அன்பர்களே
.
.
ஒரு வயதான ஞானி கண் பார்வையற்றவர்.
அவர் இருட்டு நேரத்தில் போகும் போது ஒரு கையில் கைத்தடியும்,
மற்றொரு கையில் விளக்கும் கொண்டு செல்வார். எல்லோருக்கும் ஒரே புதிராக இருக்கும். இதைப் பார்த்த ஒரு இளைஞனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
‘’ஐயா, என்ன உங்களுக்கு பைத்தியமா? கண்ணே தெரியாத உமக்கு விளக்கு ஒரு கேடா? ஒரு வேளை ஏதேனும் கொஞ்சம் தெரிந்துவிடும் என்ற நப்பாசையா?’’ என்றான்.
.
.
.
அந்தக் கிழவனார் அமைதியாக பதில் தந்தார்,
.
‘’அன்பரே, எனக்கு கண் தெரியாது என்பது உண்மையே. உம்மைப் போன்ற பார்வையுடையவர்கள் என் மீது தடுக்கி விழக் கூடாது அல்லவா?’’ என்றார்.
No comments:
Post a Comment