகிறது. விளைவு நேரத்தை சரியாக திட்டமிட்டபடி நிர்வகிக்க முடியவில்லை.
மனித ஐம்புலங்களின் நிர்வாகமே,
மனித மன நிர்வாகம் !
மனித மன நிர்வாகமே,
மனித நேர நிர்வாகம் !!
மனித நேர நிர்வாகமே
மனித வாழ்க்கை நிர்வாகம் !!!
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment