Monday, May 2, 2016

மாயை

மாயை
=====
"ஒரு முறை அர்ஜுனனும் கண்ணனும் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது,அர்ஜுனனுக்கும் இதே சந்தேகம். அவர் கண்ணனிடம், கண்ணா மாயை மாயை என்கிறார்களே அது என்ன என்று எனக்கு சொல்லக்கூடாதா? என்று கேட்க,சொல்கிறேன். எனக்கு தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல, அர்ஜுனனும் அருகில் ஆறு இருக்கும் இடத்துக்கு வேகமாக ஓடி,ஆற்றில் ஓடுகின்ற நீரை ஒரு சொம்பு மொண்டு நிமிர்ந்து பார்க்கும் போது அங்கு ஒரு அழகிய பெண் ஒருத்தியை பார்த்து, அவள் மேல் ஆசை கொண்டு, அவளிடம் பேசி, பழகி, காதலித்து, அவள் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு பிறகு குழந்தைகள் பல பெற்று, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி அவர்களுக்கு திருமணம் முடித்து, அந்த குழந்தைகளுக்கு குழந்தைகள் பிறந்து ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் வர எல்லோரும் ஆற்றில் அடித்துக்கொண்டு போக,அர்ஜுனன் இதை நினைத்து அழுதுக்கொண்டு இருக்க, கண்ணன் அவரை கூப்பிட்டு ஏன் தண்ணீர் கொண்டு வரவில்லை என்று கேட்டாராம். இப்பொழுது என்ன நடந்தது என்று கேட்க, இது தான் மாயை என்று கண்ணன் சொன்னாராம்". 

"இதுதான் மாயை, இந்த உலகம் நிஜம், உன் உறவுகள் நிஜம், இந்த உலகில் உள்ளது எல்லாம் உனக்கு சொந்தம் என்றும், நீ விரும்பியவை எல்லாம் உனக்கு சொந்தம் ஆக வேண்டும் என்று நினைக்கிறாயே அந்த ஆசைதான் மாயை, எல்லா இடத்திலும் உன் ஆளுமையை செலுத்த நினைக்கும் உன் ஆசை தான் மாயை".

No comments:

Post a Comment