இந்தியாவின் 5000 வருடப் பாரம்பரியமிக்க யோகா உடல் மற்றும் உள்ளத்தை புத்துணர்வாக்குவது என்பதை சர்வதேச யோகா தினம் யோகாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் யோகாவைப் பற்றிய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம். தகுந்த ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் குறிப்பிட்ட ஆசனங்களை செய்துவந்தால் ஆண் பெண் தாம்பத்ய உறவு வலுப்பெறும் என்பது ஆச்சரியமான உண்மை.உடலுறவு சிறப்பாக அமைய சில முறைப்படுத்தப்பட்டயோகாசனங்கள் உள்ளன. மன அழுத்தம், புகை மற்றும் மதுப்பழக்கம், அதிக அளவு சர்க்கரை போன்றவை முழுதிருப்தியை தடுப்பவை. ஆனால் யோகா தொடர்ந்து செய்து வர, மனம் அமைதியடையும், உடலில் ரத்த ஓட்டம் சீராகும் அது உடலின் எல்லா பாகங்களும் பாய்ந்து உற்சாகத்தை ஏற்படுத்தும். இது உடலுறவில் ஈடுபடும் போதும்வெளிப்படும் என்கிறார் இந்தியாவின் முக்கியமான பாலியல் ஆய்வாளர் பிரகாஷ் கோத்தாரி.அவருடைய நோயாளிகளுக்கு அவர் பரிந்துரைப்பது இரண்டே ஆசனங்கள் தான். அவை சவாசனம் மற்றும் வஜ்ராசனம்.சவாசனம் செய்யும் போது உடலில் ரத்த அழுத்தம் சீராகும், பதற்றம் மற்றும் தூக்கமின்மை நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.வஜ்ராசனத்தைப் பொறுத்தவரை ஜீரண சக்தியை மேம்படுத்தும். அதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும் என்று விளக்கினார் கோத்தாரி. இவர் வொர்ல்ட் அசோசியஷன் ஆஃப் செக்ஷுவல் ஹெல்த் (WAS) நிறுவனர் மற்றும் ஆலோசகர்.புது தில்லியைச் சேர்ந்த யோகா நிபுணர் தீபக் ஜாசில ஆசனங்களைப் பரிந்துரைக்கிறார்.’பச்சிமோத்தாசனம், ஹலாசனம், புஜங்காசனம் போன்றவை ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கச் செய்வதுடன் அவர்களின் உறுப்புக்களை வலுவாக்கும்’ என்றார்.மொத்தத்தில் யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் உடல் மிகவும் வலிமைப் பெறுவதுடன் நீடத்த உடலுறவுக்கான உத்திரவாதமும் பெற முடியும் என்று சிறப்பு மருத்துவர்களும் யோகா நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.இக்கருத்தை மேலும் நிறுவ சமீபத்தில் 'ஜர்னல் ஆஃப் செக்ஷுவல் மெடிசன'் ஒரு ஆராய்ச்சியைத் தொடங்கியது. இருபது வயதிலிருந்து அறுபது வயது வரையிலான நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் 12 வார யோகா பயிலரங்கில் பங்கேற்றேனர்.பயிலரங்கின் முதல் மற்றும் இறுதி நாளில் அவர்களின் உடலுறவு திருப்தி பற்றிய விரிவான கேள்வித்தாள்கள் தரப்பட்டன. யோகா செய்வதற்கு முன் மற்றும் பயிலரங்கு முடிந்த பின் உள்ள மாற்றங்களையும் நுட்பமாக கேள்வி கேட்டிருந்தனர். அதில் கிட்டத்தட்ட அனைவருமே பயிற்சி வகுப்புகள் முடியும் தருவாயில் தங்களால் வெகு நேரம் உடலுறவில் திருப்தியுடன் ஈடுபட முடிந்தது என்று கருத்தைப் பதிவு செய்தனர்.படுக்கையறை வாழ்க்கை சிறக்க யோகாவுடன் பிரணாயாமமும் முக்கியம். முடிந்தால் கும்பகம் எனப்படும் மூச்சுப் பயிற்சியையும் தகுந்த குருமூலம் கற்றுக் கொண்டால் தாம்பத்ய உறவில் கவனம் குவிந்து மனம் மற்றும் உடலுக்கு அது மகிழ்ச்சியைத் தரும் என்கிறார் மனோதத்துவ நிபுணர் ஜோதி கபூர் மதன்.யோகா செய்வதன் மூலம் கிடைக்கும் மற்ற நல்ல அனுகூலங்களைக் கவனத்தில் கொள்வதுடன் படுக்கை அறையிலும் கூட பேருதவி செய்கிறது என்பது மிகையில்லாத உண்மை. யோக சாஸ்திரத்தை உலகிற்கு அளித்த இந்தியர்கள் உடலியல் விஞ்ஞானத்தில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார்கள்.
No comments:
Post a Comment