<3 தியானமே பாதை <3
வெகு பேர் என்னிடம் வந்து சொல்கிறார்கள்.நீங்கள் சொல்வதெல்லாம் எங்களுக்குப் புரிகிறது.ஆனால் எதுவும் நடப்பதைக் காணோம்.
நீங்கள் சொன்னதை எல்லாம் புரிந்து கொண்டோம்.
உங்களுடைய புத்தகங்களைப் பலமுறை படித்துப் பார்க்கிறோம்.
ஏறக்குறைய ஒவ்வொரு
வரிக்கும் அடிக்கோடிட்டு வைத்திருக்கிறோம்.
ஆனால் எதுவும் நடக்க வில்லையே.!?
வார்த்தை ஒரு மலரைப்போல.
பொருள் அதைச் சூழ்ந்திருக்கும் மணத்தைப்போல.
உன்னுடைய மூக்கு அடைத்துக் கொண்டிருந்தால் உனக்கு நான் ஒரு பூவைத் தர முடியும்.அதன் மணத்தைத் தரமுடியாது.
உனக்கு மலரைத்தர முடியும்.மணத்தை எப்படித் தருவது.?
உன்னுடைய மூக்கை நீதான் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். உணர்திறன் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும்.
அங்கேதான் தியானம் உதவி செய்கிறது.
உனக்குக் கூர் உணர்திறன் தருகிறது.
உன்னுடைய கவனம் கூடிவிடுகிறது.
--- ஓஷோ ---
No comments:
Post a Comment