******#்#***********
#கேள்வி : கோவிலுக்குச் செல்வது நல்லதா , கெட்டதா.......???
#பதில் : நல்லது , கெட்டது , நம்பிக்கை எல்லாம் ஒரு தனி மனிதனைப் பொறுத்த விஷயம் .
என்னைப் பொறுத்தவரையில் சாதாரண மக்களுக்கு , இது பொய்யான ஆறுதல் தரும் கூடம்......!!!
மற்றபடி இதனால் எந்த நன்மையும் இல்லை .
ஆனால் பல பேர் இதை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள் .
பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள் .
உங்களால் , அந்த சிலையை ஒரு அன்பு உருவமாகப் பார்க்க முடிந்தால் , ( ராமகிருஷ்ணரைப் போல ) உங்களால் பக்தி யோகத்தில் முன்னேற முடியும் .
ஆனால் இப்படிப் பார்ப்பவர்கள் எத்தனை பேர்.....???
அந்த மனப்பக்குவம் யாரிடம் இருக்கிறது.......???
கோவிலுக்குப் போகும் 100 - க்கு 99 பேர்கள் , ' எனக்கு அது வேண்டும் , இது வேண்டும் ' என்று வேண்டிக் கொள்ளத்தான் போகிறார்கள் . அதாவது " வேண்டிக்கொள்ள.........!!!"
கைமாறாக , காசு போடுகிறேன் , தலை முடியைக் கொடுக்கிறேன் என்று வேறு வியாபாரம்........!!!
இதுதான் ஆன்மீகமா ?
ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் .
நீங்கள் வேண்டிக் கொள்ளுவது உங்களிடமேதான்.......!!!
அதாவது எதிரே உள்ள சிலையை முன்னிறுத்தி உங்கள் உயிர்த்தன்மையிடம் , உங்கள் தெய்வீகத்தன்மையிடம்தான் வேண்டிக் கொள்கிறீர்கள்.......!!!
அதுதான் உங்களுக்கு அருள் செய்கிறது . இதற்கு எதற்காக கோவிலுக்குப் போக வேண்டும்......??? "
No comments:
Post a Comment