நீங்கள் சொல்வதெல்லாம் எங்களுக்கு உண்மையாகத் தோன்றுகிறது. அப்படியிருக்க, பொதுமக்கள் ஏன் உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள்?
"அது உண்மையாகத் தோன்றுகிறது - அதனால்தான் அப்படி."
உண்மை பயங்கரமானது.அந்த மக்கள் எல்லாம் கற்பனைகளிலும், அழகான பொய்களிலும், இனிய கனவுகளிலும், உட்டோப்பியாக்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பதால் உண்மை அவர்களுக்கு பயங்கரமாகத் தோன்றுகிறது.
அந்த மக்கள், உண்மையை ஒரு விரோதியைப் போலப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.
ஏனென்றால், அது, அவர்கள் அதுவரை, எதை நம்பி, எதற்காக, வாழ்ந்து வந்திருக்கிறார்களோ, அதையெல்லாம் உடைத்துத் தகர்த்து விடுகிறது.
உண்மை, அவர்களுடைய பொய்களுக்கு மரணமாக இருக்கிறது.அந்தப் பொய்கள் எவ்வளவு ஆறுதல் தருவனவாக இருந்தாலும் கூட.
மக்களிடம் கனவுகளைத் தவிர வேறு எதுவும் இல்லை.
--ஓஷோ--
No comments:
Post a Comment